விளவங்கோடு இடைத்தேர்தல்; விழுப்புரத்தில் இருந்து அனுப்பப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்
<p style="text-align: justify;"><strong>விழுப்புரம்:</strong> நாடாளுமன்ற தேர்தலுடன் விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளதால் இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் விழுப்புரத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.</p> <p style="text-align: justify;">நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளதால் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align:…
