Tag: தொகுதி பங்கீடு

• DMK Alliance: திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? இதுதான் தொகுதிப் பங்கீட்டு கணக்கீடா?

DMK Alliance: திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? இதுதான் தொகுதிப் பங்கீட்டு கணக்கீடா?

நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் நடைபெறும் தேதி குறித்தான அறிவிப்பு ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தேர்தலானது அடுத்த 2 மாதங்களில் பல கட்டங்களாக நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கிடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான செயல்பாடு தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாட்டில்  திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

திமுக கூட்டணி:

திமுக கூட்டணியில்  காங்கிரஸ்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதையடுத்து தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சிகளுக்கிடையேயான உடன்பாடு தீவிரமடைந்துள்ளது. பல கட்சிகளுக்கு இடையேயான உடன்பாடு எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிளுக்கு மட்டும்  தொகுதி பங்கீடு குறித்து, இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில்,  திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதிகள் எவ்வளவு ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பது குறித்தான தகவல் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த பட்டியில் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது

திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு; உத்தேச பட்டியல்:

திமுக கூட்டணி கட்சிகள்

தொகுதிகளின் எண்ணிக்கை

திமுக

21

காங்கிரஸ்

9

சி.பி.எம்

2

சி.பி.ஐ

2

வி.சி.க

2

ம.தி.மு.க

1

இ.யூ.மு.லீக்

1

கொ.ம.தே.க.

1

ம.நீ.மய்யம்

1

மொத்தம்=  (தமிழ்நாடு + புதுச்சேரி )

40

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் தவிர, இதர கட்சிகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இடங்களாகும்.

காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ம.நீ..ம கட்சி, அதனுடைய சின்னமான டார்ச் சின்னத்தில் போட்டியிடுமா அல்லது காங்கிரஸ் சின்னமான கை சின்னத்தில் போட்டியிடுமா அல்லது திமுக சின்னம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமா என்பது உறுதியாகவில்லை.

திமுக கூட்டணியில்  இ.யூ.மு.லீக் கட்சி போட்டியிடும் தொகுதியாக ராமநாதபுரம் ஒதுக்கப்பட்டுள்ளது.  விசிக கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 10 ஆம் தேதி முதல் திமுக வேட்பாளருக்கான நேர்காணல் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

• DMK – Congress Alliance: திமுக

DMK – Congress Alliance: திமுக

வரும் 28 ஆம் தேதி திமுக மற்றும் காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வரும் 28 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அந்த வகையில்  வரும் நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும். ஜனவரி 28 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் சென்னை அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. டி.ஆர் பாலு தலைமையிலான குழுவினர், காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக குழுவுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

Source link