Tag: மாதவன்
• 18 Years of Thambi: நடிக்க மறுத்த மாதவன்.. திசை மாறிய சீமானின் வாழ்க்கை.. தம்பி படத்தால் வந்த சோதனை
18 Years of Thambi: நடிக்க மறுத்த மாதவன்.. திசை மாறிய சீமானின் வாழ்க்கை.. தம்பி படத்தால் வந்த சோதனை
நடிகர் மாதவன் – இயக்குநர் சீமான் கூட்டணியில் உருவான தம்பி படம் வெளியாகி இன்றோடு 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இப்படியான நிலையில் தம்பி படம் வெளியாகி இன்றோடு 18 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இப்படம் உருவானதை நேர்காணல் ஒன்றில் சீமான் பேசியிருப்பார். அதில், “தம்பி படம் உருவானதே போராட்டம் தான். அந்த கதையை எல்லா ஹீரோவிடமும் சொன்னேன். ஆனால் நடிக்க தயங்குகிறார்கள். அப்போது நடிகர் மனோபாலா என்னை அழைத்தார். அப்போது தம்பி பட கதையை சொன்னதும், இதுல ஏன்டா யாரும் நடிக்க மாட்டேங்குறாங்கன்னு புலம்பினார். பின்னர் சத்யஜோதி தியாகராஜனை சந்தித்து தம்பி படம் பற்றி சொன்னார். அவரும் அழைத்து வர சொல்லி கதை கேட்டார். நல்லாருக்குது, ஏன் யாரும் நடிக்க மாட்டேங்கிறார்கள் என தியாகராஜன் சொல்கிறார். நான் ஸ்ரீகாந்தை கேட்டேன். ஒருநாள் காலை 7 மணிக்கு தியாகராஜன் போன் பண்ணி மாதவன் நடித்தால் எப்படி இருக்கும் என கேட்டார்.
நான் எதுனாலும் ஓகே என சொன்னேன். அப்ப மாதவன் ஆய்த எழுத்து படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். முதலில் 2 நாட்கள் டைம் கொடுங்க, நான் கதை கேட்கிறேன் என சொன்னவர்  அன்று மதியமே கதை சொல்ல அழைத்தார். நான் கதை சொல்லி முடித்ததும் மாதவனுக்கு ரொம்ப பிடித்தது. ரன் படத்துக்குப் பின் கதை கேட்டு முடித்ததும் நடிக்க முடிவு செய்த படம் இதுதான் என ஒப்புக்கொண்டார். ஆனால் ரூ.1 கோடி சம்பளம் கேட்டு பிடிவாதமாக இருந்தார். அது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது. கதை தியாகராஜனிடம் இருந்து ஆர்.பி.சௌத்ரியிடம் சென்றும் மாதவன் சம்பளம் பிரச்சினை தீரவில்லை. அதன்பிறகு டாக்டர் முரளி மனோகரனிடம் படம் சென்றது.
மாதவன் நடிப்பை கண்ணாடி மாதிரி பிரதிபலிப்பார். தம்பி படத்துக்குப் பின் பகலவன் படத்தின் கதையை மாதவனிடம் சொன்னேன். ஆனால் மறுபடியும் கனமான ஒரு கதையில் நடிக்க வேண்டுமா என கேட்டார். அந்த கதையில் மாதவன் நடித்திருந்தால் என் வாழ்க்கையை மாறியிருந்து இருக்கும். அப்படம் தம்பி மாதிரி இரண்டு மடங்கு இருக்கும்” என சீமான்  தெரிவித்திருப்பார். தம்பி படத்துக்குப் பின் மாதவன் – சீமான் கூட்டணி வாழ்த்துகள் என்ற படத்தில் இணைந்தனர். ஆனால் அப்படம் படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Source link
• minister PTR palanivel thiyagarajan says technology good impact education | கல்வித்துறையில் தொழில் நுட்பம் பல பாய்ச்சல்களை நிகழ்த்தியுள்ளது
minister PTR palanivel thiyagarajan says technology good impact education | கல்வித்துறையில் தொழில் நுட்பம் பல பாய்ச்சல்களை நிகழ்த்தியுள்ளது
தமிழ்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இவர் தற்போது தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இவர் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கே.ஒய்.என். ஹூட் டெக்னாலாஜிஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள KYN என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.
தொழில்நுட்ப வளர்ச்சி:
பின்னர், இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது, “தொழில்நுட்பம் பல்வேறு நாடுகள், சமூகங்கள் மட்டுமில்லாது தனி நபர்களுக்கும் முன்னேற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக கல்வித்துறையில் தொழில்நுட்பம் பல்வேறு பாய்ச்சல்களை நிகழ்த்தியுள்ளது. ஒருகாலத்தில் படிப்பதற்கே பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த நிலை மாறி, தற்போது பட்டயக் கல்வியைக் கூட இலவசமாக இணையத்தில் படிக்க முடிகிற நிலை ஏற்பட்டுள்ளது.
அப்படியான ஒரு சூழலில் KYN App அறிமுகவிழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு சமூக வலைதளம் உள்ளூர் தொழில்முனைவோர், உள்ளூர் திறமையாளர்கள், சமூக குழுக்கள் என ஒருவருக்கொருவர்  தொடர்புகொள்ள வழி அமைத்துக்கொடுக்கும் என்பதை எண்ணும்போதே பெருமையாக இருக்கிறது. இதன் மூலம், ஆரோக்கியமான இணைய சமூகம், இணைய பயன்பாடு நிச்சயம் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.”
இவ்வாறு அவர் பேசினார்.
சித்தார்த், மாதவன் பங்கேற்பு:
இந்த செயலி அறிமுக நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மட்டுமின்றி மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன், நடிகர்கள் சித்தார்த், மாதவன்2, கே.ஒய்.என். நிறுவன தலைமைச் செயல் அதிகாரி காயத்ரி தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2000ம் ஆண்டிற்கு பிறகு தொழில்நுட்ப வளர்ச்சி உலகம் முழுவதும் அதீத வேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்தியாவிலும் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அடங்கும். தமிழ்நாடு அரசும் இணையதள வளர்ச்சியை மக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வருகிறது. அதற்காக கோடிக்கணக்கில் முதலீடுகளை ஆண்டுதோறும் செய்து வருகிறது.
இணையதள தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை ஆண்டுதோறும் நடவடிக்கை எடுத்து வருகிறது. நிதிநிலை அறிக்கையிலும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக கோடிக்கணக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: Crime: மது பழக்கத்தால் நடந்த விபரீதம்.. மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த கர்ப்பிணி.. என்ன நடந்தது?
மேலும் படிக்க:  Trisha: அருவருப்பாக உள்ளது! அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை – நடிகை திரிஷா அறிவிப்பு
மேலும் காண
Source link
• Shaitaan Movie Teaser Is Out Jyotika R Madhavan Ajay Devgan Cinema Update
Shaitaan Movie Teaser Is Out Jyotika R Madhavan Ajay Devgan Cinema Update
நடிகை ஜோதிகா, நடிகர்கள் மாதவன், அஜய் தேவ்கன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள ‘ஷைத்தான்’ (Shaitaan Teaser) படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்த திகில் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஷைத்தான். இந்தப் படத்தின் மூலம் நடிகை ஜோதிகா பல ஆண்டுகளுக்குப் பின் நேரடியாக பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கிறார்.
முன்னதாக வெளியான இப்படத்தின் போஸ்டர் பில்லி, சூனிய உருவ பொம்மைகளுடன் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகரிட்த்தது. இந்நிலையில், தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஷைத்தான் எனும் பெயருக்கேற்றபடி, ஷைத்தான் இந்த டீசரில் உரை நிகழ்த்துவது போல அமைந்துள்ள நிலையில், ஆக்கும் சக்தி, அழிக்கும் சக்தி, நரகத்தை ஆள்பவன், நானே விஷம், நானே மருந்து என அமானுஷ்ய வசனங்களுடன் தொடங்கி, பரபரப்பை ஏற்படுத்துகிறது.
மேலும் “ஒரு விளையாட்டு விளையாடலாமா?” என பில்லி சூனிய பொம்மை, மாதவன் சிரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், ஜோதிகாவும், அஜய் தேவ்கனும் அரண்டு நிற்கும் காட்சிகளும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளன.
திகில் காட்சிகள் மற்றும் மாதவனின் அச்சுறுத்தும் குரலுடன் வெளியாகியுள்ள இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.
வரும் மார்ச் 8ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
Source link
• Ajay Devgn Madhavan Jyothika Starring Super Natural Shaitaan Movie First Look And Relase Date Official Announcement
Ajay Devgn Madhavan Jyothika Starring Super Natural Shaitaan Movie First Look And Relase Date Official Announcement
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக அஜய் தேவ்கன் நடிப்பில் விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர் நேச்சுரல் திரைப்படம் ‘ஷைத்தான்’. இப்படத்தில் நடிகர் அஜய் தேவ்கனுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர் நடிகர் மாதவன் மற்றும் நடிகை ஜோதிகா. ஷைத்தான் திரைப்படத்தை அஜய் தேவ்கன், ஜோதி தேஷ்பாண்டே, குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் இணைந்து தயாரித்துள்ளனர்.  இப்படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
நடிகை ஜோதிகா தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் ஷைத்தான் படத்தின் போஸ்ட்டரை வெளியிட்டு  ஷைத்தானின் எழுச்சியை காணும் நேரம் இது. மார்ச் 8ஆம் தேதி திரையரங்கில் படம் வெளியாகிறது” என்ற குறிப்புடன் வெளியிட்டுள்ளார்.
#Shaitaan is coming for you. Taking over cinemas on 8th March 2024.@ActorMadhavan #Jyotika @imjankibodiwala #JyotiDeshpande @KumarMangat @AbhishekPathakk #VikasBahl @jiostudios @ADFFilms @PanoramaMovies @PanoramaMusic_ pic.twitter.com/MIaL2qqTuc
— Ajay Devgn (@ajaydevgn) January 19, 2024
‘ஷைத்தான்’ படத்தின் போஸ்டரில் பில்லி சூனிய உருவ பொம்மைகளை இடம்பெற்றுள்ள நிலையில், அமானுஷ்ய திரைப்பட பாணியில் இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜய் தேவ்கன் அடுத்த ப்ராஜெக்ட்ஸ் :
இப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜய் தேவ்கன் மைதான் மற்றும் ஆரோ மே கஹா தம் தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் ரெய்டு 2 , டி டி பியார் டி சீக்வெல், சிங்கம் அகெய்ன் மற்றும் சன் ஆஃப் சர்தார் 2 உள்ளிட்ட படங்களிலும் நடிக்க உள்ளார். அஜய் தேவ்கன் மிகவும் பிஸியான ஷெட்யூல் பாலோ செய்து வருகிறார்.
Source link
• Madhavan Photos : வயதானாலும் வசீகரம் குறையாத நடிகர் மாதவனின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்..!
Madhavan Photos : வயதானாலும் வசீகரம் குறையாத நடிகர் மாதவனின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்..!
Madhavan Photos : வயதானாலும் வசீகரம் குறையாத நடிகர் மாதவனின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்..!
Source link