பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மறுத்த தேவகவுடா… அதிர்ச்சித் தகவல்…
பிரதமர் மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா அறிவித்துள்ளார். இந்தியாவின் பிரதமராக, மூன்றாவது முறையாக மோடி பதவியேற்க உள்ளார். அதற்கான நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளதால், அண்டை நாடுகளின் தலைவர்கள், பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள்…
