Tag: ராஷ்மிகா

  • Cinema Headlines today april 13th today Tamil cinema news vijay the greatest of all time goat bhavana mamitha baiju

    Cinema Headlines today april 13th today Tamil cinema news vijay the greatest of all time goat bhavana mamitha baiju


    நாளை சம்பவம்.. வெறித்தனமான அப்டேட் கொடுத்த VP … கோட் படத்தின் முதல் பாடல் நாளை ரிலீஸ்
    நாளை தமிழ் புத்தாண்டை நாளில் தி கோட் படத்தின் அப்டேட் வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.  பிரஷாந்த், பிரபுதேவா, லைலா , சினேகா, மோகன், பிரேம்ஜி, வைபவ் எனப் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். யுவன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது தி கோட் படத்தின் முதல் பாடல் நாளை தமிழ் புத்தாண்டு நாளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
    ஷூ திருடிய டெலிவரி பாய்க்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சோனு சூட் – குவியும் கண்டனங்கள்
    இந்தி,  தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து இந்தியத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சோனு சூட். எனினும் தன் நடிப்பைத் தாண்டி கொரோனா பெருந்தொற்று காலம் தொடங்கி தன் உதவிப் பணிகளுக்காக சோனு சூட் பெரிதும் அறியப்பட்டு வருகிறார். இந்நிலையில் இணையத்தில் வைரலான ஷூ திருடிய நபருக்கு ஆதரவாக சோனு சூட் தற்போது பதிவிட்டுள்ளது கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
    விஜய் கட்டிய சாய்பாபா கோயிலில் தரிசனம்.. ஷோபா சந்திரசேகர் பற்றி ராகவா லாரன்ஸ் பகிர்ந்த தகவல்!
     நடிகர் விஜய் தன் தாய் ஷோபா சந்திரசேகருக்காக கட்டிக் கொடுத்துள்ள சாய்பாபா கோயிலுக்குச் சென்று நடிகர் ராகவா லாரன்ஸ் தரிசனம் செய்துள்ளார். சென்னை, கொரட்டூரில், 8 கிரவுண்ட் நிலத்தில் நடிகர் விஜய் தன் அம்மாவுக்காக சாய்பாபா கோயிலைக் கட்டிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த சாய்பாபா கோயிலை நடிகர் விஜய்யின் தாய் ஷோபாவுடன் சென்று பார்வையிட்டு வீடியோ பகிர்ந்துள்ளார்.
    என்னைவிட அழகான பெண்கள் இருக்கிறார்கள்… தன்னடகத்தோடு பதில் சொன்ன ராஷ்மிகா மந்தனா
    தன்னைவிட எத்தனையோ அழகான, திறமையான பெண்கள் இருந்தும் இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பதாக நடிகை ராஷ்மிகா மந்தனா மனம் திறந்து பேசியுள்ளார். கன்னட சினிமா  தொடங்கி, தெலுங்கு, இந்தி எனப் பயணித்து இந்திய சினிமாவில் நேஷனல் க்ரஷ் எனும் அடைமொழியுடன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. பாக்ஸ் ஆஃபிஸிலும் இவரது திரைப்படங்கள் வசூல் சாதனை படைத்து வருகின்றன. இந்நிலையில் திரையுலகில் தன்னுடைய இடம், தனக்கு கிடைத்துள்ள வாய்ப்பு ஆகியவை பற்றி ராஷ்மிகா தற்போது பேசியுள்ளார்.
    பாலாவுடன் பணியாற்றியது பாக்கியம்.. நிறைவடைந்த வணங்கான் ஷூட்டிங்: அருண் விஜய் நெகிழ்ச்சி!
    பாலா -அருண் விஜய் காம்போவில் உருவாகி வந்த வணங்கான் திரைப்படத்தின் ஷூட்டிங் நேற்று நிறைவடைந்தது. சூர்யா நடிக்கவிருந்து பின் அருண் விஜய்க்கு இந்த வாய்ப்பு வந்து, பல சர்ச்சைகளைக் கடந்து தற்போது வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ள திரைப்படம் வணங்கான். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
     

    மேலும் காண

    Source link

  • Cinema Headlines today april 5th today Tamil cinema news Meera Jasmine Mrunal Thakur Rashmika Mandanna

    Cinema Headlines today april 5th today Tamil cinema news Meera Jasmine Mrunal Thakur Rashmika Mandanna


    இன்று ராஷ்மிகாவுக்கு பிறந்தநாள்.. 28 வயதில் அவரின் சொத்து மதிப்பு இவ்வளவா?
    நேஷனல் க்ரஷ் எனக் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா இன்று தன் 28ஆவது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார். கன்னட சினிமாவில் தன் நடிப்பு பயணத்தைத் தொடங்கி, டோலிவுட், பாலிவுட் எனப் பயணித்து நாடு முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார் ராஷ்மிகா. இந்நிலையில், 28 வயதான ராஷ்மிகா மந்தனாவுக்கு ரூ.45 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நடிகை மீரா ஜாஸ்மின் தந்தை திடீர் உயிரிழப்பு.. சோகத்தில் திரையுலகினர், ரசிகர்கள்
    2001ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு என நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகை மீரா ஜாஸ்மின். தமிழில் இயக்குநர் லிங்குசாமியின் ரன் படத்தில் அறிமுகமாகி, பாலா, புதிய கீதை, சண்டக்கோழி என பல திரைப்படங்களில் நடித்து 2000களின் மத்தியில் டாப் நடிகையாக வலம் வந்தார். நேற்று இவரது தந்தை ஜோசப் பிலிப் உடல்நலக் குறைவால் காலமானார்.
    அப்பாவை விட வயதில் மூத்தவரு செய்ற விஷயமா இது.. பிரபல நடிகைக்கு நேர்ந்த கதி
    பிக்பாஸ் போட்டியாளரான ஆயிஷா கான் தன்னுடைய இளம் வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17ஆவது சீசனில் போட்டியாளர்களராகக் கலந்துகொண்டு கவனமீர்த்தவர் நடிகை ஆயிஷா கான். இவர் திரைத்துறையில் தான் எதிர்கொண்ட விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்து மனம் திறந்துள்ளார்.
    மான் கராத்தே இயக்குநருடன் கைகோர்த்த அருண் விஜய்.. பிரமாண்டமாக உருவாகும் படம்!
    மான் கராத்தே படத்தை இயக்கிய கிரிஷ் திருக்குமரனுடன் அருண் விஜய் இணைந்துள்ள திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார். சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன் ஆகிய நடிகைகள் நடிக்க, இப்படம் பிரம்மாண்ட அதிரடி சண்டைக் காட்சிகளுடன், பரபரப்பான ஆக்சன் திரில்லர் படமாக உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
    தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் தி கேரளா ஸ்டோரி படம்.. கேரள முதல்வர் கடும் கண்டனம்
    சென்ற ஆண்டு இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியாகி இந்தியில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. நடிகைகள் அதா ஷர்மா, சித்தி இத்னானி, தேவதர்ஷினி, பிரணவ்  மிஷ்ரா, சோனியா பாலனி உள்ளிட்ட பலர் நடித்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக விளம்பரப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வெளியான இப்படத்தில் கேரளாவில் நடைபெறும் லவ் ஜிஹாத், இந்து, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்கள் இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்யப்பட்டு அரபு நாடுகளுக்கு அனுப்பப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், கடும் விமர்சனங்களை இப்படம் பெற்றது.
     

    மேலும் காண

    Source link

  • Actor Rashmika Mandanna Deepfake Creator Arrested In Delhi

    Actor Rashmika Mandanna Deepfake Creator Arrested In Delhi

    Rashmika Mandanna Deep Fake Video: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியிட்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
    ராஷ்மிகா மந்தனா:
    தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, பாலிவுட்டிலும் அறிமுகமாகி ஒரு பான் இந்திய நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ‘கீதா கோவிந்தம்’ படம் மூலம் இளைய தலைமுறையினரின் ஃபேவரைட் நடிகையான ராஷ்மிகா, ‘சுல்தான்’ திரைப்படத்தில் நடிகர் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 
    கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ‘வாரிசு’ படத்தில் இளைய தளபதி விஜய் ஜோடியாக இணைந்தார் ராஷ்மிகா. தென்னிந்திய லெவெலில் கொண்டாடப்பட்டு வந்த ராஷ்மிகா மந்தனா பாலிவுட் பக்கம் என்ட்ரி கொடுத்து நடிகர் அமிதாப்பச்சன்  மகளாக ‘குட் பை’ படத்திலும் ‘அனிமல்’ படத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாகவும் நடித்து பட்டையை கிளப்பினார். 
    டீப் ஃபேக் வீடியோ:
    இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறைகுறை ஆடையுடன் ராஷ்மிகா மந்தனா இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.  ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
    ஆனால், இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ வளர்ந்து வரும் AI செயற்கை நுண்ணறிவு மூலம் மார்ஃபிங் செய்யப்பட்டது என்றும், ஒரிஜினல் வீடியோவில் நடிகை ஷாரா படேல் இருப்பதாகவும், அதை மாற்றி ராஷ்மிகாவின் முகத்தை தொழில்நுட்பம் மூலம் பொருத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது.
     ராஷ்மிகா போல் சித்தரிக்கப்பட்ட வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டது. இந்த வீடியோவுக்கு திரை பிரபலங்கள் உட்பட பலரும் கண்டனங்களையும் தெரிவித்தனர். மேலும், ராஷ்மிகாவும், ”இன்று இந்த அளவுக்கு தொழில்நுட்ப பயன்படுத்தப்படுவதை பார்த்தால் அச்சமாக உள்ளது” என்று வேதனை தெரிவித்தார். 
    கைது:
    இதனை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வீடியோ வெளியிட்ட நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தான் சம்பவம் தொடர்பாக ஆந்திராவில் ஒருவரை டெல்லி போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட நபரின் பெயர் உள்ளிட்ட பிற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இருப்பினும், இந்த வீடியோவை அவரை உருவாக்கினாரா? பின்னணியில் வேறு யாராவது உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    3 ஆண்டுகள் சிறை:
    போலீயாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.  3 ஆண்டு சிறையுடன் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த உத்தரவு ஏற்கனவே அமலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    மேலும் படிக்க
    Vidamuyarchi – Goat : அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகும் அஜித் விஜய் படங்கள்.. படைபலத்தை காட்ட காத்திருக்கும் ரசிகர்கள்

    Source link