Tag: படே மியான் சோட் மியான்

  • Bade Miyan Chote Miyan Movie Making Video is out Watch it Amazing one

    Bade Miyan Chote Miyan Movie Making Video is out Watch it Amazing one


    ‘படே மியான் சோட் மியான்’ த்ரில் மற்றும் ஆக்சன் நிறைந்த மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
    அக்‌ஷய் குமார் – டைகர் ஷெராஃப்:
    பாலிவுட்டின் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோக்களான அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ‘படே மியான் சோட் மியான்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு ‘மேக்கிங் ஆஃப் ரியல் ஆக்‌ஷன் ஃபிலிம்’ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.  
    பாலிவுட் முக்கிய இயக்குனரான அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ள இப்படத்தில், பாலிவுட்டின் இரண்டு பெரிய ஆக்‌ஷன் நட்சத்திரங்களான அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இந்த வீடியோ சுவாரஸ்யமான ஆக்‌ஷன் காட்சிகள் எப்படி உருவாக்கப்பட்டது என்பது போன்றான காட்சிகளால் நிறைந்துள்ளது. மேலும், இந்தப் படம் தயாரிப்பிற்கு பின் எவ்வளவு பேரின் உழைப்பு உள்ளது என்பதை புரிய வைக்கிறது.  
    இயக்குனர் அலி அப்பாஸ் ஜாஃபர் கூறுகையில், “பெரிய ஆக்ஷன் படங்களை எடுப்பதில் எனக்கு இருக்கும் ஆர்வம் குறித்து மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கின்றனர். அதற்கு என்னிடம் பதில் இல்லை. சாத்தியமற்ற ஒன்றை காட்சிப்படுத்தும் உள்ளுணர்வு இருக்கிறது என்னிடம். அதையே செய்கிறேன். இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளை மிகவும் தத்ரூபமாக எடுத்துள்ளோம். மேலும் படத்தில் நிறைய சர்பிரைஸ் ரசிகர்களுக்கு உள்ளது. இது ஆக்‌ஷன் பிரியர்களுக்கு விருந்தாக இருக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
    ஆக்‌ஷன் படம்:
    இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி கூறுகையில், “படே மியான் சோட் மியான் படத்தில் இரண்டு பெரிய ஆக்ஷன் நட்சத்திரங்களான அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் ஆக்‌ஷன் காட்சிகள் பார்ப்பதற்கு ரியல் ஆக இருக்க வேண்டும் நோக்கத்தில் படமாக்கியிருக்கிறோம். இது உண்மையிலேயே நம்பக்கூடியதாக தெரிகிறது,” என்று கூறினார்.

     தயாரிப்பாளர் வாசு பாக்னானி கூறுகையில், “இயக்குனர் அலி அப்பாஸ் ஜாஃபர் ஏற்கனவே எல்லாத்தையும் சொல்லியிருக்கார். குறைந்தபட்சம் வி.எஃப்.எக்ஸ். எல்லாம் நிஜமாகவே இருக்க வேண்டும் என்று எண்ணினோம். ரொம்ப பதட்டமாக இருந்தது. இன்றைய காலக்கட்டத்தில் இவ்வளவு பெரிய ஆக்ஷன் படத்தை எப்படி எடுப்பது என்று நினைத்தோம்” என்று கூறினார்.

    மும்பை, லண்டன், அபுதாபி, ஸ்காட்லாந்து மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்ட இப்படம், ஹாலிவுட் பிளாக்பஸ்டர்களை நினைவூட்டும் ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை அளிக்கிறது. இந்த பான்-இந்தியா திரைப்படம் அதன் பெரிய அளவிலான மற்றும் ஹாலிவுட் பாணி சினிமா காட்சிகளுக்காக சலசலப்பை உருவாக்குகிறது. இந்த படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் சோனாக்ஷி சின்ஹா, மனுஷி சில்லர் மற்றும் அலயா எஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    இந்தியா முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ‘படே மியான் சோட் மியான்’ படம் வெளியாக உள்ளது.  இப்படம் நிச்சயம் அனைத்து வயது ரசிகர்களையும் ஈர்க்கும். பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  வாசு பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் ஆகியோர் படே மியான் சோட் மியானை இணைந்து வழங்குகிறார்கள். அலி அப்பாஸ் ஜாஃபர் எழுதி இயக்க வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், ஜாக்கி பாக்னானி, ஹிமான்ஷு கிஷன் மெஹ்ரா, அலி அப்பாஸ் ஜாபர் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

     

    மேலும் காண

    Source link

  • Prithviraja Villan In Full On Action Hindi Movie Bade Miyan Chote Miyan Teaser Released Watch Here | Bade Miyan Chote Miyan: அக்‌ஷய் குமாரின் ஆக்ஷன் த்ரில்லர்!

    Prithviraja Villan In Full On Action Hindi Movie Bade Miyan Chote Miyan Teaser Released Watch Here | Bade Miyan Chote Miyan: அக்‌ஷய் குமாரின் ஆக்ஷன் த்ரில்லர்!

    அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் ராணுவ வீரர்களாக நடிக்கும் படே மியான் சோட் மியான் (Bade Miyan Chote Miyan) படத்தின் அதிரடி டீஸர் வெளியாகி உள்ளது.
    இந்த ஜனவரியில் ரசிகர்கள் பலரும் படே மியான் சோட் மியான் (Bade Miyan Chote Miyan) படத்தின் டீஸரை எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர். படத்தின் கவர்ச்சியான போஸ்டர்கள் மற்றும் கிலிம்ப்ஸை தொடர்ந்து தற்போது படக்குழு டீசரை நேற்று வெளியிட்டுள்ளனர்.  அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், படே மியான் சோட் மியான் படத்தில் இரண்டு அதிரடி ஹீரோக்கள் நடித்துள்ளனர்.
    இந்தியாவின் மிகப்பெரிய ஆக்ஷன் படமான இந்த படத்தில் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் முதல் முறையாக ஒன்றாக நடித்துள்ளனர்.  வசீகரிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் தேசபக்தி உணர்வுடன் கூடிய இந்த டீஸர் ரசிகர்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் படத்தை உருவாக்கியுள்ளது.மும்பை, லண்டன், அபுதாபி, ஸ்காட்லாந்து மற்றும் ஜோர்டான் போன்ற பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்ட இந்த பான் இந்தியா திரைப்படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான சினிமா காட்சிகளை கொண்டுள்ளது.
    இந்த படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களை தவிர சோனாக்ஷி சின்ஹா, மனுஷி சில்லர் மற்றும் அலயா எஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஈத் 2024 அன்று படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    இந்த படத்தின் டீஸரைப் பற்றி இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் பேசுகையில், “உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மிகவும் திறமையான குழுவினரைக் கொண்டு பல நாடுகளில் படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். தீவிர உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை படே மியான் சோட் மியான் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.  அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் சவாலான காட்சிகளை மிகவும் சிரமமின்றி நடித்துள்ளனர்.  ஈத் ஏப்ரல் 2024 அன்று இந்த படத்தை ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக பெரிய திரைகளில் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார்.

    படம் குறித்து தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி கூறுகையில், “டீஸர் ஒரு உண்மை கதையை பெரிய ஆக்‌ஷன் ஹீரோக்களான அக்‌ஷய் மற்றும் டைகர் ஷ்ராஃப் ஆகியோரை வைத்து சொல்லப்பட்டுள்ளது.  கூடுதலாக, பிருத்விராஜ் ஒரு ஆச்சரியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்தகைய ஆக்‌ஷன் ஹீரோக்களை எங்கள் படத்தில் கொண்டிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அலியின் மேஜிக் மீண்டும் ஒருமுறை நன்றாக வந்துள்ளது.  ரசிகர்கள் எங்கள் குழுவின் அர்ப்பணிப்பையும், இந்த படத்தில் நாங்கள் எடுத்த முயற்சிகளையும் பாராட்டுவார்கள் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
    படே மியான் சோட் மியான் படத்தின் டீஸர் படம் என்ன கதையை சொல்ல வருகிறது என்பதை புரிய வைக்கிறது, ஆனாலும் படத்தில் இன்னும் நிறைய ஆக்சன், காமெடி, பாடல்கள் மற்றும் தேச பக்தி ஆகியவற்றை கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.  இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது.  வாசு பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் ஆகியோர் படே மியான் சோட் மியானை ஆஸ் படங்களுடன் இணைந்து வழங்குகிறார்கள். அலி அப்பாஸ் ஜாஃபர் எழுதி இயக்க வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், ஜாக்கி பாக்னானி, ஹிமான்ஷு கிஷன் மெஹ்ரா, அலி அப்பாஸ் ஜாபர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

    Source link