சண்டிகர் மேயர் தேர்தல் தொடங்கி தேர்தல் பத்திரங்கள் சர்ச்சை வரை பல அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட். இவர், தலைமை நீதிபதியாக பதவியேற்றபோது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சட்டப் பிரிவு 370, தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கு உள்ளிட்டவற்றில் சந்திரசூட் வழங்கிய தீர்ப்பு பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி அறிவுரை:

ஆனால், சமீப காலமாக, அவர் வழங்கி வரும் தீர்ப்புகள் பெரும் வரவேற்பை பெறும் வகையில் உள்ளது. இந்த நிலையில், வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் அரசியலமைப்புக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும் என இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுரை வழங்கியுள்ளார்.

நாக்பூர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், "நம்மைப் போன்ற துடிப்பான விவாதத்திற்குரிய ஜனநாயகத்தில், பெரும்பாலான தனிநபர்களுக்கு அரசியல் சித்தாந்தம் உள்ளது. அல்லது அதன் மீது விருப்பம் உள்ளது.

மனிதர்களை அரிஸ்டாட்டில் அரசியல் விலங்குகள் என குறிப்பிடுகிறார். அதற்கு வழக்கறிஞர்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல. இருப்பினும், வழக்கறிஞர்களுக்கு அதிகபட்ச விசுவாசம் கட்சிகள் மீது இருக்கக் கூடாது. அதன் நலன்கள் சார்ந்து இருக்கக்கூடாது. மாறாக நீதிமன்றம் மற்றும் அரசியலமைப்பின் மீது இருக்க வேண்டும்.

"சுதந்திரத்தை நிலைநிறுத்திய நீதித்துறை"

நீதித்துறையானது தனது சுதந்திரம் மற்றும் பாரபட்சமற்ற தன்மையை பல சந்தர்ப்பங்களில் நிலைநிறுத்தியுள்ளது. இதன் மூலம், அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், அரசியல் நலன்களுக்கான அதிகாரங்கள் தனித் தனியே இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சுதந்திரமான வழக்கறிஞர் சமூகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பு நிர்வாகத்தைப் பாதுகாப்பதற்கான தார்மீக அரணாக செயல்படுகிறது.

கடுமையான செயல்பாடுகள், முழுமையான சட்டப் பகுப்பாய்வு, அரசியலமைப்பு கோட்பாடுகளுக்கு அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உச்சத்தையே உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

தீர்ப்பு வந்தவுடன் அது பொதுச் சொத்தாகிவிடும். ஒரு நிறுவனமாக, எங்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது. பத்திரிகை கட்டுரைகள் மூலமாகவோ, அரசியல் விமர்சனங்கள் வாயிலாகவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவோ பாராட்டுக்களும் விமர்சனங்களும் வரும். பாராட்டுக்கள் மற்றும் விமர்சனங்களைப் பெற நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.

மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஷ்ரா உள்பட 600க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சேர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சமீபத்தில் கடிதம் எழுதினர். அதில், நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக கவலை தெரிவித்திருந்தனர்.

Tag: டி.ஒய். சந்திரசூட்

Chief Justice Chandrachud : "அரசியலமைப்புக்கு மட்டுமே விசுவாசமா இருக்கனும்" இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் அட்வைஸ்!

Tamil Nadu Governor RN Ravi was openly defying our order Supreme Court on Ponmudi case
Ponmudi Case: திமுக மூத்த தலைவர் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு ஆளுநர் மறுத்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.
ஆளுங்கட்சி – ஆளுநர் மோதல்:
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே கடும் அதிகார போட்டி நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் பல முறை தீர்ப்பு வழங்கியுள்ளது.
மாநில அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டாலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுடன் ஆளுநர் தொடர் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் அரசு இயந்திரம் முடங்கும் அளவுக்கு பிரச்னை வெடித்துள்ளது. இந்த நிலையில், பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மறுத்த விவகாரம் புயலை கிளப்பியது.
பொன்முடி வழக்கின் பின்னணி என்ன?
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் தி.மு.க. தலைவர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 ஆண்டுகள் சிறை தண்டனை காரணமாக எம்.எல்.ஏ பதவியும் அமைச்சர் பதவியும் பறிபோனது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன்முடிக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இதையடுத்து, பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க திமுக முடிவு செய்தது.
எனவே, பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு ஆளுநர் ரவியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரம் கேட்டிருந்தார். ஆனால், பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுத்துவிட்டார். இதையடுத்து, பொன்முடி விவகாரத்தில் தி.மு.க. உச்ச நீதிமன்றத்தை நாடியது. தி.மு.க. தொடர்ந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் அடங்கிய அமர்வு, ஆளுநரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தது.
ஆளுநரை புரட்டி எடுத்த உச்ச நீதிமன்றம்:
தனது செயல்கள் மூலம் உச்ச நீதிமன்றத்தை மீறி ஆளுநர் நடந்து கொள்கிறார் என கூறிய தலைமை நீதிபதி சந்திரசூட், “ஆளுநரின் செயல்கள் எங்களுக்கு அதிக கவலைகளை தருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்ற மறுக்கிறார். தண்டனைக்கு தடை விதிக்கும்போது, இந்த விவகாரத்தில் வேறு விதமான முடிவை எடுக்க ஆளுநருக்கு உரிமை இல்லை.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். இங்கு சட்டத்தின்படிதான், ஆட்சி நடக்கிறதா? அரசியல் சாசன பதவியில் இருப்பவர் எப்படி இப்படி கூற முடியும். ஆளுநர் என்பவர் பெயர் அளவுக்கு மட்டும் நிர்வாக தலைவராக இருக்கிறார். அவரால் அரசுக்கு அறிவுரை மட்டுமே வழங்க முடியும். அவ்வளவுதான்” என்றார்.
தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, “இந்த அரசியல் சாசன தவறை சரி செய்ய ஆளுநருக்கு நாளை வரை அவகாசம் அளிக்கிறோம். நாளைக்குள் அவரிடம் இருந்து ஏதாவது பாசிட்டிவ்வான தகவல் வரவில்லை என்றால், இந்த விவகாரத்தில் நாங்களே உத்தரவு பிறப்பிப்போம்” என்றார்.
மேலும் காண

Video : வெளிநாட்டில் சட்டப்படிப்பு! சாதித்து காட்டிய உச்சநீதிமன்ற சமையல்காரரின் மகள் – மனமுருகி பாராட்டிய இந்திய தலைமை நீதிபதி!
சாதித்து காட்டிய உச்ச நீதிமன்ற சமையல்காரரின் மகள்
நாட்டின் சட்டம் மற்றும் நீதி அமைப்பில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியதோடு, உச்ச நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்து வருகிறார் டி.ஒய். சந்திரசூட். விதிகளை மீறுபவர்களிடமும், தவறு இழைத்தவர்களிடமும் கடுமையாக நடந்துகொள்வதோடு, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை உணர்ந்தும் செயல்பட்டு வருகிறார்.
தாராளவாத மற்றும் முற்போக்கான தீர்ப்புகளுக்காக நீதித்துறையில் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் சமூகத்திலும் தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டப்படுகிறார். அயோத்தி, தனிமனித உரிமை, சபரிமலை உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதிகளின் குழுவில் இவரும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள சல்லிவன் & குரோம்வெல் மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பயிற்சியை தொடங்குவதற்கு முன்பாக, டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், தனது சட்டபடிப்பு மற்றும் மேற்படிப்பினை மேற்கொண்டவர். ஜூனியர் வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கிய சந்திரசூட், இந்தியாவின் உச்சபட்ச பதவியை அலங்கரித்து வருகிறார்.
மனமுருகி பாராட்டிய இந்திய தலைமை நீதிபதி!
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சமையல்காரராக பணியாற்றி வருபவரின் மகளுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து, இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் அவரை அழைத்து பாராட்டியுள்ளார். உச்ச நீதிமன்ற சமையல்காரரின் மகள் பிரக்யா.
அமெரிக்காவில் இரண்டு பல்கலைக்கழகங்களில் முதுகலை சட்ட பட்டப்படிப்பை படிக்க பிரக்யாவுக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்துள்ளது. இதை தெரிந்து கொண்ட தலைமை நீதிபதி சந்திரசூட், உச்ச நீதிமன்றத்தில் உள்ள தனது அறைக்கு பிரக்யா, அவரது தாயார் மற்றும் தந்தையை அழைத்து பாராட்டியுள்ளார். அதுமட்டும் இன்றி, அவருக்கு புத்தகம் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார்.
VIDEO | Chief Justice of India DY Chandrachud felicitates Pragya, who is daughter of a cook in the Supreme Court. She recently got a scholarship to study masters in law in two different universities in the US. (Full video available on PTI Videos – https://t.co/n147TvqRQz) pic.twitter.com/0S8RVMOxjN
— Press Trust of India (@PTI_News) March 13, 2024அதோடு, பிரக்யாவின் தாயார் மற்றும் தந்தைக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பிரக்யாவை பாராட்டி பேசிய சந்திரசூட், “நீங்கள் கடினமாக உழைத்து முன்னேற விரும்பினால், தேவையான உதவிகள் அனைத்தையும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். முயற்சி செய்யும் மாணவனுக்கு தேவையான உதவிகள் கிடைக்காமல் இருக்கக்கூடாது” என்றார்.
பல சவால்களை சந்தித்து, தடைகளை எதிர்கொண்டால்தான் எதிலும் வெற்றி கிடைக்கும். உயர் நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பிடித்த கல்லூரியில் சேர்வதுதான் கனவே. தனக்கு பிடித்த கல்லூரியில் இடம் கிடைக்குமா? என எண்ணும் மாணவர்கள், பல இரவுகள் தூக்கம் இன்றி கழிக்கின்றனர். நிலைமை இப்படியிருக்க, எளிய குடும்பத்தில் பிறந்து தடைகளை தாண்டி சரித்திரம் படைத்துள்ளார் பிரக்யா.மேலும் காண