Tag: மாவட்ட ஆட்சியர்

• Lok Sabha Election 2024 Karur the police did their democratic duty through postal voting – TNN

Lok Sabha Election 2024 Karur the police did their democratic duty through postal voting – TNN

பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி கரூரில் காவல்துறையினர் தபால் வாக்கு மூலம் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள், தங்கள் வாக்குரிமையை செலுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, காவலர்கள் தங்கள் தபால் வாக்குகளைச் செலுத்தலாம் என்று மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் தபால் வாக்குகள் செலுத்தும் வகையில் தனி அறை ஒதுக்கப்பட்டது. அதில் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், ஊர் காவல் படையினர் என அனைவரும் தங்களது வாக்கினை பதிவு செய்து சீல் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தி தங்களது ஜனநாயக  கடமையை ஆற்றினர்.

தபால் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தினை கரூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் காண

Source link

• கரூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பு அறை திறப்பு

கரூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பு அறை திறப்பு

கரூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பு அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார்.

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சுமார் 100 மீட்டருக்குள் வெள்ளை கோடு வரைந்து இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள், அரசியல் கட்சியினரை போலீசார் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை பகுதிக்கு கொண்டு செல்லப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் திறந்து வைத்து  பார்வையிட்டார் ஆய்வு செய்தார்.

மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசு அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் பரிசோதனை செய்த பிறகு சீல் வைத்து மாலை அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாகனம் மூலம் போலீசார் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்க உள்ளது.

மேலும் காண

Source link

• கரூர் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி; புத்தகங்கள் வழங்கி ஆட்சியர் வாழ்த்து

கரூர் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி; புத்தகங்கள் வழங்கி ஆட்சியர் வாழ்த்து

கரூர் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் ஆட்சியர் தங்கவேல்.

மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் கல்வி அறிவை பெறுவது மிகவும் அவசியம். தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் துவக்கப்பட்டு செயல்பட்டபோதும், தனியார் பள்ளிகள் அதற்கு போட்டியாக வளர்ந்து வருவதும், பெரும்பாலான பொதுமக்கள் அரசு பள்ளியை தவிர்த்து விட்டு தனியார் பள்ளிகளில் ஆர்வம் காரணமாக சேர்ப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் பயின்ற பலரும் உலக அளவில் சாதனை நிகழ்த்தியுள்ளனர். மேலும் அரசு பள்ளிகளின் பல்வேறு நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதனால் ஏழை, எளிய மக்கள் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கரூர் மாவட்டம், தாந்தோணிமலைபட்டி பகுதியில் உள்ள துவக்கப் பள்ளியில் அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து, புதிதாக சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்று, நோட்டு புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசு அரசு பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் காரணமாக மாணவர்களின் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 2024- 25 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்காக விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உயர்கல்வி பயில 7.5% முன்னுரிமை அளிக்கப்படுவது, பெண் கல்வியை ஊக்கி வைக்கும் வகையில் புதுமைப்பெண் திட்ட மூலம் கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், தொடக்க நிலை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக அரசு பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Source link

• Monkey fever Salem District Collector said that checking has been increased at state borders – TNN | குரங்கு காய்ச்சல் எதிரொலி: வெளிமாநில எல்லைகளில் கண்காணிப்பு அதிகரிப்பு

Monkey fever Salem District Collector said that checking has been increased at state borders – TNN | குரங்கு காய்ச்சல் எதிரொலி: வெளிமாநில எல்லைகளில் கண்காணிப்பு அதிகரிப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, கருமந்துறை, பாலமலை உள்ளிட்ட மலை பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் காட்டுத் தீ ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டு மலைப்பகுதியில் தீ விபத்துகள் ஏதும் ஏற்படாமல் இருக்க சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளமான ஏற்காடு, கருமந்துறை போன்ற மலைப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து வர தடை விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் வனப் பகுதிகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காய்ந்த விவசாய மிச்சங்களை எரிக்க கூடாது என எச்சரித்துள்ள சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, கோடை காலங்களில் அரசால் தெரிவிக்கப்படும் வன பாதுகாப்பு நடவடிக்கைகளை சுற்றுலா பயணிகளும், வனப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்களும் பின்பற்றி வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாத்திட உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடைய சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது, “வெளி மாநிலங்களில் குரங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், சேலம் மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு சுகாதாரத்துறையால் சோதனை செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை சேலத்தில் பாதிப்பு வராத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், சேலம் ஏற்காடு மலைப் பகுதிகளில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்லாமல் இருக்க சேலம் மாவட்ட வனத்துறை மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகம் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்காடு மலைப்பாதையில் வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.
குறிப்பாக கோடை காலம் துவங்கி வரும் நிலையில் வனப்பகுதிகளில் இருக்கும் வன உயிரினங்கள் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிக்கு வருவது குறித்த கேள்விக்கு, வனத்துறை மூலமாக வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வருவது குறையும் என்றும் கூறினார்.

மேலும் காண

Source link

• Pugar petti kanchipuram Residents of Thandalam Anugiragam Avenue have petitioned the District Collector demanding road and drinking water facilities

Pugar petti kanchipuram Residents of Thandalam Anugiragam Avenue have petitioned the District Collector demanding road and drinking water facilities

7 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை தற்போது வரை சீரமைக்கப்படவில்லை எனவும்,பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் பிரதி வாரம் திங்கட்கிழமை மக்கள் குறைத்தீர் நாள் முகாம் நடைபெறுகிறது. இதில் பலதரப்பட்ட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று தண்டலம் அனுகிரகா அவென்யூ விரிவில் சாலை, கால்வாய் மற்றும் குடிநீர் வசதி செய்து தரக் கோரி பகுதிவாசிகள் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்தனர்.

File Photo

இந்த மனுவில் பகுதிவாசிகள் தெரிவித்ததாவது:

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், தண்டலம் கிராமத்தில் உள்ள அனுகிரகா அவென்யூ விரிவு என்ற நகரில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். பாலாஜி தெரு, பத்மாவதி தெரு, அலமேலு தெரு மற்றும் பேசில் கோல்ட் தெரு ஆகிய 4 தெருக்களை உள்ளடக்கி உள்ள இந்த நகரில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு முறை மட்டுமே சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையும் 5 ஆண்டுகளாக இயற்கை சீற்றங்களாலும், வாகன போக்குவரத்தினாலும் முற்றிலும் சேதமடைந்ததாக தெரிவிக்கின்றனர். மேலும், கால்வாய் வசதி இல்லாத காரணத்தால் வீடுகளில் இருந்து வெளியேறும் நீரானது சாலைகளின் நடுவே தேங்குகிறது.

இதனால் சாலை சேதமடைவது மட்டுமின்றி கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா மற்றும் டைஃபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

File Photo

இதனைத் தொடர்ந்து குடியிருப்புகளின் அருகே பொது கால்வாய் உள்ளதால் அந்த கால்வாய் நீரானது குடிநீரில் கலந்து குடிநீர் மாசுபடும் சூழலும் உருவாவுதாகவும் தெரிவிக்கின்றனர். சாலை, குடிநீர் மற்றும் கால்வாய் வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தரக் கோரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்போர் நல சங்கம் ஒன்றை அமைத்து அதன் மூலமாக ஊராட்சி மன்றத் தலைவர், அரசு அலுவலர்கள், அமைச்சர் உள்ளிட்ட பலரை நேரில் சந்தித்து மனு அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அடிப்படை வசதிகளான சாலை, கால்வாய் மற்றும் குடிநீர் வசதிகளை உடனடியாக சரி செய்து தர கோரி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்தனர்.

Pugar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன செய்து மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா? ஆன்லைன் வெளியில் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா?
கவலையே வேண்டாம்.
சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை,  நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம்.
நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்.

மேலும் காண

Source link

• "மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் எளிதில் கிடைத்திட  கணக்கெடுப்பு உறுதுணையாக இருக்கும்" -சேலம் மாவட்ட ஆட்சியர்.

"மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் எளிதில் கிடைத்திட கணக்கெடுப்பு உறுதுணையாக இருக்கும்" -சேலம் மாவட்ட ஆட்சியர்.

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம், பழைய பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி பேசியது, "மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணிகளை தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் (மகளிர் திட்டம்) மூலம் கணக்கெடுப்பு பணி கடந்த 04.12.2023 முதல் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் அனைத்து திட்டங்களும் அவர்களுக்கு எளிதில் கிடைத்திடவும், மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, சமூகத்தரவு தளத்தை உருவாக்கவும் இக்கணக்கெடுப்பு வழிவகை செய்கிறது. சேலம் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு வாகனம் சென்று மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்புப் பணியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்த உள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக தமிழ்நாடு உரிமைகள் (TN RIGHTS) என்ற மொபைல் செயலி மூலம் தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களது விவரங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை தங்களது இல்லம் தேடி வரும் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு எவ்வித தயக்கமும் இன்றி அவர்களுக்கு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. குறிப்பாக, இக்கணக்கெடுப்பின்போது, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டை (UDID Card), ஆதார் அடையாள அட்டை, ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கணக்கெடுப்பாளர்களிடம் காண்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இக்கணக்கெடுப்பு பணியானது மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட மேம்பாட்டிற்கும், எதிர்காலத்தில் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும், மறுவாழ்வு பணிகளுக்கும் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதால் இக்கணக்கெடுப்பின்போது, அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் பதிவு செய்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்றார்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் 0427-2415242 மற்றும் 94999 33489 என்ற எண்களிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வாணி ஈஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Source link