Tag: 12B

  • 12b movie harris jayaraj music speciality behind the punnagai poove song

    12b movie harris jayaraj music speciality behind the punnagai poove song


    இசை பிரியர்கள் அனைவருக்கும் திரை இசை பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். திரைப்பட பாடல்களை கேட்டு ரசிப்பவர்கள் பெரும்பாலானோர் என்றாலும் அதை விஷுவலாக பார்த்து ரசிப்பவர்கள் ஏராளம். அதற்காகவே பல திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு பாடலுக்காக பல மெனெக்கெடல்களை எடுத்து அந்த பாடலுக்கு மேலும் அழகு சேர்க்கிறார்கள்.
    ஒரு புன்னகை பூவே:படத்திற்காக பயன்படுத்தப்படும் பட்ஜெட்டை காட்டிலும் ஒரே பாடலுக்கு பல லொகேஷன்களில் ஷூட்டிங் செய்து பார்வையாளர்களை வியக்க வைப்பார்கள். ஒரு சிலரோ ஏராளமான வேரியேஷன்கள் பாடல்களில் கொண்டு வருகிறார்கள். ஒரு சிலர் அதை கவனித்து இருந்தாலும் பெரும்பாலானோர் அதை ரசிக்க மட்டுமே செய்வார்கள் தவிர அந்த காட்சியின் பின்னணியில் இருக்கும் அர்த்தத்தை புரிந்து பார்ப்பவர்கள் வெகு சிலரே. அப்படி ஒரு மெனக்கெடலுடன் எடுக்கப்பட்ட பாடல் தான் 12பி படத்தில் இடம்பெற்ற ‘ஒரு புன்னகை பூவே…’ பாடல். திரையில் நாம் பார்த்த காட்சிக்கு பின்னணியில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்ற சுவாரஸ்யமான தகவல் உங்களுக்காக…
     

    படமாக்கியது எப்படி?2001ம் ஆண்டு ஜீவா இயக்கத்தில் ஷ்யாம், சிம்ரன், ஜோதிகா, விவேக் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் ரொமான்டிக் திரைப்படம் 12பி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற  லவ் பண்ணு, சரியா தவறா, முத்தம் முத்தம் முத்தம்மா, பூவே வாய் பேசும் போது, ஜோதி நெறஞ்சவ, ஒரு பார்வை பார், ஓ நெஞ்சே என அனைத்து பாடல்களுமே இன்று வரை அனைவரின் பிளே லிஸ்ட்களிலும் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாடல்கள். 
    “ஒரு புன்னகை பூவே… சிறு பூக்களின் தீவே…” என்ற பாடலை கே கே மற்றும் பிரசாந்தினி பாடி இருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வைரமுத்துவின் வரிகளில் இந்த பாடலை கேட்கவே மிகவும் அற்புதமாக  இருக்கும். இந்த பாடலின் மேக்கிங் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என இயக்குநர் ஜீவாவும், டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரமும் யோசித்த போது அவர்களுக்கு ஒரு ஐடியா கிடைத்துள்ளது. 
    சம்மர் சீசன், மழைக்காலம், இலையுதிர் காலம், ஸ்னோ சீசன் என நான்கு சீசனும் இடம் பெரும் வகையில் இந்த பாடல் அமைக்கப்பட்டு இருக்கும். ஒரு பாடலுக்காக இவ்வளவு மெனெக்கெட்டு எடுத்து இருக்கிறார்களா? என தோன்றும். இது எத்தனை பேர் கவனித்து இருப்பார்கள் என்பது தெரியாது என்றாலும் ஒரு பாடலுக்காக அவர்கள் எடுத்த இந்த மெனக்கெடல் பாராட்டிற்குரியது. இதே போல பல திரைப்படங்களிலும் பல பாடல்களின் பின்னணியிலும் ஏதாவது மறைந்து இருக்கும் ஸ்பெஷாலிட்டி இருக்கும். அவற்றை உற்று நோக்கும் போது தான் தெரியவரும். 

    மேலும் காண

    Source link