Tag: கோயம்பேடு

• கிளாம்பாக்கத்தில் மற்றொரு சிக்கல்.. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சொல்வது என்ன? தொடரும் குழப்பம்..

கிளாம்பாக்கத்தில் மற்றொரு சிக்கல்.. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சொல்வது என்ன? தொடரும் குழப்பம்..

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

தென் மாவட்ட பயணிகளுக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்  பயன்பாட்டிற்கு வந்தது. இருந்தும் பல்வேறு சர்ச்சைகள் அவ்வப்பொழுது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக எழுந்த வண்ணம் உள்ளன . இந்த நிலையில் தமிழ்நாடு அரசு  ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில்,  ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

1600 பேருந்துகள் இயக்கப்படுகிறது

இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்  சார்பில், அதன் தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தென் தமிழகம் செல்லும் அனைத்தும் ஆம்னி பேருந்துகள்  பயன்படுத்திக் கொண்டுள்ளோம்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்  27 டிராவல்ஸ் அலுவலகங்களும், 77 பயணிகளை ஏற்றும் இடமும்,  67 ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைப்பதற்கும் ஆக மொத்தம் 144 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடங்களே கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ளன. தினசரி சாதாரண நாட்களில் 850 ஆம்னி பேருந்துகளும், வார இறுதி நாட்களில் 1250 ஆம்னி பேருந்துகளும் மற்றும் விழா காலங்களில் பயணிகளின் தேவைக்கேற்றவாறு 1600 வரை ஆம்னி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

44 ஆம்னி பேருந்துகள் மட்டுமே

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 144 ஆம்னி பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும். இந்நிலையில் ஒட்டுமொத்த ஆம்னி பேருந்துகளையும் (தினசரி சுமாராக ஆயிரம் பேருந்துகள்) கிளாம்பாக்கத்தில் நிறுத்தி இயக்க சாத்தியக்கூறுகள் இல்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் முடிச்சூர் ரோடு வரதராஜபுரத்தில்  5 ஏக்கர் பரப்பளவில் அரசால் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்காக பஸ் நிறுத்தும் இடம் வேலை நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த இடம் வேலை முடிவதற்கும் சுமாராக ஆறு மாதம் காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

90 நாட்களுக்கு   முன்னே முன்பதிவு

அந்த இடம் தயாராகும் வரை  பேருந்துகளை  கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் வரவேண்டிய சூழ்நிலை இருப்பதால் பயணிகளுடன் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு இயக்குவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பல பலமுறை கோரிக்கை வைத்தும் CMDA நிர்வாகம் 1000 ஆம்னி பேருந்துகள் KCBTயில் பகலில் நிறுத்தி வைத்து பராமரித்து இரவில் இயக்குவதற்கு சாத்தியக்கூறுகள் பற்றி நாங்கள் பலமுறை கேள்விகளை எழுப்பியும் பதில் ஏதும் அளிக்காமல் போக்குவரத்து துறை சார்பாக சாத்தியம் இல்லாமல் 2002இல் உயர் நீதிமன்றம் விதித்த ஆணையை அவமதித்து 22.01.2024 அன்று ஆம்னி பேருந்துகள் 24.01.2024 முதல் சென்னை நகரத்திற்குள் வர அனுமதி இல்லை இரண்டு நாட்கள் மட்டும் கால வாசம் கொடுத்து சுற்றறிக்கை திடீரென அனுப்பப்பட்டுள்ளதால் ஆம்னி பேருந்துகளில் 30 முதல் 90 நாட்களுக்கு   முன்னே முன்பதிவு செய்துள்ள ஆம்னி பேருந்து பயணிகளின் பயணங்கள் கேள்விக்குறியாகி பயணிகள் பல குழப்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை

இந்நிலையில் உயர் நீதிமன்ற ஆணையை மீறி சுற்றறிக்கை அனுப்பிய போக்குவரத்து துறைக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. KCBTயில் ஆம்னி பேருந்துகள் இயக்குவது சம்பந்தமாக அரசு சார்பாக எங்களுடன் எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை. கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 51 ட்ராவல்ஸ் அலுவலகங்களும், 80  பயணிகளை ஏற்றும் இடமும்,  320 பஸ் நிறுத்தி வைக்கும் இடம்  ஆக மொத்தம் 400 ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதி கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலே உள்ளது.

ஆகையால் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு ஆம்னி பேருந்துகளில் 30 முதல் 90 நாட்களுக்கு முன்னே முன்பதிவு செய்துள்ள பயணிகளின் பயணங்கள்  தடைப்படாமல் இருக்க போக்குவரத்து துறை மற்றும் CMDA  உத்தரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்  என தெரிவித்துள்ளார்.  இன்று முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்ல வேண்டுமென  அரசு சார்பில் அறிவித்துள்ள நிலையில்,  ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதால் பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர்

Source link

• கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும் – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டம் | கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும்

கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும் – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டம் | கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான போதிய வசதிகள் செய்து கொடுக்கும் வரையிலும், கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் புறநகர் ரயில் நிலையம் அமைக்கப்படும் வரை ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்தே இயக்கப்படும் என திட்டவட்டமாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தலைநகர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் பேசுகையில்,
”ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து புதிய நிலையத்தில் நிறுத்த போதிய இட வசதி இல்லை. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகளும் முழுமையாக முடிவடையவில்லை. கட்டுமானப்  பணிகள் முடிந்து ஆம்னி பேருந்துகள் வந்து செல்லவும், ஆம்னி பேருந்துகளை பயன்படுத்தும் பயணிகள் வந்து செல்லவும் ஏற்ற வசதி ஏற்படுத்தி தந்தால் மட்டுமே ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கதில் இருந்து இயக்குவோம்.
எனவே கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் செல்லும். கிளாம்பாக்கத்தில் மெட்ரோ, புறநகர் ரயில் நிலையம் கட்டிமுடிக்கப்படும் வரை இதே நிலை இருக்கும். ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் வர மக்கள் சிரமப்படுவதால் இந்த முடிவு தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தெரிவித்ததைப் போல், ஆம்னி பேருந்துகளை 24 ஆம் தேதியே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றவேண்டும் என்பது முடியாத ஒரு காரணம். அரசு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். பின்னரே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என தெரிவித்துள்ளனர். மேலும், சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு ஆம்னி பேருந்துகள் கட்டாயம் வர வேண்டும் என்று யாரும் வற்புறுத்தவில்லை” எனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக அதாவது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதும், ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.  இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளார்கள் தரப்பில், “தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு தினசரி 850 ஆம்னி பேருந்துகளும் வார இறுதி நாட்களில் 1280 ஆம்னி பேருந்துகளும் விழா காலங்களில் 1600 வரை ஆம்னி பேருந்துகள் தினசரி சென்னையில் இருந்து தென் தமிழகத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தென் தமிழகம் செல்லும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் பயன்படுத்திக் கொண்டுள்ளோம்.
தற்பொழுது ஜனவரி 24ஆம் தேதியிலிருந்து ஆம்னி பேருந்துகள் சென்னை நகரத்திற்குள் பயணிகளுடன் வர அனுமதி இல்லை என்றும் பயணிகள் இல்லாமல் பேருந்துகளை சென்னை நகரத்திற்குள் இயக்கலாம் என அரசு சார்பாக தெரிவிக்கிறார்கள்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் முடிச்சூர் ரோட்டில் வரதராஜபுரத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு தனியாக பார்க்கிங் செய்து பேருந்துகளை பராமரிப்பதற்கு அரசு ஏற்பாடுகளை செய்து கொண்டுள்ளது. அந்த இடம் தயாராகும் வரை  பேருந்துகளை  கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் வரவேண்டிய சூழ்நிலை இருப்பதால் பயணிகளுடன் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு இயக்குவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு தேவையான வசதிகளையும் உரிமையாளர்களிடம் கலந்து ஆலோசித்து செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம் “ என கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

• TN Buses: | TN Buses: குழப்பும் ஆன்லைன் புக்கிங்! TNSTC பேருந்துக்கு எங்கே செல்லனும்? கிளாம்பாக்கமா? கோயம்பேடா?

TN Buses: | TN Buses: குழப்பும் ஆன்லைன் புக்கிங்! TNSTC பேருந்துக்கு எங்கே செல்லனும்? கிளாம்பாக்கமா? கோயம்பேடா?

TN Buses: TNSTC பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களும், பிற முன்பதிவு செய்யாத பயணிகளும் கோயம்பேட்டிற்கு வரவும் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து கழகம் அறிவிப்பு:
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “30.12.2023-க்கு முன்பு முன்பதிவின் போது அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தை (TNSTC) சார்ந்த பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம், விழுப்புரம் மார்க்கமாக பயணிக்க முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் அதற்கு பதிலாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம் சென்றடைந்து, அங்கு தாங்கள் கோயம்பேட்டில் முன்பதிவு செய்த அதே நேரத்தில் புறப்படும் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் பிற அரசு போக்குவரத்துக் கழகங்களான விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி பேருந்துகளில் (மூன்றுக்கு இரண்டு இருக்கை (3X2) கொண்டவை) பயணிக்க முன்பதிவு செய்தவர்களும் பிற முன்பதிவு செய்யாத பயணிகளும் விழுப்புரம், திருச்சி, மதுரை மார்க்கமாக தென்மாவட்டங்களுக்கு பயணிக்க கோயம்பேட்டிற்கு வரவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முன்பதிவு செய்த பேருந்துகள் மட்டுமே:
12/01/2024 முதல் 14/01/2024 வரை கிளாம்பாக்கத்திலிருந்து முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கான விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்.
NH45 தேசிய நெடுஞ்சாலை வழியாக கும்பகோணம் மார்க்கமாக இயங்கும் பேருந்துகளில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்தும் (KCBT) அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) கழகத்தைச் சார்ந்த பேருந்துகள் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்திலிருந்தும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்கின்ற நாகப்பட்டினம், கும்பகோணம், திருத்துறைப்பூண்டி பேருந்துகள் கோயம்பேடு பேருந்துநிலையத்திலிருந்து இயங்கும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
ஜனவரி 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சொந்து ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக ஜனவரி 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 17,581 சிறப்பு பேருந்கள் இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 5 முன்பதிவு மையங்களும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும், கிளாம்பாக்கத்தில் 5 முன்பதிவு மையங்களும் செயல்படும். இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in மற்றும் tnstc official app ஆகிய இணையதளங்களில் வாயிலாக முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
Senthil Balaji: 15வது முறையாக காவல் நீடிப்பு! செந்தில் பாலாஜி வழக்கில் நாளை நடக்கப்போவது என்ன?
முதியவர் வேடத்தில் வந்த சிவபெருமான்: திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோயில் புராண கதை தெரியுமா?

Source link