Tag: Actor Karthi

• Karthi – Mari Selvaraj: மாரி செல்வராஜ் உடன் கைகோர்க்கும் கார்த்தி! ஷூட்டிங் எப்போது? வெளியான செம்ம தகவல்!

Karthi – Mari Selvaraj: மாரி செல்வராஜ் உடன் கைகோர்க்கும் கார்த்தி! ஷூட்டிங் எப்போது? வெளியான செம்ம தகவல்!

மாரி செல்வராஜ் கார்த்தி காம்போ:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான ‘ஜப்பான்’ திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் தனது அடுத்த படத்தை ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பிசியாக நடத்தி வருகிறார். இந்த நிலையில், கார்த்தியின் புதிய படம் குறித்த அப்டேட் கடந்த வாரம் வெளியானது.

தமிழ் சினிமாவில் சமூகநீதி பேசும் படங்களை இயக்குபவர்களில் முக்கியமானவர் மாரி செல்வராஜ். இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்த மாரி செல்வராஜ், 2018ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இப்படம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் படத்தை எடுத்தார்.  உண்மைச் சம்பவங்களை மையப்படுத்திய மாரி செல்வராஜின் படைப்புகள் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்துவது வழக்கமாகி விட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஷூட்டிங் எப்போது?

இதனைத் தொடர்ந்து வாழை என்ற படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார் மாரி செல்வராஜ். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, துருவ் விக்ரம் படத்தில் மாரி செல்வராஜ் கமிட் ஆகி உள்ளார். விளையாட்டை மையப்படுத்திய இப்படம் பற்றிய பேச்சு நீண்ட நாட்களாகவே இருது வரும் நிலையில், மாரி செல்வராஜ் இப்படத்தை விரைவில் இயக்க உள்ளார்.

இப்படத்தில் ஹீரோயினாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இப்படியான நிலையில், மார்ச் 7ஆம் தேதி மாரி செல்வராஜின் படம் குறித்த அப்டேட் வெளியானது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஒரு போஸ்டர் ஒன்று வெளியானது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் மாரி செல்வராஜ் படம்  இயக்குவதாகத் தகவல்கள் வெளியாகின.  இந்த நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் 2025ஆம் ஆண்டு தொடங்க உள்ளதாகவும், அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ஜப்பான் படத்திற்கு பிறகு, கார்த்தி தற்போது பிரேம் இயக்கத்திலும், நலன் குமரசாமி இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதில், பிரேம் இயக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டாக தெரிகிறது. தற்போது, நலன் குமரசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து ’கார்த்தி 28’ படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

• Nani got old Nazria teases needs a different voice Soori Goes to the Doctor Cinema Headlines | Cinema Headlines: நானியை கிண்டல் செய்த நஸ்ரியா! டாக்டரிடம் சென்ற சூரி

Nani got old Nazria teases needs a different voice Soori Goes to the Doctor Cinema Headlines | Cinema Headlines: நானியை கிண்டல் செய்த நஸ்ரியா! டாக்டரிடம் சென்ற சூரி

HBD Gautham Menon: மாஸ்..கிளாஸ்..ரொமான்ஸ் – கௌதம் மேனன் பிறந்தநாள் இன்று!
மின்னலே படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் வாசுதேவ் மேனன், தொடர்ந்து  காக்க காக்க, பச்சைக் கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் உள்ளிட்டப் படங்களின் வழியாக தமிழ் சினிமாவில் தனித்துவமான கதை சொல்லும் பாணியை உருவாக்கினார். இன்று தனது 51 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் கெளதம் மேனன்.மேலும் படிக்க
Chaya Sarathkumar: ஒரு நாள் கூத்து கிடையாது! திருமணம்னா என்னனு தெரியுமா? மனம் திறந்த சரத்குமார் முன்னாள் மனைவி
சரத்குமார் முன்னாள் மனைவி சாயா சரத்குமார் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் “திருமணம் செய்வதற்கு இது தான் சரியான வயது என குறிப்பிட்டு சொல்ல முடியாது. திருமணம் செய்து கொள்ள உடல் அளவிலும், மனதளவிலும், எமோஷனலாகவும் தயாராக இருக்க வேண்டும். பலரும் தப்பான ஒரு காரணத்திற்காக திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் எதற்காக நடக்கிறது என்பதே இங்கு பலருக்கும் தெரிவதில்லை. திருமணம் செய்து கொள்ள சரியான காரணம் ஒன்று இருக்க வேண்டும். அது ஒரு நாள் கூத்து அல்ல. திருமணம் என்பது ஒரு பயணம். அதில் சரியாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் படிக்க
Actor Nani: நானிக்கு வயசாயிடுச்சி.. கிண்டலாக போஸ்ட் போட்ட நடிகை நஸ்ரியா!
நானிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகை நஸ்ரியா அவருக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா நானி நடித்த ‘அண்டே சுந்தரனிகி’ படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார்  நஸ்ரியா, நானி  மற்றும் ஃபகத் ஃபாசில் ஆகிய மூவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு  நானிக்கு 40 வயது ஆகிவிட்டதை வைத்து அவரை கிண்டலித்து நஸ்ரியா இந்த பதிவை பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக ஷேர் செய்யப் பட்டு வருகிறது.மேலும் படிக்க
Brindha Sivakumar: கார்த்தி அண்ணா தான் ரொம்ப எமோஷனல்! திருமணம் குறித்து பிருந்தா சிவகுமார் பகிர்ந்த சுவாரஸ்யம்
சமீபத்தில் நடந்த நேர்காணலில் கலந்து கொண்ட பிருந்தா தன்னுடைய திருமணம் பற்றி  ஸ்வாரஸ்யமாக பேசி இருந்தார். கல்யாணம் முடிஞ்சு மாமியார் வீட்டுக்கு போகும் போது கார்த்தி அண்ணா தான் ரொம்ப பீல் பண்ணி அழுதாரு. பெரிய அண்ணா வந்து கொஞ்சம் அப்பா ஸ்தானத்தில் இருந்து கல்யாண வேலையில் எல்லாம் பிஸியா இருந்தாரு. அதனால் என்னை வழி அனுப்பும் போது கார்த்தி அண்ணா தான் என் கூட இருந்தாங்க. அதனால் அவங்க தான் ரொம்ப எமோஷனல் ஆனாங்க” என அந்த நேர்காணலில் நடிகர் கார்த்தி, தங்கையின் திருமணத்திற்கு பிறகு அதிகமாக எமோஷனலானது பற்றி பகிர்ந்து இருந்தார் பிருந்தா சிவகுமார். மேலும் படிக்க
Soori: வேறு குரல் வேண்டும்.. டாக்டரிடம் சென்ற சூரி – மருத்துவர் சொன்ன அறிவுரை
கொட்டுக்காளி படத்தில்  தனது குரலை வேண்டுமென்றே சேதப்படுத்திக் கொண்டதாக நடிகர் சூரி கூறியுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் கூறுகையில் “ கொட்டுக்காளி படத்தில் ஒரு காட்சியில் என் குரல் கட்டியதைப் போல் இருக்க வேண்டும் என்று இயக்குநர் கேட்டார். அது ஒரு பெரிய டேக் என்பதால் ரீடேக் போவது கஷ்டம். இதனால் நானே ஒரு ஐடியா பன்னினேன். டாக்டரிடம் சென்று என்னுடைய குரலை கொஞ்சமாக கட்டியதுபோல் சேதப்படுத்த ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? என்று நான் கேட்டேன். இதை கேட்ட மருத்துவர் சிரித்துவிட்டார்.மேலும் படிக்க

மேலும் காண

Source link

• Actors Suriya and Karthi paying homage to his fans death | Suriya – Karthi: உயிரிழந்த ரசிகர்கள்.. நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன சூர்யா

Actors Suriya and Karthi paying homage to his fans death | Suriya – Karthi: உயிரிழந்த ரசிகர்கள்.. நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன சூர்யா

தங்களது ரசிகர்கள் மறைந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு சூர்யா, கார்த்தி இருவரும் நேரில் சென்று ஆறுதல் சொன்ன சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக திரையுலகம் சார்ந்த பிரபலங்களுக்கு வயது வித்தியாசம் இல்லாமல் ரசிகர்கள் உள்ளனர். பெரும்பாலான பிரபலங்கள் தங்கள் ரசிகர்களின் இல்லங்களில் நடைபெறும் சுக நிகழ்வுகளுக்கு உதவிகளையும், துக்க நிகழ்வுகளுக்கு ஆறுதலையும் தெரிவித்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் சூர்யா, கார்த்தி இருவரும் செய்த சம்பவம் ஒன்று பாராட்டைப் பெற்றுள்ளது.
நடிகர் கார்த்தி ரசிகர் மன்றத்தின் சிவகங்கை மாவட்ட செயலாளர் NGO பாபு உடல் நலம் சரியில்லாமல் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி காலமானார். இதனையறிந்த கார்த்தி சில தினங்களுக்கு முன் நேரில் சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பாபு படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

💐🙏! #Suriya Payed his Last Respect to Villupuram SFC District Headpic.twitter.com/cVNPPoCo3T
— Smugler Deva 2.0 (@Vanangaanoffll) February 12, 2024

அதேபோல் நடிகர் சூர்யாவின் நற்பணி இயக்கத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் மணிகண்டன்  கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி சாலை விபத்தில் இறந்தார். அவரின் மறைவுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த இரண்டு சம்பவங்களும் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துக்க நிகழ்வுகளில் தங்களுக்கு ஆறுதலாக இருந்த இருவருக்கும் ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சூர்யா- கார்த்தி திரைப்பயணம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா அடுத்ததாக சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் 10க்கு மேற்பட்ட மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் 13 விதமான கேரக்டரில் சூர்யா நடிக்கிறார். கங்குவா படத்தின் மூலம் திஷா பதானி ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகிறார். இப்படம் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வாடிவாசல், புறநானூறு உள்ளிட்ட படங்களில் சூர்யா நடிக்கவுள்ளார்.
இதேபோல் நடிகர் கார்த்தி கடைசியாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் அவரின் 25வது படமாக வெளியாகி படுதோல்வி அடைந்தது. இப்படியான நிலையில் அவர் அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

மேலும் காண

Source link

• Train-யே நிறுத்தி சாப்பாடு போட்டவர் | Vijayakanth

Train-யே நிறுத்தி சாப்பாடு போட்டவர் | Vijayakanth

Train-யே நிறுத்தி சாப்பாடு போட்டவர் | Vijayakanth

Source link