இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற பின்னர், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் 122 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் 121 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அதேபோல் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி 266 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஐந்து இடங்களில் உள்ள அணிகள்

இந்தியா – 38 போட்டிகளில் விளையாடி 122 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா – 37 போட்டிகளில் விளையாடி 117 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இங்கிலாந்து – 49 போட்டிகளில் விளையாடி 111 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

நியூசிலாந்து – 29 போட்டிகளில் விளையாடி 101 புள்ளிகளை எட்டியுள்ளது.

தென்னாப்பிரிக்கா – 27 போட்டிகளில் விளையாடி 97 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் ஐந்து இடங்களில் உள்ள அணிகள்

இந்தியா – 58 போட்டிகளில் விளையாடி 121 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா – 45 போட்டிகளில் விளையாடி 118 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

தென்னாப்பிரிக்கா – 37 போட்டிகளில் விளையாடி 110 புள்ளிகளுடன் விளையாடி மூன்றாவது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் – 36 போட்டிகளில் விளையாடி 109 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

நியூசிலாந்து – 46 போட்டிகளில் விளையாடி 102 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

டி20 கிரிக்கெட்டில் முதல் ஐந்து இடங்களில் உள்ள அணிகள்

இந்தியா – 71 போட்டிகளில் விளையாடி 266 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து – 48 போட்டிகளில் விளையாடி 256 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா – 45 போட்டிகளில் விளையாடி 255 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

நியூசிலாந்து – 63 போட்டிகளில் விளையாடி 254 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் – 48 போட்டிகளில் விளையாடி 249 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி வீரர்கள்

டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர்கள் இருவர் டாப் 10 இடத்தில் உள்ளனர். அவர்களில் விராட் கோலி 8வது இடத்தில் 744 புள்ளிகளுடன் உள்ளார். ஜெய்ஸ்வால் 727 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா முதல் இடத்தில் உள்ளார். அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஜடேஜா 7வது இடத்தில் உள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள்

ஒருநாள் பேட்டிங் தரவரிசைப் பட்டியலைப் பொறுத்தவரையில் சுப்மன் கில் இரண்டாவது இடத்திலும் விராட் கோலி மூன்றாவது இடத்திலும் ரோகித் சர்மா நான்காவது இடத்திலும் உள்ளனர். பவுலிங்கில் சிராஜ் 4வது இடத்திலும் பும்ரா 5வது இடத்திலும் உள்ளார். குல்தீப் யாதவ் 9வது இடத்தில் உள்ளார்.

டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள்

டி20 கிரிக்கெட் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் முதல் இடத்திலும் ஜெய்ஸ்வால் 6வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சினைப் பொறுத்தவரையில், அக்‌ஷர் பட்டேல் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் ஐந்தாவது மற்றும் 6வது இடத்தில் உள்ளனர்.

Tag: டெஸ்ட்

ICC Rankings: ”அலப்பறை கிளப்புறோம்” மூன்று வகை கிரிக்கெட்டிலும் முதல் இடத்தை பிடித்த இந்தியா

IND VS ENG Test Series: தொடரை வென்ற இந்தியா; கோப்பையுடன் சாதனைகளை அள்ளிக்கொண்டு வந்த வீரர்கள்; லிஸ்ட் இதோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றியின் மூலம் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது மட்டும் இல்லாமல் பல்வேறு சாதனைகளை அணியாகவும் வீரர்களாகவும் படைத்துள்ளது. அதன் விபரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த டெஸ்ட் போட்டி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுடைய 100வது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஆகும். இந்த போட்டியில் அஸ்வின் மொத்தம் 9 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் 147 ஆண்டுகால சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒருவர் தனது அறிமுகப் போட்டியிலும் 100வது போட்டியிலும் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் கைப்பற்றிய 5 விக்கெட்டுகள் மூலம், 36 முறை ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து, அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் மொத்தம் 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய குல்தீப் யாதவ்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நாயகனாக யெஸ்யெஷ்வி ஜெய்ஸ்வாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் இந்த தொடரில் இரண்டு இரட்டைச் சதம், ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் என மொத்தம் இந்த தொடரில் மட்டும் 712 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்தது மட்டும் இல்லாமல் ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன்களுக்கு மேல் குவித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை சுனில் கவாஸ்கருக்குப் பின்னர் பெற்றுள்ளார்.

ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். அவர் இந்த தொடரில் மொத்தம் 26 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.

இதுமட்டும் இல்லாமல் இந்திய அணி இந்த தொடரை தோல்வியுடனே தொடங்கியது. முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்த இந்திய அணி அதன் பின்னர் நடைபெற்ற 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது மட்டும் இல்லாமல், தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதன் மூலம் 112 ஆண்டுகால இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரை 0 – 1 என்ற கணக்கில் தொடங்கி, 4 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தனிச் சாதனை படைத்துள்ளது.

5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் டாப் ஐந்து வீரர்கள் அரைசம் விளாசி சாதனை படைத்துள்ளனர்.

இங்கிலாந்து வீரர்கள் செய்த சாதனைகள்

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டினை கைப்பற்றியுள்ளார். இதுமட்டும் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

IND Vs ENG 2024 Ollie Robinson, Shoaib Bashir Included In England XI For Ranchi Test
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணி விவரம்:
ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பார்ஸ்டோ, கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பென் போக்ஸ் ( விக்கெட் கீப்பர்), டாம் ஹார்ட்லி, ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயிப் பஷீர்.
இங்கிலாந்து அணி கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் தோற்றதால் அவர்கள் இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். இந்த போட்டியில் தோற்றால் அவர்கள் தொடரை இழந்து விடுவார்கள். ராஞ்சி மைதானமானது சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால் இரு அணிகளும் சுழலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சுழல் பலம்:
இங்கிலாந்து அணியின் சுழல் பலமாக டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் உள்ளனர். முக்கிய சுழற்பந்துவீச்சாளராக டாம் ஹார்ட்லி மற்றும் சோயிப் பஷீர் உள்ளனர். பஷீர் ஏற்கனவே விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன்கில் விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். இங்கிலாந்து அணியுடன் ஒப்பிடும்போது இந்தியா சுழற்பந்துவீச்சில் பலமாக உள்ளது. அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் என பலமாக உள்ளனர்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை யாரிடமும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாது பெரும் பின்னடைவாக உள்ளது. ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம்.
ஜானி பார்ஸ்டோ பேட்டிங் பரிதாபம்:
ஜானி பார்ஸ்டோ இந்த டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். அவர் இதுவரை ஆடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் சொதப்பியது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. அதேபோல, இங்கிலாந்து அணியின் பலமான ஜோ ரூட் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இந்திய அணியில் நாளைய டெஸ்ட் போட்டியில் பும்ரா ஆடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவருக்கு பதிலாக களமிறங்கப் போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியில் கே.எல்.ராகுல் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் தொடர்ந்து சிறப்பாக ஆடுவார்கள் என்று நம்பலாம். கேப்டன் ரோகித் சர்மாவின் அனுபவம் இந்த டெஸ்ட் போட்டியிலும் தொடரும் என்று கருதப்படுகிறது.
மேலும் படிக்க: Most Ducks in IPL: ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் படைத்த மோசமான சாதனை! அதிர்ச்சியில் ரசிகர்கள்
மேலும் படிக்க:Mohammed Shami: ஐபிஎல்-லில் இருந்து விலகும் முகமது ஷமி; குஜராத் அணிக்கு புதிய சிக்கல்; காரணம் என்னனு தெரியுமா?
IND Vs ENG 3rd Test India Won Toss Elected Bat First Dhruv Joel Sarfaraz Khan Debut
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் முதன்முறையாக துருவ் ஜோயல் மற்றும் சர்ப்ராஸ் கான் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர். இதுவரை இந்திய அணிக்காக விக்கெட் கீப்பராக களமிறங்கி வந்த கே.எஸ்.பரத்துக்கு பதிலாக இந்த போட்டியில் துருவ் ஜோயல் விக்கெட் கீப்பராக களமிறங்கியுள்ளார்.
🚨 Team Update 🚨4⃣ changes in #TeamIndia’s Playing XI for RajkotDhruv Jurel and Sarfaraz Khan are all set to make their Test Debuts 🙌Follow the match ▶️ https://t.co/FM0hVG5X8M#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/rk1o1dNQMc
— BCCI (@BCCI) February 15, 2024இந்த மைதானம் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இங்கிலாந்து அணியில் பந்துவீச்சாளர்களாக ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட் வேகத்தில் மிரட்ட காத்துள்ளனர். இவர்களுடன் பென் ஸ்டோக்சும் இந்திய அணியை வேகத்தில் அச்சுறுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் புதிய இளம் சுழல் கூட்டணி ரெஹன் அகமது – டாம் ஹார்ட்லி இந்த போட்டியில் எப்படி வீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கு தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித்சர்மா, ஜெய்ஸ்வால் களமிறங்குகின்றனர். சுப்மன்கில் கடந்த டெஸ்ட் போல இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடினால் இந்திய அணிக்கு பக்கபலமாக அமையும்.
இளம் வீரர்களான படிதார், சர்ப்ராஸ் கான், துருவ் ஜோயல் தங்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுழல் கூட்டணியாக ஜடேஜா – அஸ்வின் – குல்தீப் யாதவ் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, சிராஜ் மிரட்ட காத்துள்ளனர்.
இதுவரை இரு அணிகளும் மோதிய முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து, இந்தியா தலா 1 போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் முனைப்பு காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில் இந்திய அணி ரன்களை குவிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இளம் வீரர்கள் படிதார், சர்ப்ராஸ் கான், துருவ் ஜோயல் எப்படி ஆடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

IND vs ENG: இன்று 3வது டெஸ்ட் தொடக்கம்! இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்துமா இந்தியா?

இந்தியா வந்துள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

இன்று 3வது டெஸ்ட்:

இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் இன்று குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மைதானத்தில் மோதுகின்றனர். இரு அணிகளும் தலா 1 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இருப்பதால் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற ஆர்வத்துடன் இருப்பார்கள்.

கடந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தன்னம்பிக்கையுடன் இருக்கும். இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக விராட்கோலி இந்த தொடரில் இருந்து விலகியிருப்பது அமைந்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் விராட் கோலி ஒரு டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலகியிருப்பது இதுவே முதன்முறை ஆகும். கே.எல்.ராகுலும் இந்த டெஸ்டில் இருந்து விலகியிருப்பது இந்திய அணிக்கு பலவீனம் ஆகும்.

பேட்டிங், பவுலிங்:

இந்திய அணிக்கு பேட்டிங்கில் பலமாக ஜெய்ஸ்வால், சுப்மன்கில் போன்ற இளம் வீரர்கள் உள்ளனர். இவர்களுடன் அனுபவம் வாய்ந்த கேப்டன் ரோகித்சர்மா உள்ளார். கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக சோபிக்காத ரோகித் சர்மா இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்தால் இங்கிலாந்துக்கு தலைவலியாக அமையும். ஸ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இளம் வீரர்களான படிதார், பரத், படிக்கல் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். பந்துவீச்சில் பும்ரா அசத்தி வருகிறார். அவருடன் கடந்த போட்டியில் களமிறங்காத சிராஜ் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு பக்கபலமாக இருப்பது அஸ்வின், அக்‌ஷர் படேல், ஜடேஜா சுழல் ஆகும். இந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் கண்டிப்பாக 500 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து பலம், பலவீனம்:

இங்கிலாந்து அணியும் சரிசம பலம் வாய்ந்த அணியாக உள்ளனர். கிராவ்லி, டக்கெட் சிறந்த தொடக்கம் அளித்தால் பின்வரிசைக்கு பக்கபலமாக அமையும். ஒல்லி போப்பும் சிறந்த ஃபார்மில் உள்ளார். முன்னாள் கேப்டன் ஜோ ரூட் சிறப்பாக பேட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவர் தொடர்ந்து மோசமாக ஆடி வருவது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் அச்சுறுத்தலாக இருப்பார் என்று கருதப்படுகிறது. இளம் வீரர் சோயிப் பஷீர், ரெஹன் அகமது சுழலில் அச்சுறுத்தலாக திகழ்வார்கள் என்று கருதப்படுகிறது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அந்த அணிக்கு பக்கபலமாக உள்ளார்.

பேட்டிங் சாதகம்:

சரிசம பலம் வாய்ந்த இரு அணிகளும் இன்று மோதுவதால் நிச்சயம் ரசிகர்களுக்கு இந்த போட்டி விருந்தாக அமையும் என்று கருதப்படுகிறது. ராஜ்கோட் மைதானத்தில் 28 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க முடியும். இந்த மைதானம் பேட்டிங்கிற்கு பக்கபலமான மைதானம் ஆகும்.

முதல் இன்னிங்சின் சராசரி ஸ்கோர் இங்கு 593 ஆகும். இரண்டாவது இன்னிங்சின் சராசரி ஸ்கோர் 334 ஆகும். 3வது இன்னிங்சின் சராசரி ஸ்கோர் 228 ஆகும். 4வது இன்னிங்சின் சராசரி ஸ்கோர் 172 ஆகும்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி இந்த மைதானத்தில் 649 ரன்களை விளாசியதே அதிகபட்சம் ஆகும். வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களை எடுத்ததே குறைந்தபட்சம் ஆகும்.

Indian Cricketer Cheteshwar Pujara Explains How Age Is Just A Number To Him
எந்தவொரு செயலையும் சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு பலரும் உதாரணமாக உள்ளனர். விளையாட்டிலும் சாதிப்பதற்கு வயது தடையில்லை என்றாலும், உடல் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். இதன் காரணமாக, பல விளையாட்டுகளில் 33 வயதை கடந்த பிறகு ஒரு வீரர் எப்போது ஓய்வு பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட கிரிக்கெட்டிற்கும் அது பொருந்தும்.
புஜாரா:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் புஜாரா. 36 வயதான புஜாரா டெஸ்ட் வீரர் என்றே முத்திரை குத்தப்பட்டவர். இந்திய அணிக்காக பல டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற வைத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு இவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
வயது என்பது வெறும் எண்:
புஜாரா தன்னால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியும் என்று நம்பிக்கையுடன் உள்ளார். இதுதொடர்பாக, அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “ என்னைப் பொறுத்தவரை வயது என்பதை ஒரு எண்ணாகவே கருதுகிறேன். உதாரணத்திற்கு ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 41 வயதாகிவிட்டது. ஆனால், இப்போது வரை இங்கிலாந்தின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் அவர். ஜோகோவிச் சமீபத்தில் 35 என்பது புதிய 25 என்றார்.
நான் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடினால் எனது உடலை சிறப்பாக பராமரிக்க முடியும். நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செ ்ய வேண்டும். இங்கிலாந்து அணி தற்போது தாக்குதல் ஆட்டம் ஆடுகிறது. ஆனால், அது அனைத்து மைதானங்களிலும் கிடையாது. டியூக்ஸ் பந்துகளில் அதேபோல நகர்வுகள் கிடையாது.
வெற்றியே முக்கியம்:
முன்பு இங்கிலாந்தில் கிரிக்கெட் என்பது கடினம். தற்போது கிரிக்கெட் மாறுகிறது. ஏராளமான ஷாட்கள் ஆடுகிறார்கள். மைதானங்கள் தற்போது அதற்கு ஒத்துழைக்கிறது. ஆனால், உங்களால் அதை தென்னாப்பிரிக்காவில் செய்ய முடியாது.
நான் என் பலத்தை புரிந்து கொள்ள வேண்டும், அது எப்படி அணிக்கு உதவ வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு அடுத்து பேட் செய்ய வருபவர்களுக்கு பலமாக இருக்க வேண்டும். நான் நன்றாக ஸ்கோர் செய்திருந்தால் அது அணிக்கு உதவும். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நன்றாக ஆடுவதை விட வெற்றி பெறுவதே முக்கியம் என்று நான் கருதுகிறேன். நீங்கள் நேர்மறையுடன் ஆடி அணியை வெற்றி பெற வைத்தால் அது அணிக்கு நல்லது. விளையாடுவதற்கு பல வழிகள் உள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது புஜாரா ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடி வருகிறார். சவுராஷ்ட்ரா அணிக்காக ஆடி வரும் புஜாரா தற்போது நடந்து வரும் தொடரில் 10 இன்னிங்ஸில் ஆடி 673 ரன்களை எடுத்துள்ளார். அதில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக 243 ரன்கள் எடுத்ததும் அடங்கும். புஜாரா 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 19 சதங்கள், 3 இரட்டை சதங்கள், 35 அரைசதங்கள் உள்பட 7 ஆயிரத்து 195 ரன்கள் எடுத்துள்ளார். 5 ஒருநாள் போட்டிகளில் ஆடி 51 ரன்களும், 30 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 1 அரைசதம் உள்பட 390 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் படிக்க: Imran Tahir: 44 வயதில் 500 டி20 விக்கெட்டுகள்.. வயது தடையல்ல என நிரூபித்த இம்ரான் தாஹிர்!
மேலும் படிக்க: IPL 2024: ஹர்திக் பாண்டியாவின் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கர் நிரப்புவார் – சுனில் கவாஸ்கர்!
Shreyas Iyer: இந்திய அணிக்கு அடுத்த தலைவலி! ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம்? அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் விசாகப்பட்டனத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி வரும் 15ஆம் தேதி ராஜ் கோட்டில் தொடங்கவுள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்?

இந்நிலையில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வரும் 15ஆம் தேதி ராஜ் கோட்டில் தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணத்தால் விளையாடமாட்டார் என்ற தகவல் ஆங்கில ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் இருந்தோ, இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் தரப்பில் இருந்தோ எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் காயத்தின் தன்மை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லாத காரணத்தால் அவர் அடுத்த போட்டியில் மட்டும் விளையாட மாட்டாரா? அல்லது அடுத்த மூன்று போட்டிகளிலும் விளையாட மாட்டாரா எனவும் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

மூன்றாவது டெஸ்ட்டில் எப்படி?

முதல் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை. முதல் போட்டியில் விளையாடாத விராட் கோலி இரண்டாவது போட்டியிலும் விளையாடவில்லை. இரண்டாவது போட்டியில் சீனியர் வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணி தோல்வியைச் சந்திக்கும் என உலக கிரிக்கெட் அரங்கில் பேசப்பட்டது. ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இளம் இந்திய அணியை வைத்து பலமான இங்கிலாந்து அணியை அடித்து துவம்சம் செய்தது.

இந்நிலையில் இந்திய அணி வரும் 15ஆம் தேதி சீனியர் வீரர்கள் இல்லாமல் பலமான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளப்போகின்றதா அல்லது அதற்குள் அனைவரும் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த இரண்டு போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் எப்படி?

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் மொத்தம் 104 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதில் முதல் டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 48 ரன்களும், இரண்டாவது டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 56 ரன்களும் சேர்த்துள்ளார்.

அடுத்துள்ள போட்டிகள் எப்போது? எங்கு?

மூன்றாவது டெஸ்ட் போட்டி – பிப்ரவரி 15 முதல் 19 ராஜ் கோட்டில் உள்ள சவ்ராஸ்ட்ரா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நான்காவது டெஸ்ட் போட்டி – பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 27ஆம் தேதி வரை ராஞ்சியில் உள்ள ஜெஎஸ்சிஏ சர்வதேச மைதானம்

ஐந்தாவது டெஸ்ட் போட்டி – பிப்ரவை 07 முதல் பிப்ரவரி 11 வரை தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

IND vs ENG: 2வது டெஸ்டில் முகமது சிராஜ் களமிறங்காதது ஏன்? ரோகித் சர்மா தந்த விளக்கம்

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் – ரோகித்சர்மா பேட்டிங் செய்து வருகின்றனர்.

முகமது சிராஜ் களமிறங்காதது ஏன்?

இன்றைய போட்டியில் இந்திய அணிக்காக அறிமுக வீரராக ரஜத் படிதார் களமிறங்கியுள்ளார். இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்திய அணியின் அனுபவ வீரர் முகமது சிராஜ் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக இளம் பந்துவீச்சாளர் முகேஷ்குமார் களமிறங்கியுள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் ஏன் களமிறக்கப்படவில்லை என்று கேப்டன் ரோகித்சர்மா விளக்கம் அளித்துள்ளார். அதில், “ கடந்த ஆறு மாதங்களில் எவ்வளவு போட்டிகள் அவர் ஆடியுள்ளார் என்று பாருங்கள். அதனால், அவருக்கு ஓய்வு அளிப்பது நல்லது என்று அளித்துள்ளோம். நாங்கள் முகேஷ்குமார், குல்தீப் யாதவை களமிறக்கி உள்ளோம். ரஜத் படிதார் அறிமுகமாகியுள்ளார்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு பின்னடைவு:

முகமது சிராஜ் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்திய அணிக்காக தொடர்ந்து ஆடி வருகிறார். அந்தாண்டு முதல் நடந்து வரும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் முக்கிய பந்துவீச்சாளராக களமிறங்கி ஆடி வருகிறார். கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

இந்திய அணியின் மற்றொரு பந்துவீச்சாளர் முகமது ஷமி இந்த தொடரில் பங்கேற்காத சூழலில், இன்றைய போட்டியில் முகமது சிராஜ் இல்லாததும் பெரும் பின்னடைவாக உள்ளது. ஏற்கனவே இந்திய அணிக்காக கடந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்காத விராட் கோலி, இந்த டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கவில்லை. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ள நிலையில், நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது சிராஜ் இல்லாததும் இந்திய அணிக்கு பின்னடைவாக உள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் இந்திய அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:

ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ( கேப்டன்), சுப்மன்கில், ரஜத் படிதார், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பரத், அஸ்வின், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா, முகேஷ்குமார்.

இங்கிலாந்து அணி விவரம்:

ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பார்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், பென் போக்ஸ், ரெஹன் அகமது, டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்

England Announce XI For 2nd Test Vs India James Anderson Returns Debut For Shoaib Bashir | IND Vs ENG: நாளை 2வது டெஸ்ட்! இங்கிலாந்து அணிக்காக மீண்டும் களமிறங்கும் ஆண்டர்சன்
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மீண்டும் திரும்பிய ஜேம்ஸ் ஆண்டர்சன்:
இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது. கடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் இந்த போட்டியில் கூடுதல் கவனத்துடன் ஆடும்.
இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த போட்டியில் மீண்டும் களமிறங்க உள்ளார்.
We have named our XI for the second Test in Vizag! 🏏🇮🇳 #INDvENG 🏴 | #EnglandCricket
— England Cricket (@englandcricket) February 1, 2024
இங்கிலாந்து அணியின் விவரம் பின்வருமாறு:
ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பார்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ், ரெஹன் அகமது, டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
அறிமுக வீரராக சோயிப் பஷீர்:
இங்கிலாந்து அணிக்காக கடந்த டெஸ்ட் போட்டியில் சுழலில் அசத்திய டாம் ஹார்ட்லி அறிமுக வீரராக களமிறங்கினார். நாளை தொடங்க உள்ள டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக சோயிப் பஷீர் அறிமுக வீரராக களமிறங்க உள்ளார். 20 வயதே ஆன சோயிப் பஷீர் வலது கை சுழற்பந்துவீச்சு மற்றும் பேட்ஸ்மேன் ஆவார். கடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக களமிறங்கி அசத்திய டாம் ஹார்ட்லியை போல சோயிப் பஷீரும் இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவாரா? என்பது இந்த போட்டியில் தெரிய வரும்.
இந்திய அணி கடந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடியும், இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்சில் விக்கெட்டை கைப்பற்ற தவறியதால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. மேலும், இந்திய அணியில் விராட் கோலி இல்லாதது பின்னடைவாக உள்ளது. விராட் கோலி நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியிலும் ஆடமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் 2வது இன்னிங்சில் சிறப்பாக செயல்படாதது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால், இந்த போட்டியில் இந்திய அணி அந்த தவறை சரி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: IPL 2024: ஆர்சிபி அணியில் இணையும் ஷமர் ஜோசப்..? டாம் கர்ரனுக்கு பதிலாக ஐபிஎல்லில் அறிமுகமாகும் வாய்ப்பு!
மேலும் படிக்க: ICC Test Rankings: ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதல் இடத்தை அலங்கரிக்கும் அஸ்வின்! ஆல்-ரவுண்டர் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் ஜடேஜா!