Tag: பிக் பாஸ் 7

• Pandian stores bigg boss 7 fame saravana vickram latest photos in social media has shocked his fans

Pandian stores bigg boss 7 fame saravana vickram latest photos in social media has shocked his fans

சினிமா, தொலைக்காட்சி மட்டுமே பொழுதுபோக்கு அம்சமாக இருந்த நிலை மாறி, ட்விட்டர், யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என மக்களை எந்த நேரமும் போனும் கையுமாக சுற்றவைத்துள்ளது இன்றைய டெக்னாலஜி. அதிலும் யூடியூப் மூலம் இப்போது சாமானிய மக்களும் சம்பாதிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளனர்.
அப்படி யூடியூப், டிக் டாக் மூலம் பிரபலமான பலரும் சின்னத்திரை, வெள்ளித்திரை என கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் ஒரு யூடியூபராக இருந்து சின்னத்திரையில் வாய்ப்பு பெற்று இன்று ஒரு பிரபலமான செலிபிரிட்டியாக இருப்பவர் சரவண விக்ரம்.

யூடியூப் மூலம் பிளாகிங், சமையல் மற்றும் டிராவல் வீடியோக்களைப் பகிர்ந்து வந்த சரவண விக்ரமுக்கு ஏராளமான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.  விஜய் டிவியின் மிகவும் பிரபலமான தொடரான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் – தம்பிகளில் கடைக்குட்டி தம்பி கண்ணனாக சரவண விக்ரம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
அந்த சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அவரின் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வகையில் அவரை மையப்படுத்தி கதைக்களத்தில் சில போர்ஷன் அமைக்கப்பட்டு இருந்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தன்னுடைய ரீல் ஜோடியான விஜே தீபிகாவுடன் இணைந்து ஏராளமான ரீல்ஸ் எல்லாம் போஸ்ட் செய்து இருந்தார். சரவண விக்ரமுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நல்ல ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது.

அதைத் தொடர்ந்து “பிக்பாஸ் சீசன் 7” நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக என்ட்ரி கொடுக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கும் ஏராளமான ஏச்சுகளுக்கும் பேச்சுகளுக்கும் ஆளானார். அதிகமாக மிக்சர், காமெடி பீஸ், டைட்டில் வின்னர் விக்ரம்  என்றெல்லாம் ட்ரோல் செய்யபட்டார்.
பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும் 84 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு சோசியல் மீடியாவில் பெரிய அளவில் தலைகாட்டாமல் இருந்த சரவண விக்ரம் தற்போது ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் சரவண விக்ரமுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தலை நிறைய முடியும் தாடியுமாக பார்க்கவே மிகவும் வித்தியாசமாக, ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி போய் இருக்கிறார் சரவண விக்ரம். சமீபத்தில் தனக்கு மிகவும் பிடித்தமான நடிப்புத்தொழில் இருந்தும் விலகுவதாகத் தெரிவித்து பின்னர் அவரே அதை டெலீட் செய்தார்.
இப்படி அவர் போட்டோஸ் போஸ்ட் செய்ய என்ன காரணம்? உண்மையிலேயே அவர் இனி நடிக்க மாட்டாரா என ரசிகர்கள் அவரின் பதிலுக்காக காத்திருக்கிறார்கள்.

மேலும் காண

Source link

• Manichandra: “ரவீணா சொல்றது உண்மையில்லை, நட்பை தாண்டிய ஒரு உறவு இருந்துச்சு” – கலங்கிய மணிச்சந்திரா!

Manichandra: “ரவீணா சொல்றது உண்மையில்லை, நட்பை தாண்டிய ஒரு உறவு இருந்துச்சு” – கலங்கிய மணிச்சந்திரா!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவு பெற்றது. இந்த சீசன் டைட்டில் வின்னராக அர்ச்சனாவும், ரன்னர் அப்பாக மணிச்சந்திராவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு மணிச்சந்திரா முதன்முறையாக யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் தனக்கும் ரவீணாவுக்கும் இடையே இருந்த உறவு குறித்து மிகவும் வெளிப்படையாக பேசி உள்ளா மணிச்சந்திரா.

எனக்கும் ரவீணாவுக்கும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்னரே நல்ல ஒரு நட்பு இருந்தது. அவங்க பிக்பாஸ் வீட்டுக்கு வராங்க என்ற விஷயம் எனக்கு கடைசி நேரத்தில் தான் தெரியவந்தது. அப்போ எனக்கு ரொம்ப யோசனையாவே இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு போகலாமா இல்லை வேணாமா? போனா எங்க இரண்டு பேராலும் சகஜமா விளையாட முடியுமா? இப்படி பல கேள்விகள் இருந்தது. சரி என்ன ஆகிவிடப் போகுது என என் மேல நம்பிக்கை இருந்ததால தான் நான் பிக்பாஸ் வீட்டுக்குள் போனேன்.

பிக்பாஸ் வீட்டில் எங்கள் இருவருக்கும் இடையில் நட்பைத் தாண்டிய ஒரு உறவு இருந்தது உண்மை தான். அதற்காக நான் அவங்க விளையாட்டை தடுத்தேன் என்பது எல்லாம் உண்மையில்லை. பலரும் “நான் சேஃப் கேம் ஆடுறேன், ரவீணாவை வைத்து தான் விளையாடுறேன்” இப்படி பல குற்றச்சாட்டுகளை சொன்னார்கள். ஆனால் எனக்கு தெரியும் நான் யார் என்பது, அது எனக்கு போதும்.

ரவீணா அம்மா வீட்டுக்கு வந்த போது நான் கொடுத்த ரியாக்ஷன் என்னையும் அறியாமல் வந்தது தான். சரி ஸ்டோர் ரூமுக்கு வரச்சொன்னதும் அவங்க சேஃப் பண்ண தான் அப்படி சொல்றாங்க என நினச்சேன். ஆனால் அங்க ரவீணா அம்மா இருப்பாங்க என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. அது இருக்க தானே செய்யும்! ஏன்னா முதல் நாள் தான் ரவீணா சொந்தகாரங்க ஒருத்தங்க வந்து பயங்கரமா என்னை ஆட்டி வச்சுட்டு போனாங்க. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலேயே அதுதான் பயங்கரமான பரபரப்பு ஏற்படுத்திய ஒரு எபிசோடாக இருந்து இருக்கும் என நினைக்கிறன்.

ரவீணா நிக்சனிடம் பேசியது பற்றி பலரும் என்னிடம் கேட்கிறார்கள். அவங்க ஏன் அப்படி சொல்லணும் என புரியவேயில்லை. அப்படி அவங்க நினச்சு இருந்தா அதை என்கிட்டேயே சொல்லி இருக்கலாம். அது ரொம்ப வருத்தமா இருந்துது.

நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகு ரவீணா உடன் சரியாக பேச முடியவில்லை. அவர் தன்னுடைய குடும்பத்துடனும் ஜோடி நிகழ்ச்சியிலும் பிஸியாக இருக்கிறார். நானும் வேறு சில வேலைகளில் பிஸியாக இருக்கிறேன். அதனால் எங்களால் சந்தித்து சரியாக பேச முடியவில்லை” எனப் பேசியுள்ளார்.

மணி நிறைய விஷயங்களை தன்னிடமிருந்து மறைத்துவிட்டதாக நிக்சனிடம் கூறியிருந்தார் ரவீணா. ஏற்கெனவே அவருக்கு ஒரு கேர்ள் பிரெண்ட் இருந்தார் என்றும், அதைப் பற்றி அவர் சொல்லவில்லை என்றும் ரவீணா பேசி உள்ளார். மேலும் மணியால் தான், தான் பிக்பாஸ் வீட்டுக்குள் சரியாக விளையாட முடியாமல் போனது என்றும் நிக்சனிடம் பேசி உள்ளார் ரவீணா என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

• Rachitha Mahalakshmi Latest Post Against Dinesh Intension

Rachitha Mahalakshmi Latest Post Against Dinesh Intension

Rachita Mahalakshmi : கடந்த மூன்று மாதங்களாக சின்னத்திரை ரசிகர்களை கட்டிப்போட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இரு தினங்களுக்கு முன்னர் நிறைவு பெற்றது. 22 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசன் டைட்டில் வின்னராக சின்னத்திரை நடிகை அர்ச்சனா வெற்றி பெற்றார்.

அந்த வகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் 28ம் நாள் வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்து பைனல்ஸ் வரை சிறப்பாக விளையாடி பலரின் அபிமானத்தையும் பெற்றார் சின்னத்திரை நடிகர் தினேஷ். இவர் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த முதல் நாளில் இருந்து சக போட்டியாளர்களின் வெறுப்பை சம்பாதித்து வந்தாலும் விடாப்பிடியாக அவர்களுக்கு டஃப் கொடுத்து இறுதி வரை விளையாடி பைனல்ஸ் போட்டியில் நான்காவது இடத்தை பிடித்தார்.
நடிகர் தினேஷ் பிரிந்த தனது மனைவி ரச்சிதா மஹாலக்ஷ்மியை மகிழ்விப்பதற்காகவும், இந்த வெற்றியை சமப்பிப்பதற்காகவும் பிக்பாஸ் போட்டியில் நுழைந்ததாக அவரே பலமுறை நிகழ்ச்சியில் குறிப்பிட்டு இருந்தார். முடிந்துபோன அவர்களின் திருமண வாழ்க்கையை புதுப்பித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே தினேஷ் ஆசையாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு முறை தினேஷ் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதும்  இதை வெளிப்படுத்துகையில் அதற்கு சரியான பதிலடி கொடுப்பதுபோல தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் தினேஷை தாக்கி போஸ்ட் பகிர்ந்து வந்தார் ரச்சிதா.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் ரச்சிதாவை நேரில் சென்று பார்க்க இருப்பது குறித்து தினேஷ் கூறியதற்கு ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் இடம்பெற்ற வசனத்தை போஸ்ட் செய்துள்ளார் ரச்சிதா.
“தெரிஞ்ச பொண்ணா இருந்தாலும், தெரியாத பொண்ணா இருந்தாலும், கேர்ள் ஃப்ரண்டா இருந்தாலும், லவ்வரா இருந்தாலும், செக்ஸ் வர்கரா இருந்தாலும், ஏன் மனைவியா இருந்தாலும் அவங்க நோ சொன்னா நோ தான்” என்ற வசனத்தை காட்சியின் புகைப்படத்துடன் போஸ்ட் செய்து ‘புரிஞ்சா சரி’ என குறிப்பிட்டு போஸ்ட் பகிர்ந்துள்ளார்.

ரச்சிதா – தினேஷ் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடர் மூலம் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி இருவரும் 2015ம் திருமணம் செய்துகொண்டனர். மிகவும் பிரபலமான சின்னத்திரை ஜோடியாக வலம் வந்த ரச்சிதா –  தினேஷ் ஜோடியின் திருமண வாழ்க்கை பாதியிலேயே முடிந்து போனது.
ரச்சிதா மீண்டும் தினேஷுடன் சேர்ந்து வாழ்வதில் சிறிதும் விருப்பப்படவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை என்பது அவர் வெளியிடும் ஒவ்வொரு போஸ்ட் மூலம் தெளிவாக வெளிப்படுகிறது. ரச்சிதாவின் இந்த போஸ்டுக்கு பிறகு தினேஷ் பதிலளிப்பார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

Source link