Tag: பிக்பாஸ் தமிழ் சீசன் 7

  • Bigg Boss Tamil Season 7 Maya Krishnan Attack Post On Vishnu Vijay Slammed By Netizens | Maya

    Bigg Boss Tamil Season 7 Maya Krishnan Attack Post On Vishnu Vijay Slammed By Netizens | Maya

    பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Tami 7) நிகழ்ச்சி முடிந்தும் மாயா விஷ்ணுவை அட்டாக் செய்து பதிவிட்டு வருவது பிக்பாஸ் ரசிகர்களிடையே விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
    பிக்பாஸ் சீசன் 7
    சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி மொத்தம் 23 போட்டியாளர்களுடன் கோலாகலமாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியது. பவா செல்லதுரை, சரவண விக்ரம், மணி சந்திரா, மாயா, யுகேந்திரன், விசித்ரா, பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ், ரவீனா, நிக்சன், அனன்யா ராவ், ஜோவிகா, விஷ்ணு விஜய், பூர்ணிமா, அக்‌ஷயா, ஐஷூ ஆகியோருடன் இந்த நிகழ்ச்சி தொடங்கிய நிலையில்,28ஆம் நாளில் வைல்டு கார்டு எண்ட்ரியாக 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.
    அர்ச்சனா, கானா பாலா, தினேஷ், ஆர்.ஜே.பிராவோ, அன்ன பாரதி ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சுமார் ஒரு மாதம் கழித்து வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளர்களின் வருகைக்குப் பிறகு சூடுபிடிக்கத் தொடங்கியது.
    தொடர்ந்து பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்டு விவகாரம், அர்ச்சனா குழுவாக அட்டாக் செய்யப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் நிகழ்ச்சி ஜெட் வேகத்தில் சூடுபிடித்த நிலையில், அதன் பிறகு பரபரப்புகளுக்கும்  கண்டெண்ட்களுக்கும் பஞ்சமில்லாமல் 105 நாள்களை அடைந்தது.
    மாயா – விஷ்ணு இடையேயான பனிப்போர்
    நேற்று முன் தினம் ஜன.14ஆம் தேதி பிக்பாஸ் க்ராண்ட் ஃபினாலே பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கொண்டாட்டமாக நடைபெற்ற நிலையில், அர்ச்சனா பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் பட்டத்தைப் பெற்றார். மணி சந்திரா ரன்னர் அப்பாக உருவெடுத்த நிலையில், அடுத்தடுத்த இடங்களை மாயா, தினேஷ், விஷ்ணு ஆகியோர் பெற்றனர்.
    இந்நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே சண்டை, சச்சரவுகள், காதல், கோபம், செண்டிமெண்ட் என பலவிதமான உணர்ச்சிகளையும் காண்பித்து லைக்ஸ் அள்ளியவர் விஷ்ணு. ஆனால் இவர் கிராண் ஃபினாலே நிகழ்ச்சியில்  அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக விஷ்ணு முதல் ஆளாக எவிக்டாகி வெளியேறினார். 
    விஷ்ணு எவிக்டாகிய காகிதம் நிகழ்ச்சியில் அவரது பரம எதிரியாக வலம் வந்த மாயாவிடம் கிடைத்து அவர் அதனை அறிவித்தது விஷ்ணுவின் ரசிகர்களை மேலும் கடுப்பாக்கியது.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போட்டியாளரான மாயா, இறுதிவரை பயணித்தது  ஏற்கெனவே பலரது அதிருப்தியையும் சம்பாதித்திருந்தது.  மாயா எவிக்டாகாதது குறித்து விஜய் தொலைக்காட்சி,  அவரது சக நண்பர்கள், ஏன் கமல்ஹாசனே வாராவாரம் பிக்பாஸ் ரசிகர்களார் விமர்சிக்கப்பட்டிருந்தபோதிலும் மாயா இறுதியில் இரண்டாவது ரன்னர் அப்பாக உருவெடுத்தார். இவற்றுக்கெல்லாம்  மத்தியில் பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை அர்ச்சனா  வென்று பாராட்டுகளைக் குவித்து வருகிறார்.
    குறையாத வன்மம்
    வழக்கமாக நிகழ்ச்சி முடிந்து வெளியேறியதும் பரம எதிரிகளாக விளங்கிய போட்டியாளர்கள் கூட பேட்ச் அப் செய்து அதிர்ச்சி கொடுப்பது தான் வழக்கம், ஓவியா – ஜூலி – காயத்ரி ரகுராம், ஆரி – பாலா என இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உண்டு. ஆனால் இவற்றுக்கு மாறாக இந்த சீசனில் பிக்பாஸூக்கு வெளியேயும் போட்டியாளர்கள் வன்மம் குறையாமல் வலம் வருவது ஏற்கெனவே விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
    இறுதி வாரத்தில் பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே முன்னாள் போட்டியாளர்களான ஜோவிகா, அக்‌ஷயா, விக்ரம் உள்ளிட்டோர் கடும் விமர்சனங்களை இதனால் பெற்றனர். இந்நிலையில் அதன் உச்சமாக  மாயா கிருஷ்ணன் விஷ்ணுவை அட்டாக் செய்து பதிவிட்டுள்ளது இணையத்தில் கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
    கர்மா, ஃப்ரெண்ட ஏமாத்திட்ட..
    விஷ்ணு மாயாவின் கையில் கிடைத்த சீட்டால் எவிக்டான நிலையில், “கர்மா அதன் வேலையை செய்துள்ளது. என் ஃப்ரெண்ட ஏமாத்திட்ட இல்ல?” என மாயா விஷ்ணுவிடம் கேள்வி எழுப்பும் வகையிலான பதிவினை தன் இன்ஸ்டா பக்கத்தில் மாயா பகிர்ந்துள்ளார்.

     விஷ்ணு – பூர்ணிமா இடையே போலியான லவ் டிராக்கை கண்டெண்ட்டுக்காக மாயா பயன்படுத்தியது வீட்டில் உள்ளவர்கள் தொடங்கி அனைவராலும் ஏற்கெனவே விமர்சிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதனைக் குறிப்பிடும் வகையில் மாயா தற்போது பதிவிட்டுள்ளது, இணையத்தில் கடும் விமர்சனங்களைக் குவித்து வருகிறது.

    Source link