Tag: பிக்பாஸ் நிகழ்ச்சி

  • Bigg Boss season 7 tamil Aishu Father shares his emotional about negative content | BB Aishu: “மகள் பிக்பாஸ் சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சல்: இப்படி விமர்சிக்காதீங்க”

    Bigg Boss season 7 tamil Aishu Father shares his emotional about negative content | BB Aishu: “மகள் பிக்பாஸ் சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சல்: இப்படி விமர்சிக்காதீங்க”


    BB Aishu: என் மகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்று நினைத்தேன் என இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஐஷூவின் தந்தை கூறியுள்ளார்.
     
    கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஐஷூ பங்கேற்றிருந்தார். அவர் மீது நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்திருந்ததால், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஐஷூ, அப்செட்டாகி மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி இருந்தார். 
     
    இந்த நிலையில் ஐஷூவின் தந்தை அஷ்ரப் தற்போது அளித்துள்ள பேட்டியில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மகள் பங்கேற்றது பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். ”பிக்பாஸில் ஐஷூ பங்கேற்கக் கூடாது என்று நான் எவ்வளவோ முயற்சிகள் செய்தேன். அவர் காலேஜில் படித்துக் கொண்டிருந்ததால் பிக்பாஸ் போன்ற ஒரு வாய்ப்பு சரிவராது என நினைத்து அதைத் தடுக்கவே பலமுறை பேசினேன். ஆனால், பிக்பாஸ் போட்டிக்கு செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தான், “ஏன் என்னைப் போக வேண்டாம் என்று சொல்கிறீர்கள்?” என்று ஐஷூ கேட்டதால், என்னால் ஓகே சொல்ல முடிந்தது. 
     
    ஐஷூ பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிறகு, என்னால் நம்ப முடியாத அளவுக்கு அலை அடித்தார்போல் அத்தனை நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தது. ஏன் இப்படி செய்கிறார்கள், எதற்காக இந்த வசைகள் என்று புரியாமல் இருந்தது. பிக்பாஸ் என்பது ஒரு ஷோ. அந்த நிகழ்ச்சிக்கு தேவையான கன்டெண்ட் தான் அவர்கள் செய்தார். ஒரு நிகழ்ச்சியில் 100 நாட்கள் இருக்கும் ஒருவரை அவர்களின் கேரக்டரை டிசைட் செய்து வன்மத்தைக் காட்டுவது எப்படி சரின்னு தெரியவில்லை. 
     
    பிக்பாஸ் நிகழ்ச்சியால் நான் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளானேன். எனது குடும்பமும் மிகவும் பாதிப்பிற்கு உள்ளானது. இதுபோன்ற ஒரு தவறான வன்மத்தை யாரும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆபாசமான, அசிங்கமான, தரம் தாழ்ந்த விமர்சனங்களை யார் மீதும் வைக்க வேண்டாம். யார் மீதாவது தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைத்தால், அவர்களின் பெற்றோரின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். 
     
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஐஷூ மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த மன்னிப்பையும் நான் வற்புறுத்தி தான் அவர் எழுதியதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஐஷூவை நான் வற்புறுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதே பிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரச்னைகள் வரும் என்று நான் கூறியிருக்கலாம். ஆனால், அவர் மன்னிப்பு கேட்டதைக் கூட விமர்சிப்பது சரியில்லாதது. 
     
    பிக்பாஸ் வீட்டில் ஐஷூவை தவிர என பேவரைட் போட்டியாளர் யார் என்று பார்த்தால் விஷ்ணு தான். விஷ்ணுவுக்கு வாழ்த்து கூறியுள்ளேன்” என்றார். 
     
    பிரதீப் உடனான வாட்சப் உரையாடல் வெளியானது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “பிரதீப்பின் பர்சனல் நம்பர் கிடைத்தது. அவர் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே செல்வார் என்ற தகவல் கிடைத்தது. அப்போது, நான் சோஷியல் மீடியா கமெண்ட்ஸால் ரொம்ப மன அழுத்தத்தில் இருந்தேன். அதனால், என் மகளை சேவ் செய்யும்படி பர்சனலாக பிரதீப்கிட்ட நான் கேட்டிருந்தேன். அதை சில காரணங்களுக்காக அவர் டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். அதுவும் எனக்கு வருத்தம் தந்தது.
    ஒரு அப்பாவாக என் மகளை காக்க ரொம்ப எதார்த்தமாக மனம் உருகி பிரதீப் கிட்ட கேட்ட உதவி அது. அதை ஏன் அவர் ஷேர் செய்தார் என்று அவருக்கு மட்டுமே தெரியும். அதன் பிறகு பிரதீப்பிடம் எதுவும் நான் கேட்கவில்லை. இப்போது கூட நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கு பழகிக் கொண்டிருக்கிறேன்” என்று மன வருத்தத்துடன் கூறியுள்ளார். 
     

     
     
     

    மேலும் காண

    Source link

  • Bigg Boss 7 Tamil Title Runner Up Mani Chandra Family Speech Here

    Bigg Boss 7 Tamil Title Runner Up Mani Chandra Family Speech Here

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவதாக வந்த மணி சந்திராவின் அம்மா மேடையில் கண்கலங்கிய சம்பவம் இந்நிகழ்ச்சியை காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. 
    கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கியது. வழக்கம்போல இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். முதலில் இந்நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை, அக்‌ஷயா உதயகுமார், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா” ஆகிய 18 பேரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து வைல்ட் கார்டு எண்ட்ரீ மூலம் அர்ச்சனா, தினேஷ், விஜே பிராவோ, கானா பாலா, அன்னலட்சுமி ஆகியோர் உள்ளே வந்தனர். 
    இதில் இறுதிப்போட்டிக்கு அர்ச்சனா, மாயா, மணி சந்திரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அர்ச்சனா பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். மணி சந்திரா 2வது இடத்தையும், மாயா 3வது இடத்தையும்  பிடித்தனர். மிகப்பிரமாண்டமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சியில் மணி சந்திராவின்  குடும்பத்தினர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். 

    அதன்படி பேசிய மணியின் சகோதரர், “என்ன பேசுவதென்றே தெரியவில்லை. இந்த தருணத்திற்காக தான் காத்திருந்தோம். எங்க அப்பாவை நினைத்து பெருமைப்பட்டுள்ளோம். அவருக்கு பிறகு மணி அத்தகைய பெருமையை நாங்கள் உணரும்படி செய்துள்ளார். இங்க வந்ததே மிகச்சிறந்த விஷயம் தான்” என தெரிவித்தார். 
    தொடர்ந்து பேசிய மணியின் அம்மா, “இவ்வளவு தூரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மணி வந்ததற்கு விஜய் டிவிக்கும், உங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவன் அப்பா உங்களின் தீவிர ரசிகர். மணியில் இந்த வெற்றியை கோடிக்கணக்கான மக்கள் பார்ப்பதை விட அவனது அப்பா இருந்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும். அதான் எனக்கு கஷ்டமா இருக்கு. வேறு எதுவும் இல்லை” என கூறினார். 
    மணிசந்திரா பேசும்போது, “நான் அர்ச்சனா ஜெயித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இவ்வளவு தூரம் வருவேன் என எதிர்பார்க்கவில்லை. என்னிடம் நிறைய பேர் நீ நன்றாக செய்தாய் என சொன்னார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த நிகழ்வுகளுக்கு சண்டை போட வேண்டும். எந்த நிகழ்வுகளுக்கு பேச வேண்டும் என்பதில் தெளிவு இருந்தால் போதும். அதை நான் பின்பற்றியதாக நினைக்கிறேன். என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி. நான் வெளியே வந்து உங்கள் அனைவரையும் வேறொரு பாணியில் மகிழ்விப்பேன்” என கூறினார். இந்த வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது. 

    Source link

  • Bigg Boss 7 Tamil Grand Finale Title Winner Archana Father Speech Viral

    Bigg Boss 7 Tamil Grand Finale Title Winner Archana Father Speech Viral

    எனது மகளை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்புவதில் எனக்கு விருப்பமே இல்லை என டைட்டில் வென்ற அர்ச்சனாவின் அப்பா தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது. 
    பிக்பாஸ் சீசன் 7:
    சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது. கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியின் 7வது சீசனில் கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, விசித்ரா, பவா செல்லத்துரை, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா ரவி, பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், சரவண விக்ரம், வினுஷா தேவி, நிக்ஸன், ஐஷூ, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன்,அக்‌ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், விஜய் வர்மா, அன்னலட்சுமி, தினேஷ், அர்ச்சனா, விஜே பிராவோ, கானா பாலா என 23 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 
    இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. 105 நாட்கள் நடந்த இந்நிகழ்ச்சியில் இறுதியாக அர்ச்சனா, மணி சந்திரா மற்றும் மாயா கிருஷ்ணன் ஆகிய 3 பேர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர். இதில் மாயா 3ஆம் இடம் பிடிக்க, அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இதனிடையே இந்நிகழ்ச்சியில் அர்ச்சனா குடும்பத்தினர் பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    மகளை அனுப்ப விருப்பமில்லை:
    அர்ச்சனாவின் அப்பா பேசும் போது, “உலகநாயகன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என் மகள் அர்ச்சனாவை அனுப்புவதில் எனக்கு விருப்பமில்லை. வெளியில் வரும்போது உன் பெயரை கெடுத்துக் கொண்டு தான் வருவாய் என சொன்னேன். ஆனால் உள்ளே சென்ற பிறகு அர்ச்சனா இப்படியெல்லாம் பேசுவார், புரிதலோடு நடந்து கொள்வார் என பார்த்து வியந்தேன். ஒரு தந்தையின் இடத்தில் இருந்து வாரம் தோறும் நீங்கள் (கமல்ஹாசன்) கொடுத்த அறிவுரை மிகவும் உதவியாக இருந்தது.
    இங்கு அர்ச்சனாவை பாதுகாத்தது நீங்கள் மற்றும் பிக்பாஸ் குழு மட்டுமல்ல, சுற்றியுள்ள 67 கேமராக்களும் தான். உன்னுடைய மிகச்சிந்த பாதுகாப்பே அது தான். நீ பயப்படாமல் இருந்துட்டு வா என சொன்னேன். அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கிய விஜய் டிவி குழுமத்துக்கு நன்றி” என கூறினார். 
    அதேசமயம் அர்ச்சனா டைட்டில் வென்ற பிறகு பேசிய அவரது அம்மா, “எனக்கு என் பொண்ணு ஜெயித்ததில் மிகவும் சந்தோசம் தான். அவளுக்கு இந்த அளவுக்கு கொண்டு வந்த அனைவருக்கும் ரொம்ப நன்றி. நான் மனதளவில் ரொம்ப உடைந்து போயிருந்தேன். இந்த வெற்றி ரசிகர்களாகிய உங்களைத்தான் சேரும்” என தெரிவித்தார். 

    Source link