ஐசிசி நடத்தும் 19 வயதுக்குட்பட்டவருக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றது. இதில் லீக் போட்டியில் இந்தியாவும் வங்காள தேச அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

இந்திய அணியின் இன்னிங்ஸை அர்ஷத் சிங் மற்றும் அர்ஷன் குல்கர்னி ஆகியோர் தொடங்கினர். இதில் குல்கர்னி 17 பந்துகளில் 7 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த முஷீர் கானும் 3 ரன்களில் வெளியேற இந்திய அணி 31 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் வந்த கேப்டன் உதய் ஷகாரன் தொடக்க வீரர அர்ஷத் சிங்குடன் இணைந்து சரிவில் இருந்த இந்திய அணியை மீட்டார். இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் குவித்த பின்னர் அர்ஷத் சிங் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அர்ஷத் சிங் 96 பந்துகளில் 6 பவுண்டரி விளாசி 76 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.

அதன் பின்னர் வந்த பிரயான்ஷு மோலியா ஆரவல்லி அவினாஷ் ஆகியோர் தலா 23 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதற்கிடையில் கேப்டன் உதய் ஷகாரன் தனது விக்கெட்டினை 94 பந்துகளில் 4 பவுண்டரிகள் விளாசி 64 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த சச்சின் தாஸ் 26 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டினை இழந்து இறுதி வரை களத்தில் இருந்தார். இதற்கடுத்து வந்த முருகன் அபிஷேக் அதிரடியாக ஆட முயற்சி செய்து தனது விக்கெட்டினை இழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் சேர்த்தது. வங்கதேச அணி சார்பில் மருஃப் மிர்தா 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அதன் பின்னர் 252 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் சொதப்ப, 50 ரன்களுக்குள் வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. முகமது ஷிகாப் மட்டும் பொறுப்பாக ஆடி அரைசதம் விளாசி வங்கதேச அணிக்கு நம்பிக்கை அளித்தார். முகமது ஷிகாப் தனது விக்கெட்டினை இழந்த பின்னர் வங்கதேச அணி வீரர்கள் தங்களது விக்கெட்டினை சொற்ப ரன்களுக்கு இழந்து வெளியேறினர். வங்கதேச அணி வீரர்களில் மூன்று பேர் டக் அவுட் ஆனார்கள். இதுமட்டும் இல்லாமல், மூன்று வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். இறுதியில் வங்கதேச அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ஷவும் பாண்டே 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். முஷீர் கான் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்றது. குரூப் ஏவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Tag: வங்கதேசம்

ICC U19 WC: வெற்றியுடன் தொடங்கிய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணி; வங்கதேசத்தை புரட்டி எடுத்து அபாரம்

வங்கதேச தேர்தல்: ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி.. மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா

வங்கதேசத்தின் அரசியல் சூழல் என்பது இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இன்று நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியது. இப்படிப்பட்ட சூழலில், வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினரின் வன்முறைக்கு மத்தியில் இன்று தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

வங்கதேச பொதுத் தேர்தல்:

வாக்குப்பதிவை தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆளும் அவாமி லீக் கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். இதனால், வங்கதேசத்தின் பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளார் ஷேக் ஹசீனா. கோபால்கஞ்ச்-3 தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோபால்கஞ்ச்-3 தொகுதியில் எட்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது. முழுமையான முடிவுகள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் முதற்கட்ட மதிப்பீட்டின்படி, 40 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தாலும், இறுதி எண்ணிக்கைக்குப் பிறகு பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மாறலாம். கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் 80 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்தமுறை, பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, ஒரு நடுநிலையான இடைக்கால அரசை நிறுவிய பிறகே தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், இந்த கோரிக்கையை ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு நிராகரித்தது. இதனை கண்டித்து முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

வன்முறைக்கு இடையே நடந்த தேர்தல்:

அதோடு, இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறி கலீதா வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எதிர்க்கட்சி தலைவரின் கைதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிட்டகாங், காசிபூர் நகரில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்த 5 பள்ளிகளுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். அதோடு, இந்திய எல்லையான பெனாபோலில் இருந்து சென்ற பெனாபோல் விரைவு ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 4 பேர் உடல் கருகி பலியாகினர்.

இந்த சம்பவத்திற்கு தீவிரவாதிகள் காரணமா? அல்லது எதிர்க்கட்சியின் வன்முறையால் ஏற்பட்டதா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள தீயணைப்பு சேவை புள்ளிவிவரங்கள்படி, நாட்டில் 16 மணி நேரத்தில் 14-க்கும் மேற்பட்ட தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இதனால் வங்கதேசத்தின் முக்கிய நகரங்கள் கலவர பூமியாக காட்சியளிக்கின்றன.

இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செயலி செயலிழந்து இருப்பது வாக்காளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடைபெறும் நாளில் வாக்காளர்கள் அன்றைய தினம் முதல் தாங்கள் வாக்களிக்கும் மையங்களைக் கண்டறிவது உள்ளிட்ட விவரங்களைக் கண்டறிய வாக்காளர்களுக்காக தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்திய Tk21 கோடி செயலி செயலிழந்தது.

India A Trusted Friend During War Thery Supported Us’ – Sheikh Hasina Message To India Amid Bangladesh Polls | Bangladesh Poll: சுந்தந்திர போரின்போது இந்தியா தான் எங்களுக்கு ஆதரவளித்தது
Bangladesh Poll: இந்தியா தங்களுக்கு நம்பகமான நண்பர் என, தேர்தல் நடைபெறும், வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
வங்கதேச நாடாளுமன்ற பொதுத்தேர்தல்:
வன்முறை மற்றும் கலவரங்களுக்கு மத்தியில் வங்கதேசத்திற்கான நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி என்பதே இன்றி நடைபெறும் இந்த தேர்தலில், ஷேக் ஹசினா தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றும் மீண்டும் பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான், இந்தியாவை பாராட்டி பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.
#WATCH | Dhaka: In her message to India, Bangladesh Prime Minister Sheikh Hasina says, ”You are most welcome. We are very lucky…India is our trusted friend. During our liberation war, they supported us…After 1975, when we lost our whole family…they gave us shelter. So our… pic.twitter.com/3Z0NC5BVeD
— ANI (@ANI) January 7, 2024”இந்தியா எங்களது நம்பகமான நண்பன்”
இந்தியா தொடர்பாக பேசியுள்ள ஷேக் ஹசீனா, “இந்தியா போன்ற ஒரு அண்டை நாட்டைப் பெற்று இருப்பது வங்கதேசத்தின் அதிர்ஷ்டம். இந்தியா எங்களது நம்பகமான நண்பர். விடுதலை போராட்டத்தின் போது இந்தியா தான் எங்களுக்கு ஆதரவாக இருந்தது. 1975 க்குப் பிறகு, நாங்கள் எங்கள் முழு குடும்பத்தையும் இழந்தபோது, அவர்கள் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். இந்திய மக்களுக்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
இந்தியா – வங்கதேச உறவு:
1971ம் ஆண்டு பாகிஸ்தான் வங்கதேசத்தை ஆக்கிரமித்தபோது, அதனை விடுவிப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றியதில் இருந்தே இருநாடுகளுக்கு இடையேயான உறவு மிகவும் வலிமையானதாக உள்ளது. இந்தியாவும், வங்கதேசமும் வரலாற்று, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளால் குறிக்கப்பட்ட நெருக்கமான மற்றும் பன்முக உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. பிரதமர் மோடி பங்கேற்ற பிறகு இருநாடுகளுக்கு இடையேயான உறவானது சமீப காலங்களில் மேலும் வலுப்பெற்றுள்ளது. ஹசீனாவும் பிரதமர் நரேந்திர மோடியும் அடிக்கடி நடத்திய சந்திப்புகள் மற்றும் இணைப்புத் திட்டங்கள் மூலம், வர்த்தக தாராளமயமாக்கல் மற்றும் எல்லை மேலாண்மை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது.
வங்கதேசம் ஒரு காலத்தில் வறுமையில் வாடி வந்த நிலையில், விதிவிலக்கான பொருளாதார வளர்ச்சிக்காக ஹசீனாவை நிபுணர்கள் பாராட்டுகின்றனர். அதேநேரம், அவரது அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மீது இரக்கமற்ற ஒடுக்குமுறையை நடத்துவதாக குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. இந்த சூழலில் தற்போதைய தேர்தலிலும் ஷேக் ஹசினா வெற்றி பெற்றால், அவர் 4 முறையாக பிரதமராவார். அவரது கட்சிக்கு ஒட்டுமொத்தமாக இது நான்காவது வெற்றியாகும்.