கேப்டன் மில்லர் படத்தின் பின்னணி இசைக்காக ரஹ்மான் தனக்கு ஃபோன் செய்து பாராட்டியதாக இசையமைப்பாளர் ஜி. வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஜி.வி பிரகாஷ் குமார்

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானிடம் உதவியாளராக இருந்து தனது இசைப்பயணத்தைத் தொடங்கியவர் ஜி.வி பிரகாஷ் குமார். வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் தனது திறமையை வெளிக்காட்டி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். மயக்கம் என்ன. ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம், ஆடுகளம் , அசுரன் , சூரரைப் போற்று என தனது இசையில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையில் சமீபத்தில் வெளியான படம் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர்.

17 வருஷத்தில் முதல் முறையாக பாராட்டிய ரஹ்மான்

When @gvprakash recieved massive appreciation from ARR for his BGM in #CaptainMiller 👏👌pic.twitter.com/5YcVW2XurP

— Siddarth Srinivas (@sidhuwrites) March 10, 2024

தனது ஆசிரியரிடம் பாராட்டுக்களை பெற வேண்டும் என்பது தான் எந்த ஒரு மாணவனுக்கும் மிகப்பெரிய கனவாக இருக்கும். வெற்றிமாறனுக்கு பாலுமகேந்திரா போல், மாரி செல்வராஜூக்கு ராம் போல் , ஜி. வி பிரகாஷுக்கு ஏ ஆர் ரஹ்மான். அப்படியான ரஹ்மான் தன்னை இந்த 17 ஆண்டுகளில் ஒருமுறை கூட பாராட்டியது இல்லை என்றும் கேப்டன் மில்லர் படத்திற்கான தனக்கு ஃபோன் செய்து ரஹ்மான் பாராட்டியதாகவும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜி.வி பிரகாஷ் தெரிவித்தபோது “நீலம் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது ரஹ்மானிடம் இருந்து எனக்கு கால் வந்தது. உடனே வெளியே வந்து ஃபோனை எடுத்து பேசினேன். கேப்டன் மில்லர் படம் பார்த்தேன் செமையா பண்ணியிருக்க. பி.ஜி.எம் எல்லாம் சூப்பரா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சதுன்னு அவர் என்னிடம் சொன்னார். இந்த 17 ஆண்டுகளில் ரஹ்மான் எனக்கு எத்தனையோ முறை கால் செய்து பேசியிருக்கிறார், ஏதாவது நிகழ்ச்சி பற்றி பேசுவார் இல்லை என்றால் மற்ற விஷயங்களைப் பற்றி பேசுவார். ஆனால் ஒருமுறை கூட கால் பண்ணி மியூசிக் நல்லா இருக்குனு அவர் என்கிட்ட சொன்னது இல்ல. அவர் அப்டி சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.” என்று அவர் கூறியுள்ளார்.

ரிபெல்

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள படம் ரிபெல். இப்படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். ரிபெல் படத்தை இயக்கியுள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி பிரகாஷே இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். நேற்று ( மார்ச் 11 ) ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. வரும் மார்ச் 28 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

Tag: கேப்டன் மில்லர்

G V Prakash Kumar : 18 வருஷத்துல, முதல் தடவையா பாராட்டியிருக்கிறார்.. ஜி.வி பிரகாஷை பாராட்டிய ரஹ்மான்

Sundeep Kishan : படம் சரியா வரலன்னு இயக்குநர்கிட்ட சொன்னேன்.. கேப்டன் மில்லரை விமர்சித்த கேப்டன் மில்லர் நடிகர்..

தான் நடித்த மைக்கேல் படம் தனக்கு திருப்திகரமானதாக இல்லை என்று நடிகர் சந்தீப் கிஷன் கூறியுள்ளார்.

சந்தீப் கிஷன்

’யாருடா மகேஷ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் சந்தீப் கிஷன். பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சந்தீப்புக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படம் ஒரு நல்ல ஓப்பனிங்காக அமைந்தது. இதனைத் தொடர்ந்து மாயவன் , கசடதபர உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் சந்தீப் நடித்திருந்தார்.

மைக்கேல்

சந்தீப் கிஷனை கதாநாயகனாக வைத்து ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியப் படம் மைக்கேல். தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் கடந்த ஆண்டு வெளியானது. ரஞ்சித் ஜெயக்கொடி முன்னதாக இயக்கிய இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் நல்ல வெற்றி பெற்றதால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கூடுதலாக திவ்யான்ஷா கெளஷிக் , கெளதம் மேனன், விஜய் சேதுபதி, வரலக்‌ஷ்மி சரத்குமார் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தது படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. சந்தீப் கிஷன் நடித்ததிலேயே அதிக பொருட்செலவில் உருவான படம் மைக்கேல். கிட்டதட்ட கொரிய படமான ‘The BitterSweet Life’ படத்தின் சாயலில் எடுக்கப் பட்ட இந்தப் படம் பெரும் தோல்வியை சந்தித்தது. தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக இருந்தாலும் படத்தில் அடிப்படை கதை உறுதியானதாக இல்லாதது இப்படத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. வலிந்து திணிக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள், எதார்த்தத்துடன் பொருந்தாமல் சூப்பர் ஹீரோ இமேஜ், கே,ஜி.எஃப் வகையிலான பில்ட் அப் காட்சிகள் என படத்தில் நிறைய விஷயங்கள் ரசிகர்களை சலிப்படையச் செய்தன

இப்படத்தின் தோல்வியைத் தொடர்ந்து நடிகர் சந்தீப் கிஷன் தனது எக்ஸ் பக்கத்தில் இப்படி பதிவிட்டிருந்தார். “ ஒரு நேர்மையான முயற்சி ஆனால் அது சரியாக வழங்கப்படவில்லை. நாங்கள் இன்னும் கொஞ்சம் கவனத்துடன் இருந்திருக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.

படம் சரியாக வரவில்லை என்று எனக்கு முன்னமே தெரியும்

மைக்கேல் படம் வெளியாகி ஓராண்டு காலம் முடிவடைந்துள்ள நிலையில் நடிகர் சந்தீப் கிஷன் அப்படம் சரியாக வரவில்லை என்று தனக்கு முன்னதாகவே தெரியும் என்றும், தான் அதை இயக்குநரிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். சந்தீப் தற்போது தெலுங்கில் நடித்துள்ள ‘ஊரு பேரு பைரவகோனா’ படத்திற்கான ப்ரோமோஷன்களை செய்து வருகிறார். அப்போது மைக்கேல் படத்தின் தோல்வி குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் இதோ “ ஆமாம் வசூல் ரீதியாக பார்த்தால் மைக்கேல் படம் சரியாக ஓடவில்லைதான் அந்தப் படத்தை மூன்று தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்தார்கள். அதில் இருவர் படம் நிச்சயம் ப்ளாக்பஸ்டர் ஆகும் என்று நம்பினார்கள். ஒருவர் மட்டும் படம் சரியாக வரவில்லை என்று ரிலீஸுக்கு 12 நாள் முன்பு என்னிடம் சொன்னார். அந்த நேரத்தில் அவ்வளவு பெரிய பிரஷரை நான் எடுத்துக்கொள்ள தயாராக இல்லை அதனால் நான் அது தொடர்பாக எதுவும் செய்யவில்லை. படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாள் நான் படம் பார்த்தேன். படம் சரியாக வரவில்லை என்று எனக்கு தெரிந்தது. தொழில்நுட்ப ரீதியாக மைக்கேல் ஒரு நல்ல படம். ஆனால் நாங்கள் கதைக்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுவிட்டோம். சரியாக சொல்லப் பட்டிருந்தால் மைக்கேல் ஒரு அற்புதமான படமாக வந்திருக்கும் . நாங்கள் நினைத்தது வரவில்லை என்பது ரிலீஸுக்கு முன்பாகவே எனக்கு தெரிந்தது இன்னும் சிரமமானதாக இருந்தது.” என்றார்

Lal Salaam Vs Lover : லால் சலாமா? லவ்வரா? இந்த வாரத்தில் எந்த படத்தை பார்க்கலாம்?
Lal Salaam Vs Lover : லால் சலாமா? லவ்வரா? இந்த வாரத்தில் எந்த படத்தை பார்க்கலாம்?
OTT Release Today: தியேட்டருக்கு நிகராக ஓடிடியில் இன்று வெளியான மாஸ் ஹீரோ படங்கள்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

இன்று நடிகர் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. மற்றொருபுறம் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் திரைப்படம் இன்று வெளியாகிறது. மேலும் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை ஸ்பெஷலாக தெலுங்கு, கன்னடம், இந்தி என பிற மொழிப் படங்களும் இன்று திரையரங்குகளுக்குப் படையெடுத்துள்ள நிலையில், மற்றொருபுறம் இன்றைய ஓடிடி ரிலீஸ் படங்களும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களின் மாஸ் படங்கள் இன்று ஓடிடியில் வெளியாவதால் சினிமா ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். அந்தப் படங்களின் லிஸ்ட்:

அயலான்:

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ரகுல் ப்ரீத் நடிப்பில் ஏலியன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அயலான் திரைப்படம், குழந்தைகளை ஈர்த்து குடும்ப ஆடியன்ஸை திரையரங்குக்கு வரவைத்தது. கடந்த ஃபிப்ரவரி 9ஆம் தேதி வெளியான இப்படம், உலகம் முழுவதும் 96 கோடிகளை வசூலித்ததாகத் தகவல். இன்று சன் நெக்ஸ்ட் தளத்தில் இப்படம் இன்று வெளியாகிறது.

கேப்டன் மில்லர்:

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் கடந்த ஜன.12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது. சுமார் 50 கோடி பட்ஜெட்டில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன் 104.79 கோடிகளை உலகம் முழுவதும் வசூலித்தது. இப்படத்தின் அடுத்த பாகத்தை எதிர்பார்த்து தனுஷ் ரசிகர்கள் காத்துள்ளனர். இந்நிலையில், இன்று இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

குண்டூர் காரம்:

மகேஷ் பாபு நடிப்பில் சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியான குண்டூர் காரம் திரைப்படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சௌத்ரி, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. டோலிவுட் சினிமாவின் மாஸ் இயக்குநர்களில் இருவரான த்ரி விக்ரம் இயக்கத்தில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் 180 கோடிகளை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்தப் படங்கள் தவிர, பரத் – ஜனனி நடித்த இப்படிக்கு காதல் ஆஹா தளத்தில், பாலிவுட்டில் பாக்‌ஷாக் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் என பிற மொழி திரைப்படங்களும் இன்று வெளியாகின்றன.

GOAT Movie Cinematographer Siddhartha Nuni talk about working with vijay
கோட் படத்தில் நடிகர் விஜய்யுடன் பணியாற்றும் அனுபவத்தை பகிர்ந்துள்ளார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நூனி
சித்தார்த்தா நூனி
தமிழ் சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக உருவெடுத்து வருகிறார் சித்தார்த்தா நூனி. இந்தி மற்றும் கன்னட சினிமாவில் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தை தொடங்கினார். கன்னடத்தில் பவன் குமார் இயக்கிய லூசியா மற்றும் யு டர்ன் படங்களில் இவரது வேலை பரவலாக கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழில் கெளதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் சித்தார்த்தா நூனியின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. தற்போது விஜய் நடித்து வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்
சமூக நிகழ்வுகள் குறித்த தனது கருத்துக்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார் சித்தார்த்தா நூனி . இந்தியில் வெளியாகிய அனிமல் படம் பற்றிய இவரது விமர்சனம் கவனம் பெற்றது. -“இந்த மாதிரியான ஒரு படம் சமூகத்தில் மனநோயாளிகளையே உருவாக்கும், படைப்பாளிகள் பொறுப்புடன் படங்களை எடுக்க வேண்டும்” என்று அவர் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஏன் ஸ்டெடிகேம் பயன்படுத்துகிறேன்
கேப்டன் மில்லர் படம் வெளியானபோது படத்தில் பல் காட்சிகள் நிலையாக இல்லாமல் ஆடியபடி இருந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்திருந்தார்கள். சில ரசிகர்கள் இதனால் எரிச்சலடைந்திருந்ததாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்கள். இதுபற்றி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பதில் அளித்துள்ளார் சித்தார்த்தா நூனி. “எனக்கு கேமராவை நிலையாக ஒரு இடத்தில் வைக்காமல் ஸ்டெடிகேம் (கையில் பிடித்து படம் பிடிப்பது) பயன்படுத்த பிடிக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் லை செய்யாமல் அந்த ஒட்டுமொத்த இடத்தையும் லை செய்வேன். அப்போது தான் நடிகர்களால் சுதந்திரமாக நடமாடி நடிக்க முடியும். அந்த மாதிரியான நேரங்களில் ஸ்டெடி கேம் வைத்திருப்பது நடிகர்களை பின்தொடர்வது எளிமையாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.
எந்த கேரக்டர் கொடுத்தாலும் அவரால் நடிக்க முடியும்
இதே நேர்காணலில் நடிகர் விஜய்யுடன் பணியாற்றும் அனுபவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார். “விஜய் ஒரு நல்ல நடிகர் மட்டுமில்லை, அவரால் எந்த கதாபாத்திரம் தனக்கு கொடுக்கப்பட்டாலும் அதை சிறப்பாக நடிக்க முடியும். கோட் படத்தில் விஜய்யின் காட்சியை படம்பிடிக்கும்போது அவருடைய திறமையை, கச்சிதமாக படம்பிடிக்க நான் முயற்சி செய்திருக்கிறேன். கேப்டன் மில்லர் படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது விஜய் எனக்கு ஃபோன் செய்து என்னைப் பாராட்டினார். இணைந்து வேலை செய்வதற்கு மிகவும் எளிமை மற்றும் கனிவான ஒரு மனிதர் விஜய்” என்று அவர் கூறியுள்ளார்.மேலும் படிக்க : Poonam Pandey: “நான் இன்னும் சாகல”..வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே.. அதிர்ந்து போன திரையுலகினர்!
மேலும் காண

Captain miller : இனி அமேசான் ப்ரைமில் கேப்டன் மில்லர்… ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!
Captain miller : இனி அமேசான் ப்ரைமில் கேப்டன் மில்லர்… ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!
Captain Miller: கேப்டன் மில்லர் கதை என்னுடையது, அசிங்கமா இருக்கு! வேல ராமமூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

‘பட்டத்து யானை’ என்கிற தனது புத்தகத்தில் இருந்து கேப்டன் மில்லர் படத்தின் கதை திருடப்பட்டுள்ளதாக நடிகர் வேல ராமமூர்த்தி கூறியுள்ளார்.

கேப்டன் மில்லர்,

தனுஷ் நடித்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் கேப்டன் மில்லர். பிரியங்கா மோகன், ஷிவராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதா சதீஷ், அதிதி பாலன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிஷகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

கேப்டன் மில்லர் படத்தின் கதை

தாங்கள் கட்டிய கோயிலுக்குள் செல்ல முடியாமல் மன்னர் ஆட்சியில் மத்தளம் பாறை கிராமத்து மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்கின்றனர். அதனைப் பொறுக்க முடியாமல் பட்டாளத்தில் ஆங்கிலேய படையில் சேர்ந்தால் மரியாதை கிடைக்கும் என அங்கு செல்கிறார் தனுஷ். ஆனால் அங்கோ ஆங்கிலேயர்களை எதிர்க்கும் இந்திய மக்களை சுட்டுக் கொல்லும் பணி வழங்கப்படுகிறது. இதனால் குற்ற உணர்ச்சியில் ஊர் திரும்பும் தனுஷை கிராமத்து மக்கள் ஊரை விட்டு துரத்துகிறார்கள்.

இதனால் காட்டில் நாடோடி வாழ்க்கை வாழும் அவரை புரட்சிக் கூட்டம் அரவணைக்கிறது. ஆங்கிலேயரை எதிர்த்து சண்டை செய்கிறார். இதனிடையே மன்னர் ஆட்சியில் பொக்கிஷமாக பாதுகாத்த கோயில் சிலை ஆங்கிலேய அரசால் அபகரிக்கப்படுகிறது. அதனைப் பொறுக்காத மன்னர் குடும்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தனுஷின் கூட்டம் திருடச் செல்கிறது. சென்ற இடத்தில் தனுஷ் எடுக்கும் சுயநல முடிவு ஒட்டுமொத்த கிராமத்தையும் பாதிக்கும் நிலையில் ஆங்கிலேயர் – மன்னர் பகைக்கு நடுவே மத்தளம் பாறை மக்கள் பந்தாடப்படுகிறார்கள். யாரால் வெறுத்து துரத்தப்பட்டாரோ அந்த மக்களை காக்க கேப்டன் மில்லர் ஆக தனுஷ் என்ன செய்கிறார் என்பதே இப்படத்தின் கதையாகும்.

திருடப்பட்ட கதையா கேப்டன் மில்லர்?

தற்போது கேப்டன் மில்லர் படத்தின் கதை தான் எழுதிய புத்தகத்தில் இருந்து திருடப்பட்டது என்று நடிகர் வேல ராமமூர்த்தி தெர்வித்துள்ளார். குற்றப் பரம்பரை, அரியநாச்சி, கருதி ஆட்டம், பட்டத்து யானை உள்ளிட்ட நாவல்களை நடிகர் மற்றும் எழுத்தாளரான வேல ராமமூர்த்தி எழுதியுள்ளார். இவரது குற்றப் பரம்பரை படமாக எடுக்கும் முயற்சியில் பாரதிராஜா மற்றும் இயக்குநர் பாலாவுக்கு இடையில் சர்ச்சை ஏற்பட்டது. தற்போது பேட்டி ஒன்றில் வேல ராம மூர்த்தி பட்டத்து யானை என்கிற தனது புத்தகத்தில் இருந்து கேப்டன் மில்லர் படத்தின் கதை திருடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

“நான் எழுதிய பட்டத்து யானை நாவலை திருடி கேப்டன் மில்லர் எடுக்கப்பட்டுள்ளது. இக்கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். புகார் தந்தாலும், வலுத்தவன் பக்கம்தான் நியாயம் பேசுவார்கள்.

பேர்,ஊர், சீக்வன்ஸ் போன்றவற்றை மாற்றி படத்தை எடுத்திருப்பார்கள். இதெல்லாம் அவர்கள் தப்பிக்க செய்யும் முன்னேற்பாட்டு யுக்திகள். தமிழ் திரையுலகில் இப்படி அடிக்கடி நடப்பது அசிங்கமாக உள்ளது. ஒரு படைப்பாளியாக இது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது“ என்று இந்த பேட்டியில் வேலராமமூர்த்தி கூறியுள்ளார்

Pongal release movies : பொங்கலுக்கு களம் இறங்கியதில் யாரு டாப்? பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் என்ன?
Pongal release movies : பொங்கலுக்கு களம் இறங்கியதில் யாரு டாப்? பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் என்ன?
Entertainment Headlines Today January 5th Captain Miller 3rd Day Box Office Collection Rajini Kanth Pongal
Rajinikanth: ரஜினி யார் பேச்சுக்கும் தலையாட்டுபவர் அல்ல.. ஆடிட்டர் குருமூர்த்தி கருத்துக்கு எஸ்.வி.சேகர் பதிலடி..!
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த். பல தேர்தல்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்த் கிட்டதட்ட தனது அரசியல் வருகையை 25 ஆண்டுகளுக்கு எதிர்பார்ப்புக்கு ஏற்ப கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அறிவித்தார். தான் சாதி, மதம் சார்பற்ற ஆன்மீக அரசியலை கொண்டு வருவேன் என்றும் ரஜினி தெரிவித்தது பெரிய அளவில் பேசுபொருளானது.. இதனால் உற்சாகமான அவரது மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிரமாக அரசியல் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். மேலும் படிக்க..
Mansoor Ali Khan: அயோத்தி ராமர் கோயில்.. அல்லா சொத்தை ஆட்டையை போட்டால் நல்லா இருக்க முடியுமா? – மன்சூர் அலிகான் காட்டம்!
ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் பிரமாண்டமான கட்டப்பட்டுள்ள அயோத்தி கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய விஐபிக்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 55 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் பாஜக பற்றி நடிகர் மன்சூர் அலிகான் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
Pongal 2024 Wishes: குலவையிட்ட கீர்த்தி.. சிவகார்த்திகேயனின் அயலான் பொங்கல்.. பிரபலங்களின் பொங்கல் ஆல்பம்!
தைத்திருநாளான இன்று சூரியனுக்கும் இயற்கைக்கும் விவசாயிகளுக்கும் நன்றி தெரிவித்து புத்தரிசியுடன் பொங்கல் வைத்து அனைத்து தமிழர்களும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இன்று காலை முதல் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தும், தாங்கள் பொங்கல் கொண்டாடி மகிழும் புகைப்படங்களை இணைய தளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர். மேலும் படிக்க..
Captain Miller Box Office Collections: தொடரும் வசூல் வேட்டை.. 3வது நாளில் கோடிகளை அள்ளிய கேப்டன் மில்லர்.. முழு விபரம் உள்ளே..!
ராக்கி, சாணிக்காயிதம் படங்களை இயக்கி திரையுலகில் முக்கிய இயக்குநராக உயர்ந்தவர் அருண் மாதேஸ்வரன். இவர் அடுத்ததாக இயக்கியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. தொடரி, பட்டாஸ், மாறன் என தனுஷை வைத்து 3 படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் கேப்டன் மில்லரை தயாரிக்க, 4வது முறையாக தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ் , காளி வெங்கட், அதிதி பாலன், வினோஷ் கிஷன், விஜி சந்திரசேகர், ஜான் கொக்கைன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் படிக்க..
Vetrimaaran: “வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வேண்டும்” – விருப்பம் தெரிவித்த பாலிவுட் ஜாம்பவான் நடிகர்!
கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர், சத்யா, ஃபேமிலி மேன் ஆகிய படங்களின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த நடிகர் மனோஜ் பாஜ்பாய். தமிழில் சமர், அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நெட்ஃப்ளிக்ஸில் அவர் நடித்துள்ள கில்லர் சூப் வெப் சீரிஸ் வெளியாகி பரவலான கவனம் பெற்று வருகிறது. இதில் நாசர், இயக்குநர் கொங்கனா சென் ஷர்மா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் சென்னை வந்திருந்த மனோஜ் பாஜ்பாய் தனது புதிய வெப் சீரிஸ் குறித்தும் தமிழில் நடிப்பது குறித்தும் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். மேலும் படிக்க..

Cinema Headlines Today January 14th Tamil Cinema News Today Keerthy Suresh Bigg Boss Tamil 7 Archana Ayalaan Captain Miller
கேப்டன் மில்லரை பின்னுக்கு தள்ளும் அயலான்?.. 2வது நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் இதோ..!
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழில் 4 புதுப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்கள் எல்லாம் ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களும் வரப்போகும் நாளில் படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் பொங்கல் படங்களில் வசூலை வாரிக்குவிப்பது எந்த படங்கள் என பார்க்கலாம். மேலும் படிக்க
நேத்து “இந்தி தெரியாது போயா” இன்று இந்தி பட அப்டேட்: கீர்த்தி சுரேஷை வாட்டி வதைக்கும் நெட்டிசன்கள்!
அட்லீ தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் (Actress Keerthy Suresh) நடிக்கும் முதல் இந்தி படம் குறித்த அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. கோலிவுட், டோலிவுட், மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாகக் கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் , ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக் மூலம் முதன்முறையாக இந்தி திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார். அட்லீயின் மனைவி ப்ரியா அட்லீ, ஜோதி தேஷ்பாண்டே உள்ளிட்டோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். மேலும் படிக்க
மாஸ் காட்டிய மகேஷ்பாபு.. வசூலை வாரி குவிக்கும் “குண்டூர் காரம்” படத்தின் விமர்சனம் இதோ..!
இயக்குநர் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் – நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்துள்ள படம் “குண்டூர் காரம்”. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீ லீலா, மீனாட்சி சௌத்ரி, பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் ஆந்திரா மாநில ரசிகர்களிடையே மிகப்பெரிய வசூலை அள்ளியுள்ளது. இதனிடையே “குண்டூர் காரம்” படத்தின் விமர்சனத்தை காணலாம். மேலும் படிக்க
விஜயகாந்தை நினைத்து வடிவேலு வீட்டில் அழுதிருக்கலாம் – நடிகர் சரத்குமார் கருத்து
ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அந்த வாய்ப்பு தான் விஜயகாந்துடன் நட்பை தொடர வைத்தது என நேர்காணல் ஒன்றில் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். நடிகரும், தேமுதிக தலைவரும் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவு பலருக்கும் பெரிதும் நீங்கா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய சரத்குமார், விஜயகாந்த் பற்றி பேசியுள்ளார். மேலும் படிக்க
அடேங்கப்பா.. டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் சம்பளம் தெரியுமா? அள்ளிக்கொடுத்த பிக்பாஸ்!
இறுதியில் கடைசி வாரத்தில் ஐந்து பேர் ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகினர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இதில், அதிக வாக்குகள் பெற்று அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 28ஆவது நாளில் அவர் வீட்டிற்கு நுழைந்தார். மேலும் படிக்க
Pongal Movies Box Office: கேப்டன் மில்லரை பின்னுக்கு தள்ளும் அயலான்?.. 2வது நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் இதோ..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில் வெளியாகியுள்ள 4 படங்களின் 2வது நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் என்ன என்பதை காணலாம்.

பொங்கல் படங்கள்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழில் 4 புதுப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்கள் எல்லாம் ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களும் வரப்போகும் நாளில் படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் பொங்கல் படங்களில் வசூலை வாரிக்குவிப்பது எந்த படங்கள் என பார்க்கலாம்.

கேப்டன் மில்லர்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், வினோத் கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “கேப்டன் மில்லர்”. சத்யஜோதி நிறுவனம் தனுஷை வைத்து 4வது முறையாக தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் மட்டுமே வெளியாகியுள்ளது. இதனிடையே படமானது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. கேப்டன் மில்லர் படம் முதல் நாளில் ரூ.8.7 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்ட நிலையில், 2வது நாளில் ரூ.6.75 கோடி வசூல் செய்ததாக sacnilk தளம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயலான்

ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், சரத் கேல்கேர், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “அயலான்”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் ஏலியன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட விஷூவல்களுடன் வெளியாகியுள்ள அயலான் படம் குழந்தைகளை அதிகளவில் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் ரூ.3.2 கோடி வசூல் செய்த நிலையில், 2வது நாளில் வசூல் ரூ.4.25 கோடியாக அதிகரித்துள்ளது.

மிஷன் சாப்டர் 1

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலரும் நடித்த படம் “மிஷன் சாப்டர் 1”. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படம் அருண் விஜய்யின் முதல் பண்டிகை வெளியீடு படமாகும். இந்த படம் முதல் நாளில் ரூ.20 லட்சம் வசூல் செய்த நிலையில் 2வது நாளில் அது ரூ. 1கோடி வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெரி கிறிஸ்துமஸ்

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா சரத்குமார், ராதிகா ஆப்தே, சண்முக ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “மெரி கிறிஸ்துமஸ்”. இந்த படத்துக்கு ப்ரீதம் இசையமைத்துள்ளார். க்ரைம் த்ரில்லரை மையப்படுத்திய இப்படம் இந்தி – தமிழ் ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழில் முதல் நாளில் ரூ.22 லட்சமும், 2வது நாளில் ரூ.31 லட்சமும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

வசூல் குறைய என்ன காரணம்?

இப்படி பொங்கல் படங்கள் வசூல் குறைய என்ன காரணம் என தியேட்டர் தரப்பில் கேட்டபோது, ‘பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊருக்கு திரும்புவதும், கடைவீதிகளில் பொருட்கள் வாங்க நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இன்னும் நாளை பொங்கல் பண்டிகை முடியும் பட்சத்தில் தான் வசூல் அதிகரித்து அடுத்த ஒரு வாரத்திற்கு நல்ல லாபம் கிடைக்கும்” என தெரிவித்துள்ளனர்.

Cinema Headlines Today January 13th Tamil Cinema News Today Dhanush Ayalaan Captain Miller Bigg Boss Tamil 7 Sivakarthikeyan
தெறிக்கவிடும் தோட்டாக்கள்! வசூலை வாரிக்குவிக்கும் கேப்டன் மில்லர்: முதல் நாள் கலெக்ஷன்!
தமிழ் சினிமாவில் நெடுங்காலமாகவே திருவிழா தினங்களைக் குறிவைத்து படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. 80 மற்றும் 90களின்போதும் அதற்கு முன்னரும் 2000-களின் தொடக்கத்தின்போதும், ஒருபடத்தின் வெற்றி என்பது அப்படத்தின் கதை மற்றும் அப்படம் எவ்வளவு நாட்கள் திரையரங்கில் ஓடுகின்றது என்பதை வைத்து கணிக்கிடப்பட்டது. மேலும் படிக்க
ஏபிபி நடத்திய கருத்துக் கணிப்பு; இந்த முறை பிக்பாஸ் டைட்டிலை வெல்பவர் யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் செவன் இன்னும் ஓரிரு நாட்களில் முடியப்போகின்றது. இதனால் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்களுக்கு ரசிகர்களுக்கு என அனைவருக்குமே உள்ளது. மேலும் படிக்க
அயலான், கேப்டன் மில்லர், மெரி கிறிஸ்துமஸ், மிஷன்.. பொங்கல் ரேஸில் முந்தியது யார்?
இந்த ஆண்டு பொங்கலுக்கு பல்வேறு ஜானர் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. கேப்டன் மில்லர், அயலான், மெரி கிறிஸ்துமஸ், மிஷன் உள்ளிட்ட படங்கள் நேற்று ஜனவரி 12ஆம் தேதி வெளியாகியுள்ளன. இதில் எந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது, முதல் நாளில் எந்தப் படம் எவ்வளவு வசூலைக் குவித்தது என்று பார்க்கலாம். மேலும் படிக்க
தனுஷ், சிவகார்த்திகேயனை மிஞ்சிய மகேஷ் பாபு.. வசூலில் அலற விடும் குண்டூர் காரம்”!
பிரபல இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் மகேஷ் பாபு மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் “குண்டூர் காரம்”. குண்டூர் மிளகாயின் காரத்தை பிரதிபலிக்கும் வகையில் அக்கட தேசத்து ஆக்ஷன் மசாலாவாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நேற்று (ஜன.12) சங்கராந்தி ரிலீசாக வெளியானது. மேலும் படிக்க
KH 231 முதல் KH 237 வரை.. கமல்ஹாசன் நடிப்பில் வரிசைகட்டி வரவிருக்கும் படங்களின் லிஸ்ட்!
KH237: விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களை தூக்கி சாப்பிடும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி கமல்ஹாசன் ட்ரெண்டாகி வருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு விக்ரம் படம் ரிலீசானதைத் தொடர்ந்து சில மாதங்கள் கமல்ஹாசன் ஓய்வு எடுத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஷங்கர் கூட்டணியில் இணைந்த கமல்ஹாசன் “இந்தியன் 2”வுக்காக இணைந்துள்ளார். மேலும் படிக்க
கலையை ஊக்குவிக்க நீங்கள் தவறியதில்லை.. உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்!
தனுஷ் நடித்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நேற்று ஜனவரி 12 ஆம் தேதி வெளியான படம் கேப்டன் மில்லர். பிரியங்கா மோகன், ஷிவராஜ் குமார், சந்தீப் கிஷன், அதிதி பாலன், நிவேதா தாமஸ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பீரியட் டிராமாவாக உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷின் நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களிடம் இருந்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. மேலும் படிக்க
யார் யாரை பயன்படுத்திக்கிட்டாங்க.. லவ் டிராக் முடித்து வெறுப்பு காட்டும் மணி – ரவீனா!
பிக்பாஸ் வீட்டுக்குள் மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள ரவீனா, மணியிடம் பேச முயற்சிப்பதும், அதற்கு ”தனக்கு நிறைய வேலை இருக்கு” என்று மணி கோபத்துடன் செல்வதும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மணி தன்னை ஒதுக்குவதை நிக்சனிடம் கூறி புலம்பும் ரவீனாவை நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகின்றனர். நாளையுடன் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நிறைவு பெறும் நிலையில் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. மேலும் படிக்க

Sivakarthikeyans Ayalaan Showcase Tribute Messages For The Late Vijayakanth In The Title Cards | Ayalaan: ”அயலான், கேப்டன் மில்லர் படங்களில் கேப்டன் விஜயகாந்த்”
Ayalaan: சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தின் டைட்டில் கார்டில் மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு படக்குழு மரியாதை செலுத்தியது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
ரவிக்குமார் இயகக்த்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் பொங்கல் ரிலீசாக இன்று திரைக்கு வந்துள்ளது. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் பிரமாண்ட கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் வெளிவந்துள்ள அயலான் படம், குழந்தைகள் கொண்டாடும் படமாக வரவேற்பை பெற்றுள்ளது.
இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி வெளியானது. அதில், மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக “என்றென்றும் நினைவில்” என விஜயகாந்தின் மறைவுக்கு டைட்டில் கார்டு போடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த விஜயகாந்த் கடந்த மாதம் 28ம் தேதி உடல்நல பாதிப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.
ரஜினி, கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் நேரில் சென்று விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதி அஞ்சலி நிகழ்வில் நேரில் வர முடியாத சூர்யா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று தங்களின் மரியாதையையும், அஞ்சலியையும் செலுத்தினர்.
இதில், விஜயகாந்தின் மறைவுக்கு சென்னையில் இருந்து கொண்டே நடிகர் சிவகார்த்திகேயன் செல்லவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. எனினும், கடந்த 6ம் தேதி விஜயகாந்தின் இல்லத்திற்கு தனது மனைவியுடன் சென்ற சிவகார்த்திகேயன் தனது ஆறுதலை அவரது குடும்பத்திற்கு தெரிவித்தார். அதை தொடர்ந்து தற்போது வெளி வந்துள்ள அயலான் படத்திலும் விஜயகாந்திற்கு இறுதி மரியாதை செலுத்தும் விதமாக டைட்டில் கார்டும் போடப்பட்டுள்ளது. அதில், “ என்றென்றும் நினைவில் கே.கே.ஆர் & பேமிலி, சிவகார்த்திகேயன் & பேமிலி, அயலான் டீம்” என குறிப்பிடப்பட்டதுடன், விஜயகாந்த் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சின்னத்திரையில் மிமிக்ரி செய்து வந்த சிவகார்த்திகேயன் விஜயகாந்த் குரலில் பேசி கவனத்தை ஈர்த்தார்.
இன்று நேற்று நாளை படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சைன்ஸ் ஃபிக்ஷன் படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏலியன் ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகி இருக்கும் அயலான் திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் ஏலியனுக்கு டப்பிங் பேசி இருப்பது கூடுதல் சிறப்பு.
இதேபோல் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திலும் மறைந்த விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக டைட்டில் கார்டு போடப்பட்டுள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Captain Miller Box Office Collection Day 1 Rs 8.65 Cr India Net On Its First Day For All Languages
தமிழ் சினிமாவில் நெடுங்காலமாகவே திருவிழா தினங்களைக் குறிவைத்து படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. 80 மற்றும் 90களின்போதும் அதற்கு முன்னரும் 2000-களின் தொடக்கத்தின்போதும், ஒருபடத்தின் வெற்றி என்பது அப்படத்தின் கதை மற்றும் அப்படம் எவ்வளவு நாட்கள் திரையரங்கில் ஓடுகின்றது என்பதை வைத்து கணிக்கிடப்பட்டது. ஆனால் 2000-களின் பிற்பாதியில் படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பது என்பது முழுக்க முழுக்க படத்தின் கலெக்ஷனை வைத்து என ஆகிவிட்டதால் நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களின் கலெக்ஷன் எவ்வளவு என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் ஏற்பட்டு விடுகின்றது.
அவ்வகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசான படங்கள் என்றால் அது நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்ப்பார்ப்பு இருந்தது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், விஜி சந்திரசேகர், சந்தீப் கிஷன், வினோத் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
பீரியாடிக் ஜானரில் உருவான கேப்டன் மில்லர் படத்தில் 5 சதவீதம் மட்டுமே நாங்கள் வைத்த லைட் செட்டிங். மீதி எல்லாமே இயற்கை வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் தான். அதையே பயன்படுத்தி கொண்டுள்ளோம். கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கிற்காக 125 நாட்கள் செலவிடப்பட்டது. அதில் 75 நாட்களுக்கு ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டது. படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன் பணியாற்றி வந்தார். படத்தின் ஒரு இடத்தில் சுமார் 1000 நபர்கள் ஒன்றாக இணைந்து சண்டையிடும் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்த சண்டை காட்சி தான் படத்தின் ஹைலைட் என இயக்குநர் அருன் மாதேஸ்வரன் கூறியது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
இதன் அடிப்படையில் நேற்று வெளியான கேப்டன் மில்லர் படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் எவ்வளவு என சாக்நிக் இணையதளம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கேப்டம் மில்லர் திரைப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் இந்தியாவில் மட்டும் ரூபாய் 8.65 கோடி வசூல் செய்திருக்கும் என கூறியுள்ளது. இந்தியாவில் நேற்று ஒருநாள் மட்டும் கேப்டன் மில்லர் படம் இந்தியாவில் மொத்தம் 1,428 காட்சிகள் தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழில் நேற்று மட்டும் ஐமேக்ஸில் மட்டும் 67 காட்சிகள் ஒளிபரப்பட்டுள்ளது.
இது இல்லாமல் ஹிந்தியில் மட்டும் மொத்தம் 849 காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. ஹிந்தி ஐமேக்ஸ் காட்சிகள் மட்டும் 31. கன்னட மொழியில் 84 காட்சிகள் ஒளிபரப்பட்டுள்ளது. மொத்தம் இந்தியாவில் மட்டும் 2,459 காட்சிகள் ஒளிபரப்பட்டுள்ளது. இதில் கலெக்ஷன் ஆன முதல் நாள் வசூல் மட்டும் ரூபாய் 8.65 கோடி என சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது.
Dhanush Starring Captain Miller Film OTT Release Rights Gets Amazon Prime | Captain Miller OTT Release: கேப்டன் மில்லர் படத்தை தட்டித் தூக்கிய ஓடிடி தளம்
Captain Miller OTT Release: கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை அமேசான் பிரைம் பல கோடிகளை கொட்டி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கல் வெளியீடாக ரிலீசாகியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், விஜி சந்திரசேகர், சந்தீப் கிஷன், வினோத் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி படம் எதிர்பார்த்த வெற்றியை தராததால் கேப்டன் மில்லர் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதை நிறைவேறும்படி பீரியட் ஜானரில் ஆக்ஷனில் மிரட்டலாக வெளிவந்து இருக்கும் கேப்டன் மில்லர் படம் தனுஷூக்கு கம்பேக் கொடுத்துள்ளது.
படத்தில் 3 கெட்டப்களில் நடித்துள்ள தனுஷ் கேப்டன் மில்லராக நடித்து அசத்தி இருப்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சில இடங்களில் படத்தின் எதார்த்தம் சறுக்கினாலும், பெரும்பாலானோரின் விமர்சனங்கள் பாசிட்டிவாக இருப்பதால் முதல் நாள் வசூலில் ரூ.30 கோடியை எடுத்து சக்சஸ் ஆகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த நாட்கள் பொங்கல் விடுமுறை என்பதால் கேப்டன் மில்லர் எதிர்பார்த்த வசூலை அள்ள வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி உரிமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துள்ளதால் கேப்டன் மில்லர் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய அந்நிறுவனங்கள் போட்டியிட்டுள்ளன. எனினும், அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் ரூ.50 கோடிக்கு கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி உரிமத்தை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனது முந்தைய ராக்கி மற்றும் சாணிக்காகிதம் ஆகிய படங்களை போல் இதையும் ஒரு ஆக்ஷன் படைப்பாக, சமகால அரசியல், சமூக நிகழ்வுகள் கலந்து கொடுத்திருக்கிறார். மொத்த படத்தை பார்க்கும்போது இப்படி ஒரு கதைக்கு எத்தகைய உழைப்பு தேவைப்படும் என்பதை உணர முடிகிறது. படத்தின் பெரும்பலம் என்று பார்த்தால் சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவும், ஜிவி பிரகாஷ் குமார் இசையும் தான். குறிப்பாக இடைவேளை காட்சி அருமையாக படமாக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும் படிக்க: Captain Miller Review: “தரமான ஆக்ஷன் விருந்து” தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!
KH237: கமல் நடிக்கும் KH237 படத்தை இயக்கும் இரட்டை சகோதரர்கள் : மாஸ் அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்..

Captain Miller Review : ”KGFலாம் சும்மா… கேப்டன் மில்லர் செம்ம” ரசிகர்கள் கொண்டாட்டம்

”KGFலாம் சும்மா… கேப்டன் மில்லர் செம்ம” ரசிகர்கள் கொண்டாட்டம்

Vinoth Kishan Captain Miller interview : "சூர்யாவ மறக்க முடியாதுசாய் பல்லவி கூட நடிக்கணும்"

"சூர்யாவ மறக்க முடியாதுசாய் பல்லவி கூட நடிக்கணும்"

Cinema Headlines Today January 12th Tamil Cinema News Today Captain Miller Ayalaan Raghu Thatha Sivakarthikeyan Dhanush
ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!
தமிழ் சினிமாவில் முதல்முயற்சியாக ஏலியன் எனப்படும் வேற்றுகிரகவாசியுடன் கைகோர்த்து ஆடி, பாடி, சண்டையிட்டு தமிழ் சினிமாவுக்கு தேவையான அத்தனை கமர்ஷியல் அம்சங்களும் இடம்பெற, சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் வெளியீடாக இன்று ரிலீசாகியுள்ள திரைப்படம்“அயலான்”. மேலும் படிக்க
6 ஆயிரம் வருடம் முந்தைய கதை! பிரபாஸின் கல்கி 2898 பட ரிலீஸ் எப்போது?
பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 படம் இந்த ஆண்டு மே மாதம் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. ஹீரோவாக நடித்து வந்த பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பின் கிட்டதட்ட சூப்பர் ஹீரோவாகவே மாறிவிட்டார். அடுத்தடுத்தப் பெரிய பட்ஜட் படங்கள் பான் இந்திய அளவு விளம்பரங்கள் என பிரபாஸ் நடித்து வரும் படங்களில் செலவு பெரிதாகிக் கொண்டே போகிறது. மேலும் படிக்க
“தரமான ஆக்ஷன் விருந்து” தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!
நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கல் வெளியீடாக ரிலீசாகியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், விஜி சந்திரசேகர், சந்தீப் கிஷன், வினோத் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் படிக்க
இந்தி தெரியாது போயா.. கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரகு தாத்தா’ படத்தின் நகைச்சுவையான டீசர்!
கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) நடித்து இந்தி எதிர்ப்பை மையமாக வைத்து உருவாகியுள்ள ரகு தாத்தா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 2015ஆம் அண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த தொடரி படத்தில் மேக்கப் இல்லாமல் நடிப்பில் அசத்திய கீர்த்தி சுரேஷ், அதே ஆண்டு சிவகார்த்திகேயன் படத்தில் பப்ளி மருத்துவராக வந்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார். மேலும் படிக்க
அருண் விஜய்யின் மிஷன் சக்ஸசா? பெயிலியரா? முழு திரைப்பட விமர்சனம்!
இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகியுள்ள படங்களில் அதிக புரோமோசன் இல்லாமல் வெளியாகியுள்ள படம் என்றால் அது நடிகர் அருண் விஜய் , நடிகை எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகியுள்ள மிஷன் சாப்ட்டர் 1. இந்த படத்தினை விஜய் இயக்கியுள்ளார். இந்த படம் லைகா பேனரில் வெளிவந்துள்ளது. படத்தின் கதையை எடுத்துக்கொண்டால் ஏதோ ஆஹா ஓஹோ கதையெல்லாம் கிடையாது. படத்தின் முதல் காட்சியே அமோகமாக உள்ளது. மேலும் படிக்க

Dhanush Sons Yatra And Linga Watch Captain Miller Movie In Rohini Theatre
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தை தனுஷின் இரு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா சென்னை ரோகினி திரையரங்கில் பார்க்கச் சென்றுள்ளனர்
கேப்டன் மில்லர்
ராக்கி, சாணிக்காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக இயக்கியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. தொடரி, பட்டாஸ், மாறன் என தனுஷை வைத்து 3 படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, 4வது முறையாக தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் , சந்தீப் கிஷம் நிவேதா தாமஸ், அதிதி பாலன், ஷிவராஜ் குமார், ஜெயபிரகாஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஜி வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதுவரை தனுஷ் நடித்தப் படங்களில் அதிக பட்ஜெட் சுமார் 80 கோடி செலவில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கேப்டன் மில்லர் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
Terrific Performer #Dhanush 🔥🔥#CaptainMiller 💥🥵Kudos @dhanushkraja for his script selection. If this pace continues in 2nd half; Definitely it will be memorable film #CaptainMillerFDFS 🏆🏆🏆 pic.twitter.com/emQHGegluh
— 𝐀𝐥𝐥𝐚𝐫𝐢 𝐑𝐚𝐦𝐮𝐝𝐮 𝐍𝐓𝐑 (@AllariRamuduNTR) January 12, 2024படம் பார்த்து மகிழ்ந்த தனுஷ் குடும்பத்தினர்
கேப்டன் மில்லர் படத்தைப் பார்க்க தனுஷ் ரசிகர்கள் திரையரங்கத்திற்கு படையெடுத்து வரும் நிலையில் , நடிகர் தனுஷின் இரு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரும் தனது தந்தை நடித்துள்ள படத்தைப் திரையரங்கில் பார்த்து ரசித்து வருகிறார்கள். இருவரும் சென்னை ரோகினி திரையரங்கில் கேப்டன் மில்லர் படத்தைப் பார்க்க சென்றபோது எடுக்கப் பட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகிறது.
#CaptainMiller FDFS 💥Thalaivar family enjoyed 🤍📸🔥🙌@RohiniSilverScr 🔥Welcome our @dhanushkraja in style ⚡💥@B_RAJA_ @DirectorS_Shiva @thiruvallur_DFC @theSreyas @WorldODFCOffl KILLER KILLER CAPTAIN MILLER full cast pic.twitter.com/52EDYjrr3Z
— N.Parthiban (@NSParthiban6) January 12, 2024
பொங்கல் வெளியீடுகள்
கேப்டன் மில்லர் படம் தவிர்த்து அருண் விஜய் நடித்துள்ள மிஷன் , சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் , விஜய் சேதுபதி நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் உள்ளிட்டப் படங்கள் இன்று வெளியாகி இருக்கின்றன. மேலும் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்துள்ள குண்டூர் காரம் படம் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் மற்றும் கேப்டன் மில்லர் படத்திற்கு இசையையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
மேலும் படிக்க : Captain Miller Twitter Review: நடிப்பில் தெறிக்கவிட்ட தனுஷ்.. கேப்டன் மில்லர் எப்படி இருக்கு? – ட்விட்டர் விமர்சனம் இதோ..!
Ayalaan Twitter Review: காத்திருப்புக்கு கிடைத்ததா வெற்றி? சிவகார்த்திகேயனின் “அயலான்” ட்விட்டர் விமர்சனம் இதோ!
Actress Aditi Balan Shares Her Experience Working With Dhanush On Captain Miller | Aditi Balan: நல்ல கதையா வந்தா நடிக்க மாட்டேனா?
அருவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி பாலன். இவர் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் கெளரவ கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். கேப்டன் மில்லர் படம், நடிகர் தனுஷ், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்டவர்கள் குறித்து தனது அனுபவத்தைப் அந்த நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார் பிரியங்கா மோகன்.
அருவி – கருமேகங்கள் கலைகின்றன
தனது முதல் படம் அருவியில் ஒரு அறிமுக இயக்குநருடன் வேலை செய்ததும் அதே நேரத்தில் கருமேகங்கள் கலைகின்றன படத்தில் அனுபவமிக்க தங்கர் பச்சன் படத்தில் நடித்ததற்குமான வித்தியாசத்தைப் பற்றி பேசினார் அதிதி பாலன். ” அருவி படத்தை இயக்கிய அருண் பிரபுவுக்கு அது முதல் படம் என்றாலும் சினிமாவிற்குள் அவர் நிறைய காலம் இருந்தவர். இந்த படத்தில் நடித்த பெரும்பாலானவர்களுக்கு இது முதல் படம் என்பதால் நாங்கள் அனைவரும் இணைந்து இதில் நிறைய விஷயங்களை சேர்ந்து செய்தோம்.
என்னுடைய ஷூட் தொடங்கிய முதல் 3 நாட்களும் படம் பார்ப்பது தான் வேலையாக இருந்தது. Blue is the warmest colour, three colour trilogy போன்ற படங்களைப் பார்க்க சொன்னார் அருண் பிரபு. அதே நேரத்தில் தங்கர் பச்சனும் நிறைய புத்தகங்கள் படிக்கக் கூடியவர். அதுமட்டுமில்லாமல் அந்தப் படத்தில் என்னுடன் நடித்த பாரதிராஜா, கெளதம் மேனன் என எல்லாரும் நிறைய அனுபவம் இருந்தவர்கள். தங்கர் பச்சன் விவசாயம் செய்பவர் என்பதால் அது பற்றி என்னிடம் நிறைய பேசியுள்ளார். இரண்டு படங்களில் இயக்குநர்களுக்கு தங்களுக்கு என்ன வேண்டும் என்கிற தெளிவு இருந்தது” என்று அதிதி பாலன் கூறினார்.
கேப்டன் மில்லர்
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் குறித்து பேசும்போது, “அருண் இயக்கிய ராக்கி மற்றும் சாணி காயிதம் உள்ளிட்ட படங்களின் மிகப்பெரிய ரசிகை நான். அவரது கேப்டன் மில்லர் படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் ஆனான் அதற்குள்ளாக எல்லா கதாபாத்திரங்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் கடைசியில் தான் இப்போது நடித்துள்ள ஒரு சிறிய கதாபாத்திரம் மட்டும் இருப்பதாகவும் அதில் பெரிதாக ரோல் இல்லை என்றாலும் அடுத்தடுத்தப் பாகங்களில் இந்த கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கூடும் என்று இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்த காரணத்தினால் இந்த கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளதாகவும் அதிதி பாலன் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக சினிமாவில் இருந்து குறைவான படங்களில் மட்டுமே தான் நடித்துள்ள காரணத்தை விளக்கினார் அவர். ” நான் எல்லா வகையிலான கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். ஒரே மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிப்பது எனக்கு போர் அடிக்கிறது. அதனால் கொஞ்சம் மாறுபட்ட கதைகளை தேடிப் போகிறேன். போல்டான கதாபாத்திரங்கள் மட்டுமே நடிப்பது எனது விருப்பம் கிடையாது. ஒரு நல்ல திரைக்கதை போல்டாக கதாபாத்திரம் இல்லாமல் வந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லையே. அந்த மாதிரியான நல்ல கதைகள் எனக்கு வரவில்லை. இந்த வருடம் கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தனுஷ் குறித்து பேச்சு
நடிகர் தனுஷ் குறித்து பேசிய அதிதி பாலன். ” எனக்கும் தனுஷுக்கும் காம்பினேஷன் சீன் கிடையாது. ஆனால் நான் அவரை செட்டில் வைத்து பார்த்திருக்கிறேன். அவரிடம் பேசியிருக்கிறேன். உங்களைப் பார்க்க மட்டும்தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன் என்று விளையாட்டாக அவரிடம் சொன்னேன். தனுஷ் நடிப்பதை பார்க்க வேண்டும் எனக்கு அவ்வளவு ஆசை. அவர் செட்டில் பார்க்க நார்மலாக நடந்து செல்வார். ஆனால் ட்ரெய்லரில் பார்க்கும் போது அவர் வேற மாதிரியான மனிதராக வெளிப்படுகிறார். ஒரு காட்சியில் அவரது கண் மட்டுமே அவ்வளவு தீவிரமாக நடிக்கிறது அதை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை. அடுத்த பாகத்தில் எங்கள் இருவருக்கும் சில காட்சிகள் சேர்ந்து இருக்கும் என்று நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.
Captain Miller Out Of 120 Days Shoot 75 Days Were Spent For Action Alone Say Director Arun Madheswaran | Captain Miller: கேப்டன் மில்லர் சீக்ரெட் சொன்ன அருண் மாதேஸ்வரன்
Captain Miller: மொத்தமாக மூன்று பாகங்கள் கொண்ட கேப்டன் மில்லர் படத்தில் மொத்தமிருந்த 125 நாட்களில் 75 நாட்களை சண்டை காட்சிக்கு மட்டுமே எடுத்துக் கொண்டதாக படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படம் உருவாகி பொங்கல் கொண்டாட்டமாக வரும் 12ம் தேதி ரிலீசாக உள்ளது. படம் ரிலீசாக சில நாட்களே உள்ள நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ஊடகம் ஒன்றிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ”கேப்டன் மில்லர் படம் 3 பாகங்களை கொண்டது. பொங்கலுக்கு ரிலீசாக இருப்பது இரண்டாவது பாகம். அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கேப்டன் மில்லர் படத்தின் முதல் மற்றும் மூன்றாம் பாகம் எடுக்கப்படும்.
பீரியாடிக் ஜானரில் உருவான கேப்டன் மில்லர் படத்தில் 5 சதவீதம் மட்டுமே நாங்கள் வைத்த லைட் செட்டிங். மீதி எல்லாமே இயற்கை வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் தான். அதையே பயன்படுத்தி கொண்டுள்ளோம். கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கிற்காக 125 நாட்கள் செலவிடப்பட்டது. அதில் 75 நாட்களுக்கு ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டது. படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன் பணியாற்றி வந்தார். படத்தின் ஒரு இடத்தில் சுமார் 1000 நபர்கள் ஒன்றாக இணைந்து சண்டையிடும் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்த சண்டை காட்சி தான் படத்தின் ஹைலைட்” என பேசியுள்ளார்.
#CaptainMiller – is Actually a Three part film and this is the second part which is going to be released..⭐• After this one’s success, Prequel and Sequel will take off..💥• Out of 120 days shoot, 75 days were spent for Action alone..🔥• Dilip Subbarayan’s 1000 people…
— Laxmi Kanth (@iammoviebuff007) January 8, 2024
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷுன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன், சிவராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாத்தி படம் எதிர்பார்த்த வெற்றியை தராததால், அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருந்தது
ராக்கி, சாணிக்காயிதம் படங்களை இயக்கி கவனம் ஈர்த்தார். தனது இயக்கத்தின் மூலமும், வித்யாசமான படைப்பின் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தின் மூலம் புதுவித அனுபவத்தை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Captain Miller : தோட்டாக்களை தெறிக்கவிட்ட கேப்டன் மில்லர் ட்ரெய்லர்… ட்ரெண்டிங்கில் முதலிடம் !
Captain Miller : தோட்டாக்களை தெறிக்கவிட்ட கேப்டன் மில்லர் ட்ரெய்லர்… ட்ரெண்டிங்கில் முதலிடம் !