Tag: ஜனவரி 28

• உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டம்.. நாளை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!

உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டம்.. நாளை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!

உச்சநீதிமன்றத்தின் டிஜிட்டல் அறிக்கைகள், டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்சநீதிமன்றத்தின் புதிய இணையதளம் போன்ற பல்வேறு தொழில்நுட்ப முயற்சிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

இந்திய உச்ச நீதிமன்றம் ஜனவரி 28 ஆம் தேதி அதன் நிறுவப்பட்ட வைர விழாவைக் கொண்டாட உள்ளது. 1950ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி உச்ச நீதிமன்றக் கட்டிடம் எதுவும் இல்லாததால், இந்திய உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றக் கட்டிடத்தில் திறக்கப்பட்டது.

1950ஆம் ஆண்டு அசல் அரசியலமைப்பு இந்திய தலைமை நீதிபதி மற்றும் ஏழு நீதிபதிகளை மட்டுமே கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் 1950-ல் இருந்து நீதிபதிகளின் எண்ணிக்கையை 6 முறை அதிகரித்து 2019-ல் தற்போதைய பலமாக 34 ஆக உயர்த்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, ஜனவரி 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நாளை) உச்ச நீதிமன்றத்தில் வைர விழா கொண்டாடப்பட உள்ளது. அதன் நினைவாக நாளை கூடுதல் கட்டிட வளாக ஆடிட்டோரியத்தில் நடைபெறும் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த விழாவில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கலந்து கொள்கிறார்.

உச்ச நீதிமன்றத்தின் 75-வது ஆண்டை தொடங்கி வைக்கும் பிரதமர், உச்சநீதிமன்றத்தின் டிஜிட்டல் அறிக்கைகள்,டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்சநீதிமன்றத்தின் புதிய இணையதளம் உள்ளிட்ட மக்களை மையமாகக் கொண்ட தகவல் மற்றும் தொழில்நுட்ப முன்முயற்சிகளைத் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றுகிறார்.

உச்ச நீதிமன்ற டிஜிட்டல் அறிக்கைகள் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை நாட்டின் மக்களுக்கு இலவசமாகவும், மின்னணு வடிவத்திலும் கிடைக்கச் செய்வதே. டிஜிட்டல் அறிக்கைகளின் முக்கிய அம்சமாகும். இதன்படி, 1950ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற அறிக்கைகளின் 36,308 வழக்குகளை உள்ளடக்கிய அனைத்து 519 தொகுதிகளும்,  டிஜிட்டல் வடிவத்தில், புக்மார்க் செய்யப்பட்ட, பயனருக்கு ஏற்றதாக மற்றும் திறந்த அணுகலுடன் கிடைக்கும்.

மின்-நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் மின்னணு வடிவத்தில் நீதிமன்ற பதிவுகளை மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளுக்கு கிடைக்கச் செய்வதற்கான ஒரு முயற்சியே டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 என்பதாகும்.  இது நிகழ்நேர அடிப்படையில் பேச்சு மொழியை எழுத்து வடிவில்  படியெடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு  பயன்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் புதிய இணையதளத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். புதிய இணையதளம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இருமொழி வடிவத்தில் பயனருக்கு ஏற்றவகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

Source link

• Save Soil Movement : தென்னை விவசாயிகள் வருவாயை ஈட்டுவது எப்படி? உங்களுக்காக இதோ “தென்னிந்திய தென்னை திருவிழா”..

Save Soil Movement : தென்னை விவசாயிகள் வருவாயை ஈட்டுவது எப்படி? உங்களுக்காக இதோ “தென்னிந்திய தென்னை திருவிழா”..

தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையில் “தென்னிந்திய தென்னை திருவிழா” எனும் பிரமாண்ட நிகழ்ச்சியை ஈஷா மண் காப்போம் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த பிரமாண்ட  நிகழ்ச்சியானது வருகின்ற ஜனவரி 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஶ்ரீ விக்னேஷ் மஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஜன. 24) நடைபெற்றது. இதில் ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தமிழக  கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது, “கடந்த சில ஆண்டுகளாக தென்னை விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லை. தென்னைக்குள் ஊடுபயிர் செய்யும் விவசாயிகளை காட்டிலும் தென்னையை மட்டுமே  பயிர் செய்யும் விவசாயிகளுக்கு வருவாய் குறைவாகவே உள்ளது. தென்னைக்குள் ஜாதிக்காய், பாக்கு, மிளகு, டிம்பர் மர வகைகள், இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை ஊடுபயிராக வளர்ப்பதன் மூலம் முன்னோடி விவசாயிகள் பலரின் வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த லாபகரமான சூழல் அனைத்து விவசாயிகளுக்கும் சாத்தியம். அவர்களும் தென்னைக்குள் ஊடுபயிர் செய்வதன் மூலம் வருவாயை பெருக்க முடியும் என்பதை உணர்த்த இந்த “தென்னிந்திய தென்னை திருவிழா” நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளோம். இதில் 2000 விவசாயிகள் வரை கலந்து கொண்டு பயனடைய இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி தென்னிந்திய அளவில் நடப்பதால் பல மாநிலங்களில் இருந்தும் வல்லுனர்கள் மற்றும் முன்னாடி விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக, கர்நாடகாவை சேர்ந்த முன்னோடி விவசாயி சிவநஞ்சய்யா பாலேகாயி மற்றும் அருண்குமார், கேரளா பாலக்காடு பகுதியை சேர்ந்த ஸ்வப்னா ஜேம்ஸ் மற்றும் தமிழகத்தின் முன்னோடி விவசாயிகளான வள்ளுவன், ரசூல் மொய்தீன், வீரமணி இன்னும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தென்னை விவசாயிகள் அவர்களின் வருவாயை பல மடங்கு உயர்த்துவது குறித்த தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தென்னை விவசாயத்திற்கு தேவையான எளிமையான கருவிகளை காட்சிப்படுத்த இருக்கிறோம் மற்றும் அவை விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடக்க இருக்கும் “இயற்கை சந்தையில்” 60 இயற்கை அங்காடிகள் இடம்பெற உள்ளன. இதில் முன்னோடி விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் செய்த பாரம்பரிய காய்கறிகள், பயிர் வகைகள் மற்றும் அரிசி வகைகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்பு விவசாயிகள் 83000 93777, 94425 90077 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்” என தெரிவித்தார். ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தமிழக  கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் பேசும்போது அவருடன் முன்னோடி விவசாயி வள்ளுவன் உடன் இருந்தார்.

Source link

• South India Cocunut Festival: தென்னை விவசாயிகள் வருவாயை ஈட்டுவது எப்படி..? உங்களுக்காக இதோ “தென்னிந்திய தென்னை திருவிழா”..

South India Cocunut Festival: தென்னை விவசாயிகள் வருவாயை ஈட்டுவது எப்படி..? உங்களுக்காக இதோ “தென்னிந்திய தென்னை திருவிழா”..

தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையில் “தென்னிந்திய தென்னை திருவிழா” எனும் பிரமாண்ட நிகழ்ச்சியை ஈஷா மண் காப்போம் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த பிரமாண்ட  நிகழ்ச்சியானது வருகின்ற ஜனவரி 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஶ்ரீ விக்னேஷ் மஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஜன. 24) நடைபெற்றது. இதில் ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தமிழக  கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது, “ கடந்த சில ஆண்டுகளாக தென்னை விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லை. தென்னைக்குள் ஊடுபயிர் செய்யும் விவசாயிகளை காட்டிலும் தென்னையை மட்டுமே  பயிர் செய்யும் விவசாயிகளுக்கு வருவாய் குறைவாகவே உள்ளது. தென்னைக்குள் ஜாதிக்காய், பாக்கு, மிளகு, டிம்பர் மர வகைகள், இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை ஊடுபயிராக வளர்ப்பதன் மூலம் முன்னோடி விவசாயிகள் பலரின் வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த லாபகரமான சூழல் அனைத்து விவசாயிகளுக்கும் சாத்தியம். அவர்களும் தென்னைக்குள் ஊடுபயிர் செய்வதன் மூலம் வருவாயை பெருக்க முடியும் என்பதை உணர்த்த இந்த “தென்னிந்திய தென்னை திருவிழா” நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளோம். இதில் 2000 விவசாயிகள் வரை கலந்து கொண்டு பயனடைய இருக்கிறார்கள்.