43 years of Mouna Geethangal: குடும்ப உறவை சொல்லிய ஆல் டைம் ஃபேவரட் படம்: பாக்யராஜ் நடத்திய மாயாஜாலம்
<p>தமிழ் சினிமா இன்றளவும் கொண்டாடும் ஒரு திரைக்கதை வல்லுநர், திரைக்கதை மேதை மற்றும் ஜனரஞ்சகமான இயக்குநர் என்றால் எள்ளளவும் சந்தேகமின்றி அது இயக்குநர் பாக்யராஜ் தான். தமிழ் சினிமாவின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தவர்களுக்கு நிச்சயம் இது தெரியும். </p> <p>குடும்ப உறவுகளை பற்றியும் சமூக சிக்கல்களை பற்றியும் திரைக்கதை அமைப்பது என்பது மாயாஜால கதைகளை காட்சி படுத்துவதை காட்டிலும் சவாலானவை. ஏனென்றால் இந்த கதைகள் நம்மையும் நம்மை சுற்றியும் அன்றாட வாழ்வில் நிகழ்பவை. இவை ஸ்வாரஸ்யமான நிகழ்வுகளாக இருக்காது…
