Vinoj P Selvam: கருணாநிதி ஏரியாவில் இருக்கும் கோபாலபுரம் மைதானம்.. குரல் கொடுத்த பாஜக நிர்வாகி! என்ன சம்பவம்?
<p>கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்த பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம், மீண்டும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்யும் இடமாக அதனை மாற்றித் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். </p> <p>சென்னை கோபாலபுரத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில் தினமும் குறைந்தது 100 பேர் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகிறார்கள். அதுவும் சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை பல மடங்காக இருக்கும்.</p> <p>பல்வேறு பகுதிகளில் இருந்து வரும்…
