Tag: சசிகுமார்

• Actor Soori speech abotu director Dhanraj at Ramam Ragavam teaser launch

Actor Soori speech abotu director Dhanraj at Ramam Ragavam teaser launch

தென்னிந்திய சினிமாவில் ஒரு இயக்குநராக இருந்து பிரபல நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தவர் சமுத்திரக்கனி. தெலுங்கு சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது ‘ராமம் ராகவம் ‘ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருப்பவர் தன்ராஜ்.
இந்த படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா, தம்பி ராமையா, பாபி சிம்ஹா, சூரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நல்ல நண்பர்கள்
தந்தைக்கும் மகனுக்குமான உறவைப் பற்றி பேசும் இப்படத்தில் தந்தையாக சமுத்திரக்கனியும் மகனாக தன்ராஜூம் நடித்துள்ளனர். மேலும் ஹரிஷ் உத்தமன், சத்யா, சுனில், ஸ்ரீனிவாஸ் ரெட்டி, ப்ருத்விராஜ், பிரமோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சூரி பேசுகையில் “வெண்ணிலா கபடிக் குழு படத்தில் பரோட்டா காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. அதே காமெடியை தெலுங்கு படத்தில் நான் செய்ததை விட சிறப்பாக அவர் செய்தது பயங்கரமான வெற்றியை பெற்றது.
அதற்கு பிறகு தன்ராஜ் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய காமெடி நடிகராக உருவானார். அந்த சமயத்தில் எனக்கு போன் பண்ணி உங்களோட காமெடியை பண்ணது நான்தான் எனப் பேசினார். அதற்கு பிறகு என்னுடைய படம் வந்தால், எனக்கு போன் பண்ணி பேசுவார். எங்கள் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு உள்ளது.
இயக்குநர்கள் பலரும் இன்று நடிகராக மாறிக்கொண்டு வரும்போது ஒரு காமெடி நடிகர் இயக்குநராக வந்திருப்பது பெரிய விஷயம். ஒரு ஹீரோ 50 படம் நடித்தார் என்றால் ஒரு காமெடி நடிகன் 150 படங்களில் நடித்து இருப்பார். அதனால் நிறைய இயக்குநர்களுடன் சேர்ந்து ஒர்க் பண்ண வாய்ப்பு கிடைத்து இருக்கும். அவர்கள் அனைவரிடத்திலும் ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டு இருப்போம். அது அனைத்தையும் இந்தப் படத்தில் நீங்கள் பதிவு செய்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.

அப்பா மகன் கான்செப்ட் :
பொதுவாகவே அப்பா – மகன் கான்செப்ட் எமோஷன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும். அப்படி பதிவு செய்த படங்கள் இதுவரையில் தோற்றதே கிடையாது. உதாரணமாக அப்பா, முத்துக்கு முத்தாக, யாரடி நீ மோகினி, கேடி பில்லா கில்லாடி ரங்கா இப்படி ஏராளமான படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அப்பா – மகன் காம்பினேஷனை சரியாக செய்து விட்டால் படம் நிச்சயம் வெற்றி பெற்றுவிடும். ஒரு படம் எடுப்பது கூட அவ்வளவு கஷ்டம் இல்லை. ஆனால் அப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நிச்சயம் இந்த படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.
வாய்ப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருந்த என்னை ஊக்குவித்து நடிக்க வைத்தது சசிகுமாரும் சமுத்திரகனி அண்ணனும் தான். கனி அண்ணன் எனக்கு நடிக்க சொல்லிக் கொடுத்ததை அப்படியே போய் அவரை மாதிரியே நடித்திருக்கிறேன். எப்போது தனக்கு கீழ் தனக்கு மேல் என்று யாரையும் கனி அண்ணன் நடத்தியது கிடையாது . நடிக்க முடியும் வாடா என்று எனக்கு எனர்ஜி கொடுத்தவர் அவர்தான். எந்த ஒரு படத்திற்கு கடுமையாக உழைக்கக் கூடிய அவரது உழைப்பு இந்தப் படத்திலும் இருக்கும் என்று நம்புகிறேன் “ என்று சூரி பேசினார்

மேலும் காண

Source link

• One Year Of Ayothi: ”ஒரு தெய்வம் பாக்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று” அயோத்தி படம் வெளியாகி ஓராண்டு நிறைவு

One Year Of Ayothi: ”ஒரு தெய்வம் பாக்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று” அயோத்தி படம் வெளியாகி ஓராண்டு நிறைவு

இயக்குநர், நடிகர் சசிகுமார் நடிப்பில், அ.மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியாகி சமீபத்தில் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த திரைப்படம் ‘அயோத்தி’.

கடந்த ஆண்டு மார்ச் 3ஆம் தேதி வெளியாகி அனைத்து தரப்பினர் மத்தியிலும் லைக்ஸ் அள்ளிய அயோத்தி திரைப்படத்தின் மூலம் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக அறிமுகமாகி வரவேற்பைப் பெற்றார். இந்த படம் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டு ஆகியுள்ளது. இதனை நினைவு கூறும் விதமாக, இந்த படம் எனக்கு மிகவும் தேவைப்படும்போது எனக்கு கிடைத்தது. இந்த படம் எப்போதும் என் இதயத்தில் ஒரு வலுவான இடத்தைப் பிடிக்கும். இந்த அழகான பயணத்தில், குழு, படப்பிடிப்பின் போது ஏற்பட்ட நினைவுகள், படப்பிடிப்பின்போது கற்றுகொண்ட விஷயங்கள், கனவுகள், உணர்ச்சிகள், அற்புதமான ரசிகர்கள் என இந்த படத்தை வெற்றிப்படமாக்கிய ஒவ்வொருவருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. என்றென்றும் நன்றியுள்ள,

அன்பு,
ஷிவானி” என குறிப்பிட்டுள்ளார்.

மதங்களைத் தாண்டிய மனிதநேயத்தைப் போற்றும் படம் எனக் கொண்டாடப்பட்ட ‘அயோத்தி’ திரைப்படம். நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியாகி சைலண்ட் ஹிட் அடித்து பெரும் பாராட்டுக்களைக் குவித்த திரைப்படம்  ‘அயோத்தி’. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R. மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ,நடிகர் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா மற்றும் புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உலக திரைப்பட தகவல் தளமான ஐஎம்டிபி இணையதளத்தில் 8.5 மதிப்பீடு வழங்கப்பட்டு விமர்சனரீதியாக பாராட்டுகளை அள்ளியது.

அயோத்தியிலிருந்து ராமேஸ்வரத்திற்குச் சுற்றுலா செல்ல முடிவெடுக்கும் நான்கு பேர் கொண்ட குடும்பத்தைச் சுற்றி இப்படத்தின் கதை சுழல்கிறது. மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் கார் பயணத்தின்போது, ​​தேசபக்தர் பல்ராம் (யஷ்பால்) ஓட்டுநரிடம் தவறாக நடந்து கொள்கிறார், இருவருக்குமான வாக்குவாதத்தால் ஏற்படும் விபத்து, பல்ராமின் மனைவியின் மரணத்திற்கு வழிவகுத்து விடுகிறது. மீதிக் கதையானது, இரண்டு குழந்தைகள் தங்கள் அதீத மதவெறி பிடித்த  தந்தையின் கைகளில் படும் துன்பங்களையும், டிரைவரின் நண்பர்களான  இருவர் (சசிகுமார் மற்றும் புகழின் கதாபாத்திரங்கள்) தங்கள் தாயின் சடலத்தை எடுத்துச் செல்ல குழந்தைகளுக்கு உதவுவதையும் சித்தரிக்கிறது. எல்லா முரண்பாடுகளையும் மீறி அவர்களின் சொந்த ஊருக்கு எப்படிச் செல்கிறார்கள் என்பதே படம். மதங்களைத் தாண்டிய மனிதநேயம் போற்றும் காவியமாக இப்படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டுக்களைக் குவித்தது.

மதம், மூடநம்பிக்கைகள், ஆண்மைய மனப்பான்மை மற்றும் பல சமூக பிரச்சினைகளை இந்தக்கதை வழியே அழுத்தமாக பேசிய அயோத்தி திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் NT ரகுநந்தனின் பின்னணி இசை பக்கபலமாக அமைந்தது. மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு அயோத்தி மற்றும் ராமேஸ்வரத்தின் தோற்றத்தையும் உணர்வையும் மிக அழகாகப் படம்பிடித்திருந்தது. இந்நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்களை வாரிக்குவித்து ஹிட் அடித்த அயோத்தி திரைப்படம்  வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டு ஆகிறது. இப்படம் தற்போது ஜீ ஓடிடி தளத்தில் உள்ளது.

Source link

• Sasikumar's Tiruttani murugan temple visit : வாங்க.. குட்டி அர்ச்சகர் தூக்கி கொஞ்சிய சசிகுமார் திருத்தணியில் தரிசனம்

Sasikumar's Tiruttani murugan temple visit : வாங்க.. குட்டி அர்ச்சகர் தூக்கி கொஞ்சிய சசிகுமார் திருத்தணியில் தரிசனம்

வாங்க.. குட்டி அர்ச்சகர் தூக்கி கொஞ்சிய சசிகுமார் திருத்தணியில் தரிசனம்

Source link

• Garudan Movie Soori Sasikumar Unni Mukundan Film Title Video Glimpse Details | Garudan: சூரி – வெற்றிமாறன்

Garudan Movie Soori Sasikumar Unni Mukundan Film Title Video Glimpse Details | Garudan: சூரி – வெற்றிமாறன்

நடிகர் சூரி – இயக்குநர் சசிகுமார் இணைந்து நடிக்கும் ‘கருடன்’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் கவனமீர்த்தவர் இயக்குநர் துரை செந்தில் குமார். இவரது இயக்கத்தில், சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது இப்படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. கருடன் இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், சூரி, சசிகுமார் இணைந்திருக்கும் காட்சி ஒன்றும் பகிரப்பட்டுள்ளது.
சொக்கன் எனும் கதாபாத்திரத்தில் விசுவாசமான நாயகனாக இந்த வீடியோவில் சூரி தோன்றும் நிலையில்,  “விசுவாசத்துல மனுஷனுக்கும் நாய்க்கும் போட்டி வந்தா எப்பவும் நாய் தான் ஜெயிக்கும், ஆனால் அதே நாய்க்கும் சொக்கனுக்கும் போட்டி வந்தா, சொக்கன் தான் ஜெயிப்பான்” என சூரியின் கதாபாத்திரத்தைப் பற்றி சசிகுமார் கதாபாத்திரம் விவரிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்று கவனமீர்த்துள்ளன.

Get ready for a soaring adventure! 🦅💥 The pulse-pounding “Glimpse of Garudan” is here!▶️🔗: https://t.co/rtxbkIpxTb#Garudan, starring @sooriofficial and directed by @Dir_dsk hitting theaters soon!🔥An @thisisysr musicalA #VetriMaaran story@SasikumarDir… pic.twitter.com/ZzxZLYn8JV
— Actor Soori (@sooriofficial) January 19, 2024

வெற்றிமாறன் இப்படத்துக்கு கதை எழுதும் நிலையில், இப்படத்துக்கு இது கூடுதல் சிறப்பம்சமாக அமைந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசை அமைக்கிறார்.
முன்னதாக வெற்றிமாறனின் விடுதலை படத்தில் சூரி கதாநாயகனாக ப்ரொமோஷன் ஆன நிலையில், இந்தப் படத்தில் சூரியின் நடிப்பு பெரும் பாராட்டுகளைப் பெற்றது. மேலும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சூரி – வெற்றிமாறன் மீண்டும் இணையும் இப்படத்தின் அப்டேட் வெளியாகி இருவரது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க: அன்னபூரணி விவகாரம்: ”கோயில்களுக்கு செல்கிறேன்.. அப்படி நினைக்கவில்லை..” வருத்தம் தெரிவித்த நயன்தாரா
RJ Balaji: கோலிவுட்டிலும் நெப்போடிஸம்! விஜய் சேதுபதி போன்றவர்கள் எங்களை ஊக்குவிக்கிறார்கள் – ஆர்.ஜே.பாலாஜி

Source link