Tag: மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

• அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டி இந்த கிராமம்  தன்னிறைவு பெற்ற கிராமமாக இருக்க வேண்டும் என கலெக்டர் முருகேஷ் பேசினார்

அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டி இந்த கிராமம்  தன்னிறைவு பெற்ற கிராமமாக இருக்க வேண்டும் என கலெக்டர் முருகேஷ் பேசினார்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் சு.பாப்பம்பாடி ஊராட்சியில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்  பா.முருகேஷ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப் உடனிருந்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர்  பா.முருகேஷ் பேசியதாவது:
சிறப்பான முறையில் கிராம சபைக் கூட்டம் சு.பாப்பம்பாடி ஊராட்சியில் நடைபெற்றது. கிராமசபைக் கூட்டம் என்பது கிராமங்களில் உள்ள பொது மக்கள் பல்வேறு பிரச்சனைகளை நேரில் கண்டறிந்து அவர்களின் நிறை, குறைகளை அறிந்து நிறைவேற்றுவது கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவதன் நோக்கமாகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் சிறப்பான முறையில் அந்தந்த ஊராட்சிமன்றத் தலைவர்களால் கொடியேற்றப்பட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-2022 2022-2023 செயல்படுத்தப்படும் அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும். இந்த ஊராட்சியின் மக்கள் தொகையின் ஆயிரத்து 564 மொத்த வீடுகளின் எண்ணிக்கை 363 ஆகும். வரி செலுத்துவதன் கடை வாடகை 15 வது நிதிக்குழு மூலம் கிராம பஞ்சாயத்துக்கு நிதி ஒதுக்குவதன் வாயிலாக வருவாய் வருகின்றது. மேலும் அரசு அறிவிக்கும் திட்டங்கள் மூலமாகவும் வருவாய் வருகின்றது. அரசு சில திட்டங்களை அறிவிக்கும். அதில் பள்ளி கட்டடங்கள் கட்ட திட்டங்கள், பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த திட்டத்தின் மூலம் சமையலறை அமைத்தல், பள்ளியின் கழிவறை அமைத்தல் என அறிவிக்கப்பட்டுயிருந்தன. தமிழக அரசு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி  திட்டத்தின் மூலம் சில கிராமங்களை தேர்ந்தெடுத்து குறிப்பாக நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 கிராமங்கள் உள்ளன.

அதில் 2021 -22 ஆண்டில் 169 கிராமங்களையும் 2022 -23 ஆண்டில் 75 கிராமங்களையும் 2023 -24 ஆண்டில் 75 கிராமங்களையும் தேர்ந்தெடுத்து  2026 அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம். சு.பாப்பம்பாடி ஊராட்சி பி 2022 -23 ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கி அடிப்படை வசதிகளான சாலை அமைத்தல், மின் விளக்குகள் அமைத்தல், மேல்நீர் தொட்டி அமைத்தல் கால்வாய் அமைத்தல் என அடிப்படை வசதிகளை செய்து முடிக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் ரூ 1 கோடியே 34 இலட்சம் மதிப்பில் 61 பணிகள் எடுத்துயிருக்கிறோம். அதில் 43 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.  கிராமத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதித்து தேவையான திட்டங்களும் அடிப்படை வசதிகள் குறித்து விவாதிப்பதே கிராம சபையின் நோக்கம். மேலும் 2021 -22 ஆண்டில் ரூபாய் 4 இலட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் பள்ளி சுற்றுசுவர் கட்ட நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அதற்கான பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். திடகழிவு மேலாண்மைக்காக ரூபாய் 85 ஆயிரம் நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

2022 -23 ஆண்டில் பள்ளி கழிவறை, கால்வாய் அமைத்தல், நீர்பாசன வசதிக்காக அமைத்தல் மற்றும் 10 ஆயிரம் லிட்டரில் மேல்நீர் தொட்டி அமைக்க ரூபாய் 6 இலட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் கட்டி முடிக்க வேண்டும். 2023-24 ஆண்டுக்கான பணிகளில் அமைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறுவதால் பள்ளியில் சமையலறை கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. பக்ககால்வாய் கட்டுவதன் நோக்கத்தை எடுத்துரைத்து பக்க கால்வாய் கட்டுவதை விட தனிநபர் உறிஞ்சு குழாய் கட்டுவதே மேல். வீடுதோறும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு பெறாத குடும்பங்கள் குடிநீர் இணைப்பு பெற்று தன்னிறைவு பெற்ற கிராமமாக இருக்க வேண்டும். சு.பாப்பம்பாடி கிராமத்தில் முதலாவது அனைத்து வீடுகளில் குடிநீர் வசதி உள்ளதா?. 2வது அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டி இந்த கிராமம்  தன்னிறைவு பெற்ற கிராமமாக இருக்க வேண்டும். 3வது சாலை வசதிகள் சரியாக உள்ளதா?

கிராமப்புறங்களில் வீடுகள் கட்டும் திட்டத்தில் பிஎம்ஒய்ஏ திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் கலைஞரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில் கிராம சபை கூட்டத்தின் மூலம் இறுதி செய்யப்பட்டது. அந்த பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரி பார்த்து அந்த திட்டத்தின் மூலம் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் சார்பில் 14 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையில் வாக்காளர்களின் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள் சார்பில் 3 குழுக்களுக்கு ரூபாய் 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கான காசோலையும்1 மாற்றுத்திறனாளி நபருக்கு உதவி தொகை பெறுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வழங்கினார்.

Source link

• Job Fair Private Employment Camp In Tiruvannamalai District – TNN

Job Fair Private Employment Camp In Tiruvannamalai District – TNN

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வரும் 30ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: தனியார் துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் ”வேலைவாய்ப்பு முகாம்” இம்மாதம் எதிர்வரும் 30.01.2024 செவ்வாய்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
கல்வி தகுதி;
இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 300க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். எட்டாம் வகுப்பு 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
அடையாள அட்டை  நகல்கள்;
முகாம் அன்று தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ரேஷன் அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்துகொள்ள வேண்டும். முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Job Alert: நர்சிங் படித்தவரா?ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்?

Source link

• //தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுகழகம் (தாட்கோ) சார்பில் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

//தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுகழகம் (தாட்கோ) சார்பில் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுகழகம் (தாட்கோ) சார்பில் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட ஏதுவாக புதியதாக தொழில் தொடங்குவதற்கு அனைத்து மாவட்டங்களில் உடற்பயிற்சி சிகிச்சை மையம் (பிஸியோதெரபி கிளினிக்) அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. உடற்பயிற்சி சிகிச்சை மையம் ( பிஸியோதெரபி கிளினிக்) தொடங்க தனியார் நிறுவனம் மூலமாக சொந்தமாக கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கும் மற்றும் இடம் இல்லாதவர்களுக்கு வாடகை அடிப்படையில் இடங்கள் தேர்வு செய்து தரப்பட்டு உடற்பயிற்சி சிகிச்சை மையம் (பிஸியோதெரபி கிளினிக்) அமைத்தும் தொழில்முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் அத்தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து இலவச ஆலோசனைகளும் தனியார் நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் படிக்க ;TNHRCE Recruitment: சென்னையிலுள்ள கோயிலில் வேலைவாய்ப்பு; ரூ.58,000 சம்பளம் – விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கான உரிமையாளர் கட்டணம் (Franchise Fees) முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும். உடற்பயிற்சி சிகிச்சை (பிஸியோதெரபி) பயிற்சியில் பட்டப் படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்கள் அல்லது எதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்து 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் தகுதியுள்ள நபர்கள் புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன்  www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் உடற்பயிற்சி சிகிச்சை (பிஸியோதெரபி) பயிற்சியில் பட்டப் படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்தொழிலுக்கு ரூ 6 இலட்சம் திட்டத் தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 அல்லது அதிகபட்சம் ரூ 2.10 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும். பயனாளிகள் 5 முதல் 10 சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகையை வங்கி கடனுதவி பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க ;Southern Railway: தெற்கு ரயில்வேயில் வேலை; 10,12-வது, ஐ.டி.ஐ. தேர்ச்சி போதும் – விண்ணப்பிப்பது எப்படி?

Source link

• Humanity Week 2024 Tiruvannamalai District From 24th To 7 Days For School And College Students In Dance, Drama And Speech Competition – TNN

Humanity Week 2024 Tiruvannamalai District From 24th To 7 Days For School And College Students In Dance, Drama And Speech Competition – TNN

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான மனித நேய வாரவிழா ஜனவரி 24 2024 முதல் ஜனவரி 30 2024 வரை ஏழு நாட்கள் கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பில் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (24.01.2024) முதல் நாள் விழா ஒருநாள் அல்லது ஒருவாரக் கண்காட்சி நடத்தப்பட வேண்டும். இதனை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையும் கூட்டாகச் சேர்ந்து நடத்தலாம். (25.01.2024) இரண்டாம் நாள் விழா மாவட்ட அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ, மாணவியர்களை கொண்டு நாட்டியம், நாடகம், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி போன்ற கலைப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

மேற்படி கலைப் போட்டிகள் கோட்ட அளவில் கோட்டாட்சியர்கள் தலைமையில் தனி வட்டாட்சியர் (ஆதிந) செங்கம், வந்தவாசி மற்றும் போளுர் ஆகியோர் மூலம் நடத்தலாம். (26.01.2024) மூன்றாம் நாள் விழா நாட்டு நலப்பணித் திட்டத்தின் (என்எஸ்எஸ்) மூலமாக கல்லூரி மாணவ, மாணவியர்களை கொண்டு ஒரு ஆதிதிராவிடர் குடியிருப்புக்குச் சென்று அவ்வூரில்மேல்நிலைப்பள்ளி வகுப்புகளில் (11 மற்றும் 12ம் வகுப்பு) படிக்கும் மாணவ, மாணவியர்களுடன் அவர்தம் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் தேநீர் அருந்தி மனமகிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பர் (அரசு கலைக் கல்லூரியின் என்எஸ்எஸ் மாணவ மாணவியர் மூலம் நடத்தப்படும்). (27.01.2024) நான்காம் நாள் விழா அனைத்து மதத்தலைவர்களையும் ஆதிதிராவிடர்சான்றோர்களையும் ஒன்றுக்கூட்டி நல்லிணக்க கூட்டங்கள் நடத்தப்படும். வன்கொடுமைத்தடுப்பு சட்டக்கூறுகள் குறித்துகாவல் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மூலம் நடத்தப்பட வேண்டும். இந்த விழாவினை மாவட்ட காவல் துறையில் மாவட்டசமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மூலம் நடத்தலாம். (28.01.2024) ஐந்தாம் நாள் விழா கல்வித்துறை மூலம் மாணவ,மாணவியர்களை கொண்டு தீண்டாமை ஒழிப்பு குறித்து போட்டிகள் நடத்தலாம். இவ்விழாவினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் பள்ளிகள் தோறும் நடத்தலாம்.

(29.01.2024)  ஆறாம் நாள் விழா திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம் மூலம் சமுதாயத்தில் முன்னேறிய நிலையில் உள்ள அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், தொழில் முனைவோர்கள் ,அரசியல்வாதிகள் ஆகியோர்களை கொண்டு சமுதாய பொருளாதார முன்னேற்ற சிந்தனைக்கூட்டம் நடத்தலாம். (30.01.2024)  ஏழாம் நாள் விழா இறுதிநாள் நிகழ்ச்சியாக ஒரு பெருவிழா நடத்தப்படல் வேண்டும். பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் சிறப்பு தகுதி பெற்றோருக்கான பரிசுகள், ஊக்கத்தொகை வழங்குதல், தொழில் முனைவோர்களுக்கு நிதி உதவிகள் நல்குதல் போன்றவைகளை இவ்விழாவில் ஏற்பாடு செய்யப்படும். முந்தைய ஆறுநாள் விழாக்களுக்கு பொறுப்பானவர்கள் அடங்கிய விழாக்குழு நடத்தும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இக்குழுவின் செயல் உறுப்பினராகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைவராகவும் இருப்பார். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக நடைபெறும் மனிதநேய வாரவிழாவில் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் வன்கொடுமை மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Source link

• இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க செங்கம் பகுதியில் சிப்காட்  தொழிற்சாலைகள் அமைக்க கோரிக்கை –  அமைச்சர்  எ.வ.வேலு

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க செங்கம் பகுதியில் சிப்காட் தொழிற்சாலைகள் அமைக்க கோரிக்கை – அமைச்சர் எ.வ.வேலு

ரூபாய் 10 கோடியே 48 இலட்ச மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் ரூ.1 கோடியே 23 இலட்ச மதிப்பில் முடிவுற்ற அரசு கட்டிடங்களையும் மற்றும் ரூ.25 இலட்சம் மதிப்பில் புதிய பணிகள் துவக்க விழா திருவண்ணாமலை மாவட்டம் துர்க்கை நம்மியந்தல் மற்றும் பெரிய கிளாம்பாடி ஊராட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர்  எ.வ.வேலு புதிய கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டி முடிவுற்ற அரசு கட்டிடத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்  சி.என். அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்  பெ.சு.தி.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவிகள் வருவாய் மற்றும் பேரிடர் துறையின் மூலம் 52 பயனாளிகளுக்கு ரூ.3.35 இலட்சம் மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ 9.10 இலட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் 182 பயனாளிகளுக்கு 11.50 இலட்சம் மதிப்பில், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ 2.50 இலட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ 40 ஆயிரம் மதிப்பில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் ஆயிரத்து 317 நபர்களுக்கு ரூ.8 கோடியே 66 இலட்சத்தி 55 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை அமைச்சர்  தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி கொண்டிருக்கும்  தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையில் சிறப்பாக தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தி, மக்கள் திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறார். திராவிட மாடல் ஆட்சியில் பெரிய கிளாம்பாடி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து முடிக்கப்பட்டுருக்கிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க செங்கம் பகுதியில் சிப்காட் சிப்கோ போன்ற தொழிற்சாலைகள் அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர். திராவிட மாடல் ஆட்சி அமைந்த உடன் சிப்கோ தொழிற்சாலைகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதி என்பதால் கால்நடை மருத்துவ கல்லூரி செங்கம் பகுதியில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பெரிய கிளாம்பாடி சிறப்பு என்னவென்றால் தமிழ்நாடு முதலமைச்சர்  2011 ஆம் ஆண்டு நமக்கு நாமே என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு கிராமப்புறங்களில் ஊராட்சி மன்ற தலைவரை சந்திக்க வேண்டும் என்று ஆணையிட்டனர். அதில் இந்த ஊராட்சியை தேர்ந்தெடுத்து தமிழ்நாடு முதலமைச்சர்  தரையிலே அமர்ந்த சிறப்புக்குரிய ஊராட்சி ஆகும்.

தேவைகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்லும். எனவே தேவையை அறிந்து ஆட்சி செய்கிறார் நமது தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின். மேலும் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், அனைவருக்கும் அனைத்தும் சமம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி எடுத்துகாட்டாக காலை சிற்றுண்டி நமது பகுதியில் பெரும்பாலும் விவசாயிகள் தான் அவர்கள் காலையில் ஆண் பெண் இருவரும் விவசாயத்திற்கு சென்று விடுகின்றனர். அந்த குடும்பத்தில் இருந்து வரும் பிள்ளைகள் பசியாக இருக்க கூடாது என்பதற்காக இந்த திட்டத்தை கொண்டுவந்தார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்திட்டம் இல்லை நமது தமிழ்நாட்டில் தான் இந்த திட்டம் உள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துகளும் அங்கீகாரமாக மாதம் மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக  ஆயிரம் வழங்கி பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் ஆட்சியாக உள்ளது. மேலும் அனைத்து மாணவிகளும் பட்டதாரி பெண்களாக வேண்டுமென்பதால் கல்லூரி செல்லும் பெண்களுக்கு புதுமை பெண் திட்டம் என்ற திட்டத்தில் மாத மாதம் ஆயிரம் அவர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இது பெண்கள் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எனப் பேசினார்.

Source link

• கிராமத்து பாணியில் அலுவலக வேலைகளை மறந்து சாமானியர்களை போல் சமத்துவ பொங்கலை சந்தோசமாக கொண்டாடிய அதிகாரிகள்

கிராமத்து பாணியில் அலுவலக வேலைகளை மறந்து சாமானியர்களை போல் சமத்துவ பொங்கலை சந்தோசமாக கொண்டாடிய அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த சமத்துவ பொங்கல் விழாவில் பட்டு வேட்டியுடன் சக ஊழியர்களோடு இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குனர் ரிஷப் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தொகுப்பாளராக இருக்க அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பதவி பாகுபாடின்றி உற்சாகமாக சமத்துவ பொங்கல் கொண்டாடினர். இந்தப் பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரியமான உறியடி விழாவில். உறியடி பானைக்குள் என்ன போடுவது என்று தெரியாமல் சாக்லேட்டை போடுவதா பூசணிக்காய் போடுவதா தண்ணீர் ஊற்றுவதா என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர்.

பின்னர் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தண்ணீர் ஊற்றுங்கள் பரவாயில்லை என்று கூறியதை தொடர்ந்து தண்ணீரை ஊற்றி விழா தொடங்கியது. உறியடி விழாவில் தமிழர்களின் பாரம்பரியமான பட்டு வேட்டி கட்டிய மைனர் என்பதை போல் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குனர் ரிஷப் கண்களை கட்டிய சக அதிகாரிகளை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கம்பை கையில் கொடுத்து திசை மாற்றி சுற்றிவிட்டார். அப்படி இருந்தும் திட்ட இயக்குனர் திட்டமிட்டு குறிவைத்து உறியடிப்பானையை உடைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்களின் மனைவி நந்தினி அவர்கள் உறியடிப்போட்டியில் பங்கேற்க அங்கிருந்தவர்கள் உற்சாக மிகுதியில் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். மாவட்ட ஆட்சியர் தனது மனைவியாக இருந்தாலும் போட்டியில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் சரியாக கருப்பு துணியால் கண்களை கட்டினார்.

பின்னர் ஆட்சியர் முருகேஷ் மனைவி நந்தினியை சரியாக அடிக்க வேண்டும் என்று மூன்று சுற்று சுற்றி சரியான திசையில் நிறுத்தி ஆவலோடு உரியடி விழாவை பார்த்த ரசித்தார். மாவட்ட ஆட்சியரின் மனைவி நந்தினி சில வினாடிகளிலேயே உரியடிப்பானையை இரண்டே அடியில் உடைத்தார். தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினிக்கும் கருப்புத் துணியால் கண்கள் கட்டப்பட்டு போட்டியில் பங்கேற்றார். பாவம் வருவாய் அலுவலரை சுற்றி விட்டவர்கள் திசை தெரியாமல் சுற்றி விட்டதால் அங்கும் இங்கும் சுற்றிய வரை பார்த்து சக அதிகாரிகள் கமெண்ட் கொடுக்கவே சரியாக பானையை உடைத்தார். தொடர்ந்து விழாவில் மியூசிக்கல் சேர் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, கரும்பு சாப்பிடும் போட்டி, லெமன் ஸ்பூன் போட்டி, கோலப்போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகமே சமத்துவ பொங்கல் திருவிழா கோலம் பூண்டது.

Source link

• சாத்தனூர் அணை வலது மற்றும் இடது புற கால்வாயில் இருந்து வினாடிக்கு 530 கன அடி வீதம் தண்ணீரை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்

சாத்தனூர் அணை வலது மற்றும் இடது புற கால்வாயில் இருந்து வினாடிக்கு 530 கன அடி வீதம் தண்ணீரை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் சாத்தனூர் அணையில் இருந்து 45 ஆயிரம் விவசாய நிலங்கள் பயனடையும் வகையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தண்ணீரை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். காமராஜர் ஆட்சி காலத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சாத்தனூர் அணை கட்டப்பட்டது. சாத்தனூர் அணையின் முழு நீர்மட்டம் 119 கன அடி. தற்போது சாத்தனூர் அணையின் நீர் கொள்ளளவு 7321 மில்லியன் கண்ணாடியாக உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 45 ஆயிரம் விவசாய நிலங்கள் மற்றும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதியில் உள்ள 5000 ஏக்கர் என மொத்தம் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும் வகையில் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் தண்ணீர் திருந்து விடப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை அமைச்சர்  செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தாவது:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் அமைந்துள்ள சாத்தனூர் அணையின் முழு நீர் மட்டம் 119.00 அடி சாத்தனூர் நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவு 7321 மி.க.அடியாகும். சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 118.00 அடி கொள்ளளவு 7097 மி.க.அடி தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க சாத்தனூர் அணையின் பிக்கப் அணைக்கட்டிலிருந்து சாத்தனூர் இடதுபுறக் கால்வாயில் வினாடிக்கு 330 கன அடி நீரும், வலதுபுறக் கால்வாயில் வினாடிக்கு 200 கன அடி நீரும் ஜனவரி 11 2024 முதல் ஏப்ரல் 20 2024 வரை 100 நாட்களுக்கு நீர் திறந்து விடப்படுகிறது. மேலும் 2024 ஆம் ஆண்டில் அணையின் நீர் இருப்பு மற்றும் உத்தேச நீர் பகிர்மான விவரம் சாத்தனூர் அணையில் தற்போது 7097 மி.க.அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அடிப்படைத்தேவை குடிநீர் திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நீர் அளவு மண் தூர்வினால் ஏற்பட்டுள்ள கொள்ளளவு இழப்பு மற்றும் நீர் ஆவியாதல் மூலம் ஏற்படும் இழப்பும் சேர்ந்து 1291.00 மி.க.அடி தண்ணீர் தேவை. ஆகவே அணையின் மீதம் உள்ள பாசனம் நீர் இருப்பு 5795.00 மி.க.அடியாகும். சாத்தனூர் அணை பாசன நிலங்கள் 45 ஆயிரம் ஏக்கருக்கு இடது புறக் கால்வாயில் விநாடிக்கு 330 கன அடியும் மற்றும் வலது புறக் கால்வாய்களில் விநாடிக்கு 200 கன அடியும் முறையே என மொத்தம் 530 கன அடி வீதம் ஜனவரி 11 2024 முதல் ஏப்ரல் 20 2024 வரையிலான 100 நாட்களுக்கு தொடர்ச்சியாக தண்ணீரை வழங்குவதற்கும்,

திருக்கோவிலூர் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டு 5000 ஏக்கருக்கு இரண்டாம் போக சாகுபடிக்கு 1200 மில்லியன் கனஅடி நீரினை நீர் பங்கீடு விதியின்படி ஏப்ரல் 30க்குள் விவசாயிகளின் கோரிக்கையின்படி மூன்று தவணைகளில் சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 46 கிராமங்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 58 கிராமங்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் உள்ள மொத்தம் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும். பாசன நீரை சிக்கனமாகவும் துறை பணியாளர்களின் அறிவுரைப்படியும் சிறந்த முறையில் பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெற்றிட எல்லா வகையிலும் ஒத்துழைக்குமாறு பாசன ஆயக்கட்டுதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அறிவிக்கப்பட்ட தேதிக்கு மேலும் எக்காரணத்தைக் கொண்டும் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் தேதியை நீட்டிக்கப்படமாட்டாது. தற்போது திறந்துவிடப்படும் நீரானது ஜனவரி 11 2024 முதல் 25 நாட்களுக்கு கடைமடை பகுதிகளுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து நீர் வழங்கப்படும். எனவே விவசாயிகள் இந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வானாபுரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Source link

• Tiruvannamalai District Environment Protection Green Champion Award Apply Immediately Date – TNN | பசுமை சாம்பியன் விருதுக்கு உடனடியாக விண்ணப்பிங்க

Tiruvannamalai District Environment Protection Green Champion Award Apply Immediately Date – TNN | பசுமை சாம்பியன் விருதுக்கு உடனடியாக விண்ணப்பிங்க

திருவண்ணாமலை (Tiruvannamalai News) பசுமை சாம்பியன் விருது 2023 விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் அறிவித்துள்ளார்.
பசுமை சாம்பியன் விருது 2023 விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; 2023 ம் ஆண்டிற்கான, பசுமை சாம்பியன் விருது தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மறறும் வனத்துறையின் சார்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள் அல்லது அமைப்புகளுககு பசுமை சாம்பியன் விருது தமிழக அளவில் 100 பேருக்கு வழங்கி, தலா ரூ.1 இலட்சம் வீதம் பணமுடிப்பு வழங்க உள்ளது. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை மற்றம் நீர்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு மேலாண்மை போன்றவற்றில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும்

விழிப்புணர்வை சிறப்பாக திருவணண்மலை மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுககு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும். தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், திருவண்ணாமலை, மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் தகுதிவாய்ந்த மூன்று தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான, விண்ணப்பபடிவம் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்து விரிவான தகவல் மற்றும் விண்ணப்பபடிவங்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் அலுவலக இணையதளம் (https://tiruvannamalai.nic.in/) மற்றும் மாவட்டசுறறு சுழல்பொறியாளர் அலுவலகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் கிடைக்கும். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.04.2024 என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்  தெரிவித்துள்ளார்.

Source link

• மீண்டும் மஞ்சப்பை விருதுகள்-  மஞ்சப்பை  பயன்படுத்தும் பள்ளிக்கு  பரிசுத்தொகை இவ்வளவா..?

மீண்டும் மஞ்சப்பை விருதுகள்- மஞ்சப்பை பயன்படுத்தும் பள்ளிக்கு பரிசுத்தொகை இவ்வளவா..?

திருவண்ணாமலை மாவட்டத்தில் “மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் கேரி பேக்குகளுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் வகையில் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

“மீண்டும் மஞ்சப்பை”

மஞ்சப்பை விருதுகள் 2023-2024 விண்ணப்பிக்க “மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் 2022-2023 நிதியாண்டுக்கான சட்டப்பேரவையில் மஞ்சப்பை விருதுகளை அறிவித்தார். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இது வழங்கப்படும். இது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் இவற்றிற்கு மாற்றாக பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணிபை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்தமாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிகவளாகங்களுக்கு
இந்த விருது வழங்கப்படும்.

பரிசு தொகை விவரம்

முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். இந்த அறிவிப்பின் படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள் சுற்றுப்புறங்கள் மற்றும் வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாத மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாகத் திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிகவளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கௌரவிக்க முன் வந்துள்ளது.

இதுகுறித்து விரிவான தகவல்

விண்ணப்பபடிவங்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் அலுவலக இணையதளம் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் , தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் கிடைக்கும். விண்ணப்பப்படிவத்தில் தனிநபர், நிறுவனத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு பிரதிகள் இரண்டை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்: 01.05.2024 என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Source link

• திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கான58 நேரடி கொள் முதல் நிலையங்கலில் நாளை முதல் முன்பதிவு துவக்கம்.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கான58 நேரடி கொள் முதல் நிலையங்கலில் நாளை முதல் முன்பதிவு துவக்கம்.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கான நேரடி கொள் முதல் நிலையங்கள் (10.01.2024 )முதல் துவக்கம், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2023-24 ஆண்டிற்க்கான சம்பா பருவத்தில் முதல் கட்டமாக 11 வட்டங்களில் 58 மையங்கள் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் (10.01.2024) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு (08.01.2024) முதல் துவங்கப்பட உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பின்வரும் விவரப்படி 58 மையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது.  திருவண்ணாமலை வட்டத்தில் நார்த்தாம்பூண்டி, வெளுக்கானந்தல், பெரியகிளாம்பாடி, கருத்துவாம்பாடி, கீழ்பென்னாத்தூர் வட்டத்தில்; சோமாசிபாடி, அணுக்குமலை, செங்கம் வட்டத்தில்; கண்ணக்குருக்கை, அன்வராபாத், காரியமங்கலம், எறையூர், மேல்முடியனூர், நாகபாடி, அரட்டாவடி, தண்டராம்பம்டு வட்டத்தில் ; தண்டராம்பம்டு, மேல்கரிப்பூர், ராயண்டபுரம், ஆரணி வட்டத்தில்; அரியாபாடி, தச்சூர் 5-புதூர்

போளூர் வட்டத்தில்; மண்டகொளத்தூர், வடமாதிமங்கலம், குன்னத்தூர்,  கேளுர், எடப்பிறை , கலசப்பாக்கம் வட்டத்தில்; எலத்தூர், ஆதமங்கலம், கடலாடி, வீரலூர், வந்தவாசி வட்டத்தில்; வல்லம், நல்லூர், தென்னாத்தூர், பொன்னூர், மலையூர், மருதாடு, எரமலூர், பெரணமல்லூர் செய்யாறு வட்டத்தில்; எச்சூர், பாராசூர், மேல்சீசமங்கலம், தவசிமேடு, ஆக்கூர், மேல்மா, வெங்கோடு, பெருங்களத்தூர், வெம்பாக்கம் வட்டத்தில்; வெம்பாக்கம், கீழ்நெல்லி, தூசி, பெருங்கட்டூர்,அழிவிடைத்தாங்கி, தென்னம்பட்டு, நாட்டேரி, அரியூர், பிரம்மதேசம், சேத்துப்பட்டு வட்டத்தில்; சேத்துப்பட்டு , நம்பேடு, பெரியகொழப்பலூர், மேல்சாத்தமங்கலம், செம்மாம்பாடி ஆகிய இடங்களில் நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. விவசாயிகள் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்விற்பனை செய்து பயன் பெறலாம்.
(08.01.2024) முதல் முன்பதிவு துவங்கும்

விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் சான்றினையும் உதவி வேளாண்மை அலுவலரிடம் மகசூல் சான்றினைஅடங்கலில் பெறவேண்டும்.

நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் நேரடிகொள்முதல் மையத்திற்கு மேற்குறிப்பிட்ட சான்றுகள், ஆதார், சிட்டா மற்றும் வங்கிகணக்கு புத்தக நகல் ஆகியவற்றினை நேரில் கொண்டு சென்று இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ளது.  நேரடி கொள்முதல் மைய அலுவலரிடம் அளிக்க வேண்டும்.

நேரடிநெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார். பதிவுகள் மேற்கொண்ட பின்னர் சம்மந்தப்பட்ட விவசாயியின் பதிவு செய்த அலைபேசி எண்ணிற்கு“ வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டது” என்ற குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலரின்  DASH BOARD -க்கு அனுப்பப்பட்டு அவரால் பதிவு செய்துள்ள விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் நிராகரிப்பு செய்யப்படும்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்மந்தப்பட்ட மையத்திற்கு சென்று நெல் அளிக்க வேண்டும்.

விவசாயிகள் முன்பதிவு செய்வதில் சந்தேகம் சான்றுகள் பெறுதல் நெல் கொள்முதல் செய்யும் போது தேவையற்ற காலதாமதம் அல்லது பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டால் உதவிக்கு 9487262555 (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) மற்றும் 6385420976 (தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு) ஆகிய எண்களை தொடர்பு கொண்டோ அல்லது WHATSAPP வாயிலாக தெரிவித்தாலோ அவை உடனடியாக சரிசெய்யப்படும்.

எனவே விவசாயிகள் மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி தங்களின் நெல்லை நேரடிநெல் கொள்முதல் நிலையங்களில் வழங்கி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  பா.முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Source link