Tag: பிரியா பவானி சங்கர்

  • vishals rathnam movie trailer | ////Rathnam Trailer : ஹரி இயக்கத்தில் விஷாலின் ரத்னம் படத்தின் டிரைலர் இதோ
    vishals rathnam movie trailer | ////Rathnam Trailer : ஹரி இயக்கத்தில் விஷாலின் ரத்னம் படத்தின் டிரைலர் இதோ


    தாமிரபரணி , பூஜை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் விஷால் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ரத்னம் (Rathnam).
    மூன்றாவது முறையாக ஹரி – விஷால் கூட்டணி
    விறுவிறுப்பான ஆக்‌ஷன் படங்களுக்காக பெயர்போனவர் இயக்குநர் ஹரி. சாமி, அருள், ஆறு, வேங்கை, சிங்கம் என இவர் இயக்கிய படங்களுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. ஹரி – விக்ரம் , ஹரி – சூர்யா ஆகிய கூட்டணியில் வெளியான படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. இதே வரிசையில் விஷால் – ஹரி கூட்டணியில் வெளியான தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய இரு படங்களும் சிறப்பான வெற்றிபெற்றன. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு விஷால் மற்றும் ஹரி கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ரத்னம். 
     ரத்னம்
    கிருஷ்ணா, பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, கெளதம் மேனன், யோகிபாபு இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்சு பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வரும் ஏப்ரல் 23ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

    Presenting the blasting action trailer of #Rathnam 🔥 in theatres on APRIL 26TH! Tamil – https://t.co/ICmgSPHpX7Telugu – https://t.co/MvPYH6RQc2 Starring Puratchi Thalapathy @VishalKOfficial. A film by #Hari.A @ThisisDSP musical. @stonebenchers @ZeeStudiosSouth… pic.twitter.com/opKDvARDlR
    — Stone Bench (@stonebenchers) April 15, 2024

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியது . தொடர்ந்து ஜூலையில் தொடங்கிய படப்பிடிப்புதூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்றது. 2024 ஆண்டு ஜனவரி மாதம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டது. இப்படம் விஷால் நடிப்பில் வெளியாகும் 34ஆவது படமாகும்.

    மேலும் காண

    Source link

  • Actor Kamalhassan Indian 2 Movie to be released on June month See Details
    Actor Kamalhassan Indian 2 Movie to be released on June month See Details


    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூன் மாதம்   வெளியாக இருக்கிறது.
    இந்தியன் 2
    ஷங்கர் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல்ஹாசன் நடித்து கமர்ஷியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களில் இந்தியம் படம் முக்கியமானது. தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.
    இந்தியன் 2 படக்குழு
    லைகா ப்ரெடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். கமல்ஹாசன், ரகுல் ப்ரித் சிங், காஜல் அகர்வால், சித்தார்த் , பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டவர்களும் மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பையும் கையாண்டுள்ளார்கள்.
    கடந்த 2019 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கயது. சென்னை , ராஜமுந்திரி, போபால் , க்வாலியர், தைவான், ஜோகன்ஸ்பேர்க் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா நோய்த் தொற்று பரவலான் இந்தியன் 2 படப்பிடிப்பு தடைபட்டது. பல்வேறு சவால்களைக் கடந்து தற்போது இப்படம் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது.
    இந்தியன் 2 ரிலீஸ்

    Gear up for the comeback of Senapathy!🤞INDIAN-2 🇮🇳 is all set to storm in cinemas this JUNE. Mark your calendar for the epic saga! 🫡🔥#Indian2 🇮🇳🌟 #Ulaganayagan @ikamalhaasan🎬 @shankarshanmugh🎶 @anirudhofficial📽️ @dop_ravivarman✂️🎞️ @sreekar_prasad🛠️ @muthurajthangvl… pic.twitter.com/kwiKyAcNta
    — Lyca Productions (@LycaProductions) April 6, 2024

    பல்வேறு காரணங்களால் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்பட்டது. அடுத்தபடியாக மக்களவை தேர்தல் தேதி காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. ஒருவழியாக படத்தின் ரிலீஸ் தேதியை திட்டவட்டமாக தற்போது அறிவித்துள்ளது படக்குழு. வரும் ஜூன் இந்தியன் 2 வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தெரிவித்துள்ளது.

    மேலும் காண

    Source link

  • Priya Bhavani Shankar Photos : சுவிட்சர்லாந்த் பனியில் பிரியா பவானி ஷங்கர் எடுத்துக்கொண்ட சில் க்ளிக்ஸ்!
    Priya Bhavani Shankar Photos : சுவிட்சர்லாந்த் பனியில் பிரியா பவானி ஷங்கர் எடுத்துக்கொண்ட சில் க்ளிக்ஸ்!


    Priya Bhavani Shankar Photos : சுவிட்சர்லாந்த் பனியில் பிரியா பவானி ஷங்கர் எடுத்துக்கொண்ட சில் க்ளிக்ஸ்!

    Source link

  • Rathnam : முடிவடைந்தது 'ரத்னம்' படத்தின் ஷூட்டிங்… படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
    Rathnam : முடிவடைந்தது 'ரத்னம்' படத்தின் ஷூட்டிங்… படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!


    Rathnam : முடிவடைந்தது ‘ரத்னம்’ படத்தின் ஷூட்டிங்… படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

    Source link

  • Vishal Promotes Rathnam Through Social Media By Hitting The Drunkards Who Came To Tasmac Set
    Vishal Promotes Rathnam Through Social Media By Hitting The Drunkards Who Came To Tasmac Set

     
    தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோ விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக 100 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது ஹரி இயக்கத்தில் ‘ரத்னம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஷால். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி,கௌதம் மேனன், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
     

    நடிகர் விஷால் சமீப காலமாக சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறார். அந்த வகையில் வெளிநாட்டில் இளம் பெண் ஒருவருடன் விஷால் காணப்பட்டதும் அவரை வீடியோ எடுக்கிறார்கள் என தெரிந்ததும் தலைதெறிக்க ஓடும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலானது. கடைசியில் அது வெறும் பிராங்க்  என தகவல்கள் வெளியாகின.  
    அதேபோல டாஸ்மாக் கடை வெளியில் நீண்ட வரிசையில் நின்று கொண்டு இருந்தவர்களை விஷால் விரட்டி அடிக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதில் விஷால் ஒருவரிடம் சென்று “ஏற்கனவே போதையில் இருக்க? இதுல சரக்கா? இது என்னனு நினைச்ச நீ?” என அந்த போதை அசாமியிடம் கேட்க அவன் “டாஸ்மாக்” என சொல்ல “அட லூசு, இது ரத்னம் படத்தோட செட்.. போய்யா போ போ” என அங்கிருந்த அனைவரையும் விரட்டி அடித்து “டாஸ்மாக்குனு பேர் போட்டாலே வந்து நிக்கிறது” என விஷால் சொல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.  
     

    இந்த வீடியோவை பார்க்கும் போதே படத்தோட ஷூட்டிங் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இருப்பினும் சமூக வலைத்தளங்களில் இது பகிரப்பட்டதால் விஷால் நியாயம், தர்மத்திற்காக குரல் கொடுக்கிறார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டி கேட்கிறார் ஆஹா ஓஹோ என பாராட்டி தள்ளி விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். 
     

     
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘ரத்னம்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது ரத்னம் படக்குழு. அதன் தொடர்ச்சியாக ரத்னம் படத்தின் விளம்பரத்துக்காக குடிமகன்களை, விஷால் ட்ரோல் செய்வது போல வெளியான இந்த வீடியோ சோசியல் மீடியாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாக பகிரப்பட்டு வருகிறது.  
    அவ்வப்போது இப்படி ஏதாவது ஓன்றை செய்து மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகன டெக்னிக் இது. என்றுமே அவர்களை பற்றின செய்தி மக்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் மறந்து விடுவார்கள்.     

    Source link