Tag: விராத் கோலி

  • Anushka Sharma and Virat Kohli son akaay name has a special meaning know the details | Akaay: “அகாய்” என்றால் இதுதான் அர்த்தம்: அனுஷ்கா

    Anushka Sharma and Virat Kohli son akaay name has a special meaning know the details | Akaay: “அகாய்” என்றால் இதுதான் அர்த்தம்: அனுஷ்கா


    விராட் கோலி – அனுஷ்கா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், தங்கள் குழந்தைக்கு ‘அகாய்’ (Akaay) எனப் பெயரிட்டுள்ளனர்.
    விருஷ்கா ஜோடி
    கிரிக்கெட் மற்றும் பாலிவுட் உலக ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு கொண்டாடப்படும் ஜோடி என்றால் அது விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா ஜோடி தான். 2013ஆம் ஆண்டு இருவரும் இணைந்து ஒரு விளம்பரப் படத்தில் நடித்தது தொடங்கி, டேட்டிங், காதல் என சில ஆண்டுகள் மீடியா வெளிச்சத்தைக் கவர்ந்து காதல் பறவைகளாக வலம் வந்த இந்த ஜோடி, 2017ஆம் ஆண்டு இத்தாலியில் கோலாகலமாகத் திருமணம் செய்துகொண்டனர். 
    தொடர்ந்து 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது அனுஷ்கா கருவுற்றதை மகிழ்ச்சியுடன் கோலி அறிவித்த நிலையில், இருவரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தைக்கு பெற்றோராகினார். தங்கள் குழந்தைக்கு இந்து கடவுளான துர்காவின் பெயரான ‘வாமிகா’வை தங்கள் குழந்தைக்கு பெயராக சூட்டினர்.
    இரண்டாவது குழந்தை
    இந்நிலையில், தற்போது தங்கள் பெண் குழந்தைக்கு 3 வயது நிரம்பியுள்ள நிலையில், விராட் – அனுஷ்கா தம்பதி ஆண் குழந்தைக்கு  சமீபத்தில் பெற்றோராகியுள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவித்த விராட் – அனுஷ்கா ஜோடி, தாங்கள் கடந்த பிப்.15ஆம் தேதி ஆண் குழந்தைக்கு பெற்றோரானதாகவும், அகாய் எனும் வாமிகாவின் குட்டித் தம்பியை வரவேற்றுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தனர்.
     

    அகாய் என்றால் என்ன?
    இந்நிலையில் விராட் – அனுஷ்காவின் மகனின் வித்தியாசமான இந்தப் பெயருக்கான அர்த்தம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    அதன்படி அகாய் என்பது துருக்கியில் இருந்து தோன்றிய இந்தி வார்த்தை என்றும், இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் உடலை விட மேலானவன், அழிவில்லாதவன் என அர்த்தம் எனவும் கூறப்படுகிறது. மேலும் அகாய் என்றால் துருக்கியில் பிரகாசமான நிலா என்றும் பொருள்படுகிறது. இந்நிலையில் விராட் – அனுஷ்காவின் குழந்தைகள் பெயருக்கான அர்த்தம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
     

    மேலும் காண

    Source link

  • Virat Kohli Blessed Baby Boy: இதுதான் காரணமா..! பிறந்த குட்டி ”கோலி”.. இன்ஸ்டாவில் சூப்பராக சொன்ன விராட்

    Virat Kohli Blessed Baby Boy: இதுதான் காரணமா..! பிறந்த குட்டி ”கோலி”.. இன்ஸ்டாவில் சூப்பராக சொன்ன விராட்

    விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர். 
    விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் கடந்த பிப்ரவரி 15ம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ மிகவும் மகிழ்ச்சியுடனும், எங்கள் இதயங்களின் அன்புடனும் கடந்த பிப்ரவரி 15ம் தேதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது என அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் ஆண் குழந்தைக்கு ஆகாய் என வாமிகாவின் குட்டி சகோதரனை இந்த உலகிற்கு வரவேற்கிறோம்!

    எங்கள் வாழ்வின் இந்த அழகான நேரத்தில் உங்கள் ஆசிகளையும், நல்வாழ்த்துகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த நேரத்தில் எங்களது நேரத்தை எங்களுக்காக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என பதிவிட்டிருந்தார். 
    இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 4வது போட்டி வருகின்ற பிப்ரவரி 23ம் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, தனிப்பட்ட காரணங்களால் தன்னை அணியில் இருந்து ஓய்வு அளிக்க வேண்டும் என விராட் கோலி பிசிசிஐ மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கோரிக்கை வைத்திருந்தார். 
    விராட் கோலியின் இந்த கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ அவருக்கு விருப்ப விடுப்பு அளித்திருந்தது. இந்தநிலையில், விராட் கோலி விலகியதற்கான காரணம் என்ன என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். அதன்பிறகு, விராட் கோலி அம்மாவின் உடல்நிலை, விராட் கோலி – அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை என பல்வேறு யூகங்கள் கிளம்பியது. 
    இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக, இன்று விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதியினர் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, தற்போது விராட் கோலி – அனுஷ்கா சர்மாவின் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 
     

    Source link