பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவு பெற்றது. இந்த சீசன் டைட்டில் வின்னராக அர்ச்சனாவும், ரன்னர் அப்பாக மணிச்சந்திராவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு மணிச்சந்திரா முதன்முறையாக யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் தனக்கும் ரவீணாவுக்கும் இடையே இருந்த உறவு குறித்து மிகவும் வெளிப்படையாக பேசி உள்ளா மணிச்சந்திரா.

எனக்கும் ரவீணாவுக்கும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்னரே நல்ல ஒரு நட்பு இருந்தது. அவங்க பிக்பாஸ் வீட்டுக்கு வராங்க என்ற விஷயம் எனக்கு கடைசி நேரத்தில் தான் தெரியவந்தது. அப்போ எனக்கு ரொம்ப யோசனையாவே இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு போகலாமா இல்லை வேணாமா? போனா எங்க இரண்டு பேராலும் சகஜமா விளையாட முடியுமா? இப்படி பல கேள்விகள் இருந்தது. சரி என்ன ஆகிவிடப் போகுது என என் மேல நம்பிக்கை இருந்ததால தான் நான் பிக்பாஸ் வீட்டுக்குள் போனேன்.

பிக்பாஸ் வீட்டில் எங்கள் இருவருக்கும் இடையில் நட்பைத் தாண்டிய ஒரு உறவு இருந்தது உண்மை தான். அதற்காக நான் அவங்க விளையாட்டை தடுத்தேன் என்பது எல்லாம் உண்மையில்லை. பலரும் “நான் சேஃப் கேம் ஆடுறேன், ரவீணாவை வைத்து தான் விளையாடுறேன்” இப்படி பல குற்றச்சாட்டுகளை சொன்னார்கள். ஆனால் எனக்கு தெரியும் நான் யார் என்பது, அது எனக்கு போதும்.

ரவீணா அம்மா வீட்டுக்கு வந்த போது நான் கொடுத்த ரியாக்ஷன் என்னையும் அறியாமல் வந்தது தான். சரி ஸ்டோர் ரூமுக்கு வரச்சொன்னதும் அவங்க சேஃப் பண்ண தான் அப்படி சொல்றாங்க என நினச்சேன். ஆனால் அங்க ரவீணா அம்மா இருப்பாங்க என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. அது இருக்க தானே செய்யும்! ஏன்னா முதல் நாள் தான் ரவீணா சொந்தகாரங்க ஒருத்தங்க வந்து பயங்கரமா என்னை ஆட்டி வச்சுட்டு போனாங்க. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலேயே அதுதான் பயங்கரமான பரபரப்பு ஏற்படுத்திய ஒரு எபிசோடாக இருந்து இருக்கும் என நினைக்கிறன்.

ரவீணா நிக்சனிடம் பேசியது பற்றி பலரும் என்னிடம் கேட்கிறார்கள். அவங்க ஏன் அப்படி சொல்லணும் என புரியவேயில்லை. அப்படி அவங்க நினச்சு இருந்தா அதை என்கிட்டேயே சொல்லி இருக்கலாம். அது ரொம்ப வருத்தமா இருந்துது.

நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகு ரவீணா உடன் சரியாக பேச முடியவில்லை. அவர் தன்னுடைய குடும்பத்துடனும் ஜோடி நிகழ்ச்சியிலும் பிஸியாக இருக்கிறார். நானும் வேறு சில வேலைகளில் பிஸியாக இருக்கிறேன். அதனால் எங்களால் சந்தித்து சரியாக பேச முடியவில்லை” எனப் பேசியுள்ளார்.

மணி நிறைய விஷயங்களை தன்னிடமிருந்து மறைத்துவிட்டதாக நிக்சனிடம் கூறியிருந்தார் ரவீணா. ஏற்கெனவே அவருக்கு ஒரு கேர்ள் பிரெண்ட் இருந்தார் என்றும், அதைப் பற்றி அவர் சொல்லவில்லை என்றும் ரவீணா பேசி உள்ளார். மேலும் மணியால் தான், தான் பிக்பாஸ் வீட்டுக்குள் சரியாக விளையாட முடியாமல் போனது என்றும் நிக்சனிடம் பேசி உள்ளார் ரவீணா என்பது குறிப்பிடத்தக்கது.

Tag: நிக்சன்

Manichandra: “ரவீணா சொல்றது உண்மையில்லை, நட்பை தாண்டிய ஒரு உறவு இருந்துச்சு” – கலங்கிய மணிச்சந்திரா!

Bigg Boss Season7 Tamil Mani And Raveena Nixan Controversy Speeches Goes On Viral | Bigg Boss 7 Tamil Mani: யார் யாரை பயன்படுத்திக்கிட்டாங்க.. லவ் டிராக் முடித்து வெறுப்பு காட்டும் மணி
Bigg Boss 7 Tamil Mani: பிக்பாஸ் வீட்டுக்குள் மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள ரவீனா, மணியிடம் பேச முயற்சிப்பதும், அதற்கு ”தனக்கு நிறைய வேலை இருக்கு” என்று மணி கோபத்துடன் செல்வதும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மணி தன்னை ஒதுக்குவதை நிக்சனிடம் கூறி புலம்பும் ரவீனாவை நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகின்றனர்.
நாளையுடன் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நிறைவு பெறும் நிலையில் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரேஸில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் வென்ற விஷ்ணு, தினேஷ், மாயா, அர்ச்சனா மற்றும் மணி உள்ளனர். இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக் கொண்டாட்டமாக முன்னதாக எவிக்ட்டாகி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ரவீனா, மணியிடம் பேச முயற்சிக்கிறார். ஆனால் ரவீனாவிடம் பேச மறுப்பு தெரிவிக்கும் மணியின் வீடியோ டிரெண்டாகி வருகிறது. மணியிடம் பேசும் ரவீனா, ”எதுக்கு என்னை அவாய்ட் பண்றீங்க.. எல்லாத்தையும் மறந்துடுங்க.. வெளியே சென்று பேச நிறைய இருக்கு” என்கிறார். அதற்கு பதிலளித்த மணி, “ எனக்கு செட் ஆகலனா செட் ஆகல தான். எனக்கு நிறைய இருக்கு ஏகப்பட்டது இருக்கு” என்று கூறிக் கொண்டே ரவீனாவிடம் இருந்து எழுந்து செல்கிறார்.
தன்னிடம் மணி அப்படி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாத ரவீனா, நிக்சனிடம் புலம்பியுள்ளார். நிக்சனிடம் பேசிய ரவீனா, “ நீ என்னை புரிந்து கொண்ட அளவுக்கு அவன் என்னை புரிந்து கொள்ளவில்லை” என்றார். மேலும் மணி தன்னை ஓவராக பிடித்து வைத்ததை போல் ரவீனா பேசியுள்ளார். ரவீனாவின் இந்த பேச்சை கேட்ட நெட்டிசன்ஸ் “ பிக்பாஸில் உன்னை பற்றி பேசுவதற்கு மனிதான் காரணம். பேச்சை நேரத்துக்கு ஏற்றார் போல் மாற்றி பேச வேண்டாம்” என காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரவீனா மற்றும் மணியின் நட்பு குறித்து பரவலாக நெட்டிவ் கருத்துகள் எழுந்தன. பிக்பாஸ் போட்டியாளர்கள் கூட இருவரும் காதலிப்பதாக கூறி வந்தனர். பிக்பாஸ் டாஸ்க்குகள் ரவீனாவுக்காக மணி விளையாடுவதாகவும் குற்றாம் சாட்டினர். சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற பிரீஸ் டாஸ்க்கில் ரவீனாவின் விளையாட்டு மணியால் தான் கெடுவதாக ரவீனாவின் அம்மா குற்றம் சாட்டியிருந்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் ரவீனாவை சுயமாக முடிவெடுக்க விடாமல் மணி தடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Bigg Boss Season7 Tamil Vinusha Slams Poornima For Nixen Statement About Her
Bigg Boss 7 Tamil Vinusha: நிக்சன் தன்னை உருவக்கேலி செய்ததை ஜஸ்ட் ஜோக் என்ற பூர்ணிமாவை கேள்வியால் வெளுத்து வாங்கியுள்ளார் வினுஷா.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிக்பாஸ் டைட்டில் பட்டத்தை வெல்லும் ரேஸில் மாயா, அர்ச்சனா, தினேஷ், மணிச்சந்திரா, மற்றும் டிக்கெட் டூ ஃபினாலே வென்று பைனலுக்கு நேரடியாக சென்று விஷ்ணு விஜய் ஆகியோர் உள்ளனர்.
ஓரிரு நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரங்களில் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரீ- என்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அதிகரித்துள்ளனர். அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தாளியாக வந்த வினுஷா, தன்னை உருக்கேலி செய்த நிக்சனையும், அதை வைத்து கேம் பிளே ஸ்ட்ரேட்டஜி செய்த அர்ச்சனாவையும், நிக்சனை பேசியதை காமெடி என்ற பூர்ணிமாவை கேள்வி கேட்டு வறுத்தெடுத்துள்ளார்.
பூர்ணிமாவிடம் பேசிய வினுஷா, ” என் உடலமைப்பு குறித்து நிக்சன் பேசியதை ஜெஸ்ட் ஜோக் என்று நீங்கள் சொன்னீர்கள். அது எனக்கு ஜோக் இல்லை” என்றார். அதற்கு பதிலளித்து சமாளிக்க முயன்ற பூர்ணிமா, “ எந்த இடத்தில் ஜோக் என்றேன்” எனக் கேட்டார். மேலும், அன்று மேக்கப் ரூமில் நிக்சன் விஷியத்தை மட்டுமில்லாமல் நிறைய விஷயங்களை பேசினோம். நான் ஏன் ஒருவரின் உருவக்கேலியை சப்போர்ட் செய்யப் போகிறேன்” என்று பதிலளிக்க முயன்றார். எனினும், பூர்ணிமாவின் பதிலை வினுஷா ஏற்கவில்லை.
முன்னதாக வினுஷாவிடம் பேசிய நிக்சன், தான் பேசியது வெளியே தவறாக பரப்பப்பட்டுள்ளதாகவும், அதனால் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார். நிக்சனின் இந்தப் பேச்சால் மீண்டும் கடுப்பான வினுஷா, “வெளியில் தப்பாக காட்டப்பட்டுள்ளதனால் நீ மன்னிப்பு கேட்கிறாய் என்றால் அந்த மன்னிப்பை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீ பேசியது தவறு என்று உணர்ந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே ஏற்று கொள்வேன் “ என்றார்.
பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தாளியாக வந்ததில் இருந்து தொடர்ந்து சம்பவம் செய்து கொண்டிருக்கும் வினுஷா, அர்ச்சனாவிடம் பேசினார். அப்போது ”உங்களை பற்றி பேசினால் நிக்சனுக்கு கோபம் வரும் என்று பேசினேன்” என அர்ச்சனா கூறினார். அதைக் கேட்ட வினுஷா, “நான் தானே பாதிக்கப்பட்டது, நீங்க உங்க ஆதாயத்துக்கு யூஸ் பண்ணிக்கிட்டீங்க” என்றார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும் தன்னை கேலி செய்து அதில் ஆதாயம் பார்க்க முயன்ற ஒவ்வொருத்தரையும் டார்கெட் செய்து வினுஷா வெளுத்து வாங்கி வருகிறார்.