18வது மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதியில் இருந்து நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலிக்கு தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வந்தார்.

அப்போது அவர் பேசுகையில், சென்னை – நெல்லை இடையிலான வந்தேபாரத் ரயிலானல் இந்த பகுதி அதிகப்படியான வளர்ச்சியை சந்தித்துள்ளது. தமிழ் புத்தாண்டு தினத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தெற்கிலும் புல்லட் ரயில் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளோம். தமிழ் மொழி மற்றும் தமிழ் பாரம்பரியத்தை விரும்புபவர்களின் முதல் தேர்வாக பா.ஜ.க மாறியுள்ளது. தமிழகத்தின் புராதான சின்னங்கள் உலகப் புகழ் பெறும். தமிழ்நாட்டின் மகளிர் மோடிக்கு ஆதரவளிப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றனர். மோடிக்கு பெண்கள் மத்தியில் இவ்வளவு ஆதரவு இருப்பதைப் பார்த்து ஆய்வாளர்களே ஆச்சரியப்படுகின்றனர். திருவள்ளுவர் கலச்சார மையம் உலகம் முழுவதும் தொடங்கப்படவுள்ளது.

தமிழ்நாட்டு பெண்களின் சிரமத்தை உணர்ந்து அதனை துடைக்கும் செயலில் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம். தேசத்தை விரும்புபவர்களின் முதல் தேர்வாக பா.ஜ.க உள்ளது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை தி.மு.க தொடர்ந்து அவமதித்துக் கொண்டு உள்ளது. காமராஜரை தி.மு.க.,வும் காங்கிரஸ் கட்சியும் அவமதித்துக் கொண்டு உள்ளது. தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கும் நரேந்திர மோடிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

40 ஆண்டுகளுக்கு முன்னர் தி.மு.கவும் காங்கிரஸ் கட்சியும் திரை மறைவில் செய்ததை வெளிச்சம் போட்டுக்காட்டியது பா.ஜ.க தான். கச்சாத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது யார்? உங்கள் ஆசிர்வாதத்தால் ஊழல்வாதிகளுடன் சேர்ந்து பேதைப் பொருள் கடத்தல் காரர்களையும் எதிர்ப்பேன்” என பேசினார்.

Tag: பிரதமர் நரேந்திர மோடி

PM Modi Speech: ”தெற்கில் புல்லட் ரயில்சேவை தொடங்கப்படும்” – நெல்லையில் பிரதமர் மோடி கியாரண்டி

PM Modi TN Visit: பிரதமர் மோடி வருகை; வேலூரில் போக்குவரத்து மாற்றம் ட்ரோன்கள் பறக்க தடை

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நாளை பிரச்சாரம் செய்கிறார். இதையொட்டி வேலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் பத்தாம் தேதி அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குடியாத்தத்தில் இருந்து காட்பாடி வழியாக சென்னை செல்லும் கனரா வாகனங்கள்

குடியாத்தம் , வடுகதாங்கல் , காட்பாடி சித்தூர் பஸ்ஸ்டாப் , EB தட்டு ரோடு ராணிப்பேட்டை வழியாக சென்னைக்கு பயணிக்கலாம்

திருவண்ணாமலையிலிருந்து வேலூர் வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் செல்லும் வாகனங்கள்

சாத்து மதுரை, பென்னாத்தூர், ஸ்ரீபுரம் கூட்ரோடு, கந்தேனேரி, பள்ளிக்கொண்டா, குடியாத்தம், பரதராமி வழியாக செல்ல சித்தூர் செல்ல வேண்டும்.

திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக சென்னை செல்லும் கனரக வாகனங்கள்

சாத்து மதுரை, பென்னாத்தூர், ஸ்ரீபுரம் கூட்ரோடு ,கந்தேனேரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு பயணிக்கலாம்.

சித்தூரில் இருந்து வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும் கனரக வாகனங்கள்

நஹரிப்பேட்டை, EB கூட்ரோடு திருவலம், ராணிப்பேட்டை ஆற்காடு திமிரி ஆரணி வழியாக திருவண்ணாமலை செல்லலாம்.

சித்தூரில் இருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள்

நஹரிப்பேட்டை ,EB கூட்ரோடு திருவலம், ராணிப்பேட்டை வழியாக சென்னைக்கு செல்லலாம்.

சித்தூரில் இருந்து வேலூர் வழியாக பெங்களூர் செல்லும் கனரக வாகனங்கள்

கிறிஸ்டியன் பேட்டை காட்பாடி குடியாத்தம் ரோடு சந்திப்பு குடியாத்தம் வி கோட்டா வழியாக பெங்களூர் பயணிக்கலாம்.

மேற்கண்ட வழிகளில் பயணிக்கும் கனரக வாகன ஓட்டுநர்கள் வாகன நெரிசலை தவிர்க்க முழு ஒத்துழைப்பை அளிக்குமாறும் மேலும் பொதுமக்கள் தங்கள் பயணிக்கும் திட்டத்தை அதற்கு ஏற்றார் போன்று மாற்றி அமைத்துக் கொண்டு பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

NAMO DRONE DIDI YOJANAPM Modi to give thousand drones on March 11; Garuda Aerospace provides free training to rural women
விவசாய மேம்பாட்டிற்காக,, இந்தியா முழுவதும் வரும் மார்ச் 11ஆம் தேதி, 11 இடங்களில், 1000 ட்ரோன்களை பிரதமர் மோடி வழங்க இருக்கிறார். இந்த ட்ரோன் பயிற்சி முற்றிலுமாக இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என்று தமிழகத்தைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசுடன் இணைந்து, “நமோ ட்ரோன் திதி யோஜனா ( NAMO DRONE DIDI YOJANA) திட்டத்தின் மூலம் மகளிருக்கு இலவச ட்ரோன் பயிற்சியை வழங்கி கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதில், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றுவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஷ்யாம்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கருடா ஏரோஸ்பேஸ் அலுவலகத்தில் அதன் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஷ்யாம்குமார், மற்றும் குழுவினருடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் ட்ரோன் மூலமாக விவசாய துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், விவசாயத்தில் அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகளின் தேவைகளை மிக எளிதாக பூர்த்தி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய அரசுடன் இணைந்து “நமோ ட்ரோன் திதி யோசனா” திட்டத்தின் மூலமாக இந்தியாவில் சுமார் 1000பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என தெரிவித்தார். அதில் தென்னிந்தியாவிலிருந்து கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் மூலமாக சுமார் 446 ட்ரோன்கள் வழங்கப்பட இருக்கிறது. அது மட்டுமல்லாது சுமார் 500 நபர்களுக்கு கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஏற்கனவே ட்ரோன் பயிற்சி அளித்துள்ளது என்றார். மேலும், தற்போது வழங்க இருக்கும் இந்த பயிற்சி மூலமாக கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இந்தியா முழுவதும் வரும் மார்ச் 11ஆம் தேதி, 11இடங்களில், 1000 ட்ரோன்களை பிரதமர் ட்ரோன்களை வழங்க இருக்கிறார். இந்த ட்ரோன் பயிற்சி முற்றிலுமாக இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவித்த அவர், தற்போது, கருடா ஏரோஸ்பேஸ் மூலமாக சென்னையை அடுத்த நாவலூர் பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
முதற்கட்டமாக அவர்களுக்கு அக்ரி ட்ரோன் மூலமாக ஸ்பிரே எவ்வாறு தெளிக்கப்படுகிறது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்றார். இந்த பயிற்சிக்கு அவர்கள் 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பாஸ்போர்ட் அல்லது பேன்கார்டு அல்லது அரசு அங்கீகார அடையாள அட்டை ஏதேனும் ஒன்று வைத்திருக்க வேண்டும். குறிப்பாக 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்,எந்தவித கட்டணமும் கிடையாது,முற்றிலும் இலவசம் என குறிபிட்டார்.
இந்த வாய்ப்பின் மூலம் பெண்களும் விவசாயத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக பார்க்கப்படுவார்கள் என நம்பிக்கையுடன் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, நமோ ட்ரோன் திதி யோஜனா போன்ற முன்முயற்சிகள் மூலம், கிராமப்புற சமூகங்களில் பொருளாதார மேம்பாட்டை மேம்படுத்துவதில் கருடா ஏரோஸ்பேஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்..
தற்போது கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் மூலமாக, மேரி, லட்சுமி தேவி, ஜோதி மற்றும் சுனிதா ஆகியோர் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிட்டத்தக்கது. கருடா ஏரோஸ்பேஸ் மூலமாக பயிற்சி பெற்று வரும் மேரி என்பவர் கூறுகையில், எங்களுக்கு தயக்கமாக இருந்தாலும், ட்ரோனை கையாளுவது, தொழில்நுட்பத்தை எளிதாக எவ்வாறு எதிர்கொள்வது என்பது போன்று பயிற்சி வழங்கப்பட்டது என்றார். தற்போது தைரியமாக நாங்களும் தொழில்நுட்பத்தை கையாள்வோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது என்றும் தெரிவித்தார். கருடா ஏரோஸ்பேஸின் நமோ ட்ரோன் திதி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வானிலிருந்து வயல்களுக்கு கருடா ஏரோஸ்பேஸ் ட்ரோன் தொழில்நுட்பத்துடன் பெண் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் 500 பெண்கள் பயிற்சி பெற்றிருக்கின்றனர்.446 ட்ரோன்கள் இன்றுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் காண

I.N.D.I. Aliance Leaders Were Like 3 Monkeys Of Gandhiji’: PM Modi In Bengal Slams Mamata Govt Over Sandeshkhali
PM Modi: மேற்குவங்கத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, I.N.D.I.A. கூட்டணி தலைவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி:
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தின் ஆரம்பாக் பகுதியில் ரூ.7,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ரூ.2,790 கோடி மதிப்பிலான 518 கிமீ தூரத்திற்கான ஹால்தியா-பரௌனி கச்சா எண்ணெய் குழாய் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்த பைப்லைன் ஆனது பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் வழியாக, பராவ்னி, போங்கைகான் மற்றும் கவுஹாத்தி ஆகிய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு குறைந்த செலவிலும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான முறையிலும் கச்சா எண்ணெயை கொண்டு செல்வதற்கு உதவுகிறது.
மம்தா பானர்ஜியை கடுமையாக சாடிய மோடி:
திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, “சந்தேஷ்காலியின் சகோதரிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் செய்ததை நாடே பார்க்கிறது. நாடு முழுவதும் கோபத்தில் உள்ளது. சந்தேஷ்காலியில் நடந்த சம்பவத்தால் ராஜா ராம் மோகன் ராயின் ஆன்மா வேதனை அடைந்திருக்க வேண்டும். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்க மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. மக்கள் உரத்த குரலில் பேசுகிறார்கள். அவர்களுக்கு பாஜக வேண்டும். சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களை விட சிலரின் வாக்கு முக்கியமா என்று மேற்கு வங்காள மக்கள் தங்கள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கேட்கிறார்கள்.
#WATCH | PM Modi attacks TMC on Sandeshkhali issue while addressing a public rally in West Bengal’s Arambagh He says, “…’Har chot ka jawab vote se dena hai’. Today, the people of West Bengal are asking their CM ‘Didi’- is the vote of some people more important than atrocities… pic.twitter.com/5yjJWVgxx6
— ANI (@ANI) March 1, 2024I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்கள் மீது பாய்ச்சல்:
I.N.D.I.A. கூட்டணியின் உயரிய தலைவர்கள் அனைவரும் சந்தேஷ்காலி சம்பவத்தில் அமைதியாக இருந்தனர். காந்தியின் மூன்று குரங்குகளைப் போல இந்திய அணித் தலைவர்கள் தங்கள் கண்களையும், காதுகளையும், வாயையும் மூடிக் கொண்டுள்ளனர் . அவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை மற்றும் எங்கும் கூட்டங்களை நடத்துகிறார்கள். ஆனால் காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்கும் வங்காளத்தில் திரிணாமுல் அரசைக் கேள்வி கேட்க தைரியம் இல்லை. அவர்கள் சந்தேஷ்காலியின் பக்கம் முகத்தைத் கூட திருப்பவில்லை.
இது வங்காளத்திற்கும், அதன் கலாச்சாரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் அவமானம் இல்லையா? இதுதான் இந்தியக் கூட்டத்தின் உண்மை. அவர்கள் ஊழல்வாதிகள், குடும்ப மற்றும் சமாதான அரசியலில் நம்பிக்கை கொண்டவர்களைக் காப்பாற்றுகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் ஊழலின் புதிய மாதிரியை அமைத்துள்ளது. அந்த கட்சி தலைவர்களின் வீடுகளில் கண்டெடுக்கப்பட்ட நோட்டுக் கட்டுகளைப் பார்த்தீர்களா? சினிமாவில் கூட இவ்வளவு பணத்தைப் பார்த்திருக்கமாட்டீர்கள்” என பேசியுள்ளார். முன்னதாக, பாஜக ஆட்சி அமைந்த பிறகு முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் பிரதமர் மோடி பட்டியலிட்டு பேசியது குறிப்பிடத்தகக்து.மேலும் காண

UAE's Hindu Temple: பிரதமர் மோடி திறந்து வைக்கும் இந்து கோயில்! அபுதாபியில் ஏற்பாடுகள் மும்முரம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பாரம்பரிய இந்து கோவிலை வரும் -14ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

அமீரகத்தில் இந்து கோயில்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலாக போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் மந்திர்(BPAS), அபுதாபியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இது அந்நாட்டில் உள்ள கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையைக் குறிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான நட்பை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. கோவில் கட்டுவதற்கான சுமார் 900 கோடி ரூபாய் செலவையும், 27 ஏக்கர் நிலத்தையும் அமீரக அரசே வழங்கியுள்ளது என்பது அங்குள்ள இந்துக்களை நெகிழ வைத்துள்ளது.

கோயில் கட்டுமான பணிகள்:

1997ம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் விளைவாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலை கட்டுவதற்கான நிலத்தை வழங்குவதாக கடந்த 2015ம் ஆண்டு அந்நாட்டு அரசு அறிவித்தது தொடர்ந்து, 2019ம் ஆண்டு கோயில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இக்கோயிலில் சுவாமி ‌நாராயணன் ,ராதா கிருஷ்ணர், சீதா ராமர், சிவான் பார்வதி, ஜெகநாதர், வெங்கடாஜலபதி, அய்யப்பன் உள்ளிட்ட கடவுள் சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த 7 சன்னதிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தின் 7 ராஜ்ஜியங்களை குறிக்கும் படி கட்டப்பட்டுள்ளன. கோவிலின் ஒவ்வொரு தூணிலும் ராமாயணம், சிவபுராணம், பகவத்கீதை மற்றும் மகாபாரத வரலாற்று புராணங்களை வடித்து உள்ளனர். இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் வெள்ளை பளிங்கு ஆகியவை முறையே ராஜஸ்தான் மற்றும் இத்தாலியில் இருந்து பெறப்பட்டு, கோயில் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

4 லட்ச மணி நேர உழைப்பு:

இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பல்வேறு அம்சங்களை சித்தரிக்கும் கலைநயமிக்க வடிவங்கள், உருவங்கள் மற்றும் சிற்பங்களை இந்தியாவைச் சேர்ந்த 1,500 க்கும் மேற்பட்ட திறமையான கலைஞர்கள் செதுக்கி தந்துள்ளனர். இந்த கோயிலை கட்டி முடிக்க 4 லட்சம் மணி நேர உழைப்பு தேவைப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதி கோவில் திறக்கப்பட்டாலும் 18-ம் தேதி முதலே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். கோவில் திறப்பு விழாவுக்கான கடைசி கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Pariksha Pe Charcha: போனுக்கு சார்ஜ் போடுவதுபோல உடலுக்கும் சார்ஜ் செய்யுங்கள்: மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

போனுக்கு சார்ஜ் போடுவதுபோல உடலையும் சார்ஜ் செய்யுங்கள் என்று மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

7ஆவது ஆண்டாக பரிக்‌ஷா பே சார்ச்சா

2018-ம் ஆண்டில் இருந்து ’பரிக்‌ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 7ஆவது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள mygov.in என்ற இணையதளத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் முன்பதிவு செய்தனர். வழக்கமாக இதற்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி வைக்கப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம்.

இந்த நிலையில் 205.62 லட்சம் அதாவது 2.05 கோடி மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக 14 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்களும் விண்ணப்பித்து உள்ளனர்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, ‘’தேர்வு பதற்றம் குறித்து மாணவர்கள், தங்களின் ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் பேசும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

சுற்றியுள்ளவர்கள் செய்வதைப் பற்றி கவலைப்படாதீர்கள். போனுக்கு சார்ஜ் போடுவதுபோல உடலுக்கும் சார்ஜ் செய்யுங்கள். போதிய உறக்கம் முக்கியம். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனம் ஆரோக்கியமாக இருக்கும். மனம் ஆரோக்கியமாக இருந்தால் வெற்றி நிச்சயம்.

அறிவாளிகளை, கடின உழைப்பாளிகளை நண்பர்களாக்கினால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

மாணவர்கள் தங்களை நம்பவில்லை. அவர்களுக்கு குழப்பம் இருப்பது தெரிகிறது. இந்தப் போக்கை மாற்றவேண்டும்.

மாணவர்கள் பிறரைப் போட்டியாக நினைக்காதீர்கள். உங்களுடனே போட்டி போடுங்கள்’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டம்.. நாளை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!

உச்சநீதிமன்றத்தின் டிஜிட்டல் அறிக்கைகள், டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்சநீதிமன்றத்தின் புதிய இணையதளம் போன்ற பல்வேறு தொழில்நுட்ப முயற்சிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

இந்திய உச்ச நீதிமன்றம் ஜனவரி 28 ஆம் தேதி அதன் நிறுவப்பட்ட வைர விழாவைக் கொண்டாட உள்ளது. 1950ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி உச்ச நீதிமன்றக் கட்டிடம் எதுவும் இல்லாததால், இந்திய உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றக் கட்டிடத்தில் திறக்கப்பட்டது.

1950ஆம் ஆண்டு அசல் அரசியலமைப்பு இந்திய தலைமை நீதிபதி மற்றும் ஏழு நீதிபதிகளை மட்டுமே கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் 1950-ல் இருந்து நீதிபதிகளின் எண்ணிக்கையை 6 முறை அதிகரித்து 2019-ல் தற்போதைய பலமாக 34 ஆக உயர்த்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, ஜனவரி 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நாளை) உச்ச நீதிமன்றத்தில் வைர விழா கொண்டாடப்பட உள்ளது. அதன் நினைவாக நாளை கூடுதல் கட்டிட வளாக ஆடிட்டோரியத்தில் நடைபெறும் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த விழாவில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கலந்து கொள்கிறார்.

உச்ச நீதிமன்றத்தின் 75-வது ஆண்டை தொடங்கி வைக்கும் பிரதமர், உச்சநீதிமன்றத்தின் டிஜிட்டல் அறிக்கைகள்,டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்சநீதிமன்றத்தின் புதிய இணையதளம் உள்ளிட்ட மக்களை மையமாகக் கொண்ட தகவல் மற்றும் தொழில்நுட்ப முன்முயற்சிகளைத் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றுகிறார்.

உச்ச நீதிமன்ற டிஜிட்டல் அறிக்கைகள் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை நாட்டின் மக்களுக்கு இலவசமாகவும், மின்னணு வடிவத்திலும் கிடைக்கச் செய்வதே. டிஜிட்டல் அறிக்கைகளின் முக்கிய அம்சமாகும். இதன்படி, 1950ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற அறிக்கைகளின் 36,308 வழக்குகளை உள்ளடக்கிய அனைத்து 519 தொகுதிகளும், டிஜிட்டல் வடிவத்தில், புக்மார்க் செய்யப்பட்ட, பயனருக்கு ஏற்றதாக மற்றும் திறந்த அணுகலுடன் கிடைக்கும்.

மின்-நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் மின்னணு வடிவத்தில் நீதிமன்ற பதிவுகளை மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளுக்கு கிடைக்கச் செய்வதற்கான ஒரு முயற்சியே டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 என்பதாகும். இது நிகழ்நேர அடிப்படையில் பேச்சு மொழியை எழுத்து வடிவில் படியெடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் புதிய இணையதளத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். புதிய இணையதளம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இருமொழி வடிவத்தில் பயனருக்கு ஏற்றவகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.