Tag: தை பொங்கல்

• Pongal 2024 Former Minister Ponmudi Celebrated Samathuva Pongal In Villupuram – TNN

Pongal 2024 Former Minister Ponmudi Celebrated Samathuva Pongal In Villupuram – TNN

சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடிய மு.அமைச்சர் பொன்முடி
விழுப்புரம்: தை பொங்கலை முன்னிட்டு முன்னாள் உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் சமத்துவ பொங்கலிட்டு பொங்கலை கொண்டாடி பொதுமக்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தமிழர் திருநாளாம் தை பொங்கல் தமிழர்கள் வாழும் பகுதிகள் முழுவதிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விழுப்புரத்திலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் தை பொங்கலை முன்னிட்டு முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சரும் திமுக கழக துணை பொதுச்செயலாளருமான பொன்முடி தலைமையில் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த சமத்துவ பொங்கலில் முஸ்ஸீம்  கிருத்துவர்கள் என அனைத்து சமூகத்தை சார்ந்தவர்களும் கலந்து கொண்டு பொங்கலிட்டு மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி திமுக தொண்டர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். இதே போன்று விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் பொங்கலிட்டு மகிழ்ந்து பொங்கலை கொண்டாடினர்.
பொங்கல் பண்டிகை
நம் இந்தியா நாடு பல்வேறு சாதி, மதங்கள், இனங்கள், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை கொண்டு இருந்தாலும் இவை அனைத்தையும் ஒன்றிணைப்பது என்றால் அது பண்டிகைகள் தான். ஒவ்வொரு மாநிலமும் ஒரு பண்டிகையின் பிரதிபலிப்பாக திகழும் நிலையில் தமிழ்நாட்டின் தமிழர் திருநாளாக, பொங்கல் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் விதைக்கப்படும் நெல்லானது தை மாதம் தான் அறுவடை செய்யப்படும். இந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை கொண்டு மக்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும், மற்றும் விவசாயத்துக்கு உதவும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தியாக தென்னிந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
உற்சாக கொண்டாட்டம்
வழக்கமாக பொங்கல் பண்டிகை  தமிழ் மாதமான தை 1 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 அல்லது ஜனவரி 15 என பஞ்சாங்க கணக்கீட்டின் அடிப்படையில் மாறி மாறி வரும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களும் இப்பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி மக்கள் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பானையின் கழுத்தில் மஞ்சள் கொத்து கட்டி, பச்சரிசி மற்றும் சர்க்கரை பொங்கல் என இரு வகையான பொங்கலானது தயாராகும். மேலும் பானையில் வைக்கப்பட்ட நீரானது பொங்கி வரும்போது “பொங்கலோ பொங்கல்” என மக்கள் உற்சாக குரல் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இதனுடன் கரும்பு, பனங்கிழங்கு உள்ளிட்டவை வைத்து சிறப்பு வழிபாடும் நடக்கும்.
பொங்கல் வைக்க உகந்த நேரம்
நடப்பாண்டு பொங்கல் பண்டிகையான திங்கட்கிழமை வந்துள்ளதால் என்பதால் பஞ்சாங்கத்தில் காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பொங்கலிட சிறந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை இராகு காலம் என்பதால் அதற்கு மேல்  எமகண்டம், குளிகை தவிர்த்து மற்ற நேரங்களில் பொங்கலிடலாம். அதேசமயம் பொதுமக்கள் மறக்காமல் தங்கள் உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினருக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து மகிழுங்கள். இனிய பொங்கல் வாழ்த்துகள்..!

Source link

• Thai Pongal 2024 Villupuram Shopping Street Is Busy Ahead Of Thai Pongal Mattu Pongal

Thai Pongal 2024 Villupuram Shopping Street Is Busy Ahead Of Thai Pongal Mattu Pongal

விழுப்புரம்: தை பொங்கலை முன்னிட்டு விழுப்புரம் வணிக வீதியில் புத்தாடைகள் மற்றும் மாடுகளுக்கு தேவையான வண்ண வண்ண கயிறுகள், பூக்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டபட உள்ளதால் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு விழுப்புரம் வணிக வீதியான எம்.ஜி சாலையில் உள்ள கடைகளில் பொதுமக்கள் பொருட்களை வாங்குவதற்கு அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர், பொங்கல் பண்டிகை என்றாலே சிறப்பு வாய்ந்தது கிராமப்புறம் தான், கிராமப்புறத்தில் குடும்பத்தினர்கள் ஒன்று கூடி பொங்கலிட்டு தைப்பொங்களை கொண்டாடுவதற்கும் மாடுகளுக்கு கொம்பு சீவி வண்ண அலங்காரங்கள் தீட்டி வழிபடுவர்.

இதற்காக எம்.ஜி சாலையில் உள்ள வணிக கடைகளில் மாடுகள் கழுத்தில் அணிவதற்கு  வண்ண வண்ண கயிறுகள், கழுத்து மணிகள், மூக்கணாங்கயிறுகள் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் வாங்கிச் சென்றனர் இதே போன்று பூக்களை வாங்குவதற்கும், புத்தாடைகள் வாங்குவதற்கும் இந்த பகுதியில் மக்கள் அதிகமாக திரண்டதால் விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, பொங்கல் பண்டிகை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், குற்ற செயலை தடுப்பதற்கு வணிக விதிகள் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தை மாதம் ஏன் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது?
தை மாதத்தை பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் மிக முக்கியமான மாதமாகவும், நன்மை தரும் மாதமாகவும் பார்ப்பார்கள். இந்த மாதத்தில்தான் தங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் நிகழும் என்றும், தங்கள் பிரச்சினைகள் தீரும் என்றும் மக்கள் நம்புகின்றனர்.

நெல், கரும்பு, மஞ்சள் போன்றவற்றை அறுவடை செய்யும் காலம் இது. இந்த மாதத்தில் நிச்சயதார்த்தம், திருமணங்கள் மற்றும்  புது வீடு பால் காய்ச்சுதல் போன்ற நற்காரியங்களை மக்கள் அதிகளவில் செய்வர்.

Source link

• Thai Pongal 2024: ஆண்டுதோறும் மகிழ்ச்சி பொங்கும் ’பொங்கல்’! ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு தெரியுமா?

Thai Pongal 2024: ஆண்டுதோறும் மகிழ்ச்சி பொங்கும் ’பொங்கல்’! ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு தெரியுமா?

பொங்கல் தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவின் வடநாட்டு பகுதிகளில் இது மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. இது தமிழ்நாட்டை தவிர ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த விழா பெரிதாக கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் வாரத்தில் ஆண்டுதோறும் கொண்டாப்படும் இந்த ’பொங்கல்’ பண்டிகை உழவர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு பெருவிழாவாக பார்க்கப்படுகிறது.

அரைக்கோளத்தின் தெற்குப் புள்ளியில் சூரியன் அஸ்தமித்து, வடக்கு நோக்கி தனது பயணத்தை தொடங்கும் நிகழ்வாக பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு ஜனவரி 15 அன்று தொடங்கி ஜனவரி 18ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

தை மாதம் ஏன் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது?

தை மாதத்தை பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் மிக முக்கியமான மாதமாகவும், நன்மை தரும் மாதமாகவும் பார்ப்பார்கள். இந்த மாதத்தில்தான் தங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் நிகழும் என்றும், தங்கள் பிரச்சினைகள் தீரும் என்றும் மக்கள் நம்புகின்றனர். நெல், கரும்பு, மஞ்சள் போன்றவற்றை அறுவடை செய்யும் காலம் இது. இந்த மாதத்தில் நிச்சயதார்த்தம், திருமணங்கள் மற்றும்  புது வீடு பால் காய்ச்சுதல் போன்ற நற்காரியங்களை மக்கள் அதிகளவில் செய்வர்.

பொங்கல் வரலாறு உங்களுக்கு தெரியுமா..?

புராண கால வரலாறுபடி, பொங்கல் கொண்டாட இருவேறு கதைகள் கூறப்படுகிறது. அதில் ஒன்று, சிவனையும் நந்தியையும் பற்றியது. மற்றொன்று, கிருஷ்ணரையும் இந்திரனையும் பற்றியது.

கதை: 1

சிவபெருமான் தனது காளையான நந்தியை பூமிக்கு அனுப்பி, மக்களிடம் ஒவ்வொரு நாளும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கவும், மாதத்திற்கு ஒரு முறை உணவையும் சாப்பிட சொல் என்று தூது அனுப்பியுள்ளார்.

பூமிக்கு சென்ற நந்தி குழம்பிபோய், மக்களிடம் அனைவரும் தினமும் சாப்பிடவும், மாதம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த சிவபெருமான், நந்தியை பூமியில் நித்தமும் கழிக்கும்படி சாபமடைந்தார். மேலும் வயல்களை உழுது, அதிக உணவை உற்பத்தி செய்வதில் மக்களுக்கு உதவும் பொறுப்பை பெற்றது நந்தி. இதன் விளைவாக, தற்போதுவரை  புதிய விளைபொருட்களுக்கான பயிர் அறுவடை செய்வதற்கு கால்நடைகள் உதவியாக கூறப்படுகிறது.

கதை: 2

புராணங்களின்படி, அனைத்து தேவர்களுக்கும் ராஜாவாகிறார் இந்திரன். இதனால், அவர் அதிக கர்வம் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, குழந்தை பருவத்தில் இருந்த கிருஷ்ணர், பசு மேய்பவர்கள் அனைவரையும் இந்திரனை வணங்க வேண்டாம் என்றும், நிறுத்துமாறும் கூறியுள்ளார். இதனால், கோபம் கொண்ட இந்திரன் இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்த பேரழிவு ஏற்படுத்த மேகங்களை அனுப்பியுள்ளார்.

இதையறிந்த பகவான் கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தூக்கி, மக்கள் மற்றும் அனைத்து கால்நடைகளையும் பாதுகாக்க செய்து, இந்திரனுக்கு அருள் புரிகிறார். இதனால், இந்திரனின் கோபம் உடைந்து, கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டார். இதையே கொண்டாடும் நிகழ்வாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

பொங்கல் விழா:

விழா

தேதி

நாள்

போகி

ஜனவரி 14

ஞாயிற்றுக்கிழமை

பொங்கல்

ஜனவரி 15

திங்கட்கிழமை

திருவள்ளுவர் தினம்

ஜனவரி 16

செவ்வாய்

உழவர் திருநாள்

ஜனவரி 17

புதன்

Source link