புதுச்சேரி கோரிமேடு ஞானபிரகாசம் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 48). இவர் பெயிண்டராக உள்ளார். இவரது மனைவி ஷர்மிளா தேவகிருபை (வயது 44). கடந்த 19 ஆம் தேதி பாஸ்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி கதிர்கிராமம் அரசு மருத்துவமனைக்கு பாஸ்கர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர். இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் ஷர்மிளா தேவகிருபையை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

அப்போது ஷர்மிளா தேவகிருபை, காதலன் சேகர் மற்றும் நண்பர்கள் 2 பேரின் உதவியால் பாஸ்கரை கொலை செய்ததாக கூறினார். இது தொடர்பாக அவர் கொடுத்த வாக்குமூலத்தில், கடலூர் சின்னப்பன் நாயக்கம்பாளயத்தை சேர்ந்த சந்திரசேகரன் என்ற சேகர் புதுச்சேரி சுந்திரமேஸ்திரி நகரில் 15 வருடமாக தையல் கடை நடத்தி வருகிறார். அங்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வேலை பார்த்ததாகவும், அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த பழக்கம் பாஸ்கருக்கு தெரிய வரவே, ஷர்மிளா தேவகிருபையை கண்டித்ததுடன் வேலைக்கு செல்லக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஷர்மிளா மற்றும் சேகர் தொடர்ந்து திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு இடையூறாக இருக்கும் பாஸ்கரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனால் சேகர் மற்றும் அவரது நண்பர்கள் நெல்லித்தோப்பை சேர்ந்த மணிகண்டன் (37) முதலியார்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் (32) ஆகியோர் சேர்ந்து பாஸ்கரை கொலை செய்ய திட்டமிட்டனர்.

இதற்காக சேகர், பாஸ்கரை தொடர்பு கொண்டு பெயிண்டிங் வேலை இருப்பதாக கூறி இடத்திற்கு வரவழைத்தார். அப்போது சேகர் மற்றும் இரண்டு பேரும் சேர்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்தனர். அங்கிருந்து அவரது உடலை ஆட்டோவில் ஷர்மிளா தேவகிருபை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஷர்மிளா உடனடியாக ஆட்டோவில் ஏறி பாஸ்கருக்கு நெஞ்சி வலி ஏற்பட்டதாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் பிரேத பரிசோதனையில் உண்மை தெரிய வரவே ஷர்மிளா தேவகிருபையை கைது செய்து சிறையில் அடைத்தனர் காவல் துறையினர். சந்திரசேகர் மற்றும் அவரது நண்பர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Tag: குற்றச் செய்திகள்

Crime: திருமணத்திற்கு மீறிய உறவுக்கு இடையூறு.. கணவருக்கு மனைவி போட்ட ஸ்கெட்ச்.. புதுச்சேரியில் ஷாக்

Crime: குளிர்பானத்தில் பெண்ணுக்கு மயக்க மருந்து.. சென்னை அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமை கொடூரம்..

சென்னை அண்ணாநகரில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 35 வயதான பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்று அளித்துள்ளார.

35 வயதான பெண் ஒருவர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருவதாகவும் திருமணமாகி கணவர் இறந்துவிட்டதால் உறவினர் உடன் தனியாக வசித்து வந்துள்ளார். அந்த பெண் அப்பகுதியில் இருக்கும் ஒரு தனியார் கணினி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் முகப்பேரை சேர்ந்த சத்யஜித் (வயது 35) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சத்யஜித் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்துள்ளார். இதனை நம்பி அந்த பெண்ணும் நெருங்கி பழகியுள்ளார். ஒரு நாள் சத்யஜித் கோயம்பேட்டில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்துள்ளார். இளம்பெண்ணும் அவரை நம்பிச் சென்றுள்ளார். ஆனால் சத்யஜித் உறவினர் வீடு இல்லாமல் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்துள்ளார். அதனை தொடர்ந்து அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். மேலும், அவர் எடுத்த வீடியோவை வைத்து மிரட்டி, தான் அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும் என அச்சுறுத்தியுள்ளார்.

அப்படி வர மறுத்தால் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்வார் என மிரட்டியுள்ளார். சத்யஜித்தின் இந்த செயலால் மனம் உடைந்த அந்த பெண் அண்ணாநகர் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது, இளம்பெண் கூறியது உண்மை என தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் சத்யஜித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணாநகரில் இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: முதலிரவில் அடம்பிடித்த புது மாப்பிள்ளை! ஷாக்கான பெண் வீட்டார்! மனைவி எடுத்த அதிரடி முடிவு!

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு 24 வயதில் ஸ்டெர்லின் என்ற மகள் உள்ளார். இவருக்கும் கட்டாத்துறை கடமனாங்குழியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பிரவீன் சூர்யா (வயது 28) என்பவருக்கும் 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது ஸ்டெர்லினின் தந்தை சந்திரசேகர் பெயரில் இருக்கும் வீடு மற்றும் விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை மாப்பிள்ளைக்கு சீர்வரிசையாக கொடுப்பதாக வாக்கு கொடுத்துள்ளனர்.

ஆனால் திருமணத்தின் போது ஏற்பட்ட பண நெருக்கடியால் விலை உயர்ந்த இரு சக்கர வாகனம் வாங்கி தர முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் திருமணம் நல்லப்படியாக நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் முதலிரவன்று மாப்பிள்ளை பிரவீன் சூர்யா தனக்கு விலை உயர்ந்த இரு சக்கர வாகனம் வாங்கித் தர வேண்டும் என்றும், வீட்டை தனது பெயருக்கு எழுதி தர வேண்டும் என்றும் மனைவி ஸ்டெர்லின் இடம் அடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் பிரவீன் சூர்யாவுடன் சேர்ந்து கொல்வேல் பகுதியை சேர்ந்த பிரியா, தந்தை ஜான் ராஜசெல்வன் (வயது 58), தாயார் கனகராணி (வயது 52), சகோதரர் பிரபின் சூர்யா (வயது 30) அவரது மனைவி ஜெனி ஆகியோர் ஒன்று சேர்ந்து வரதட்சனை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இது கையை மீறி போனதை உணர்ந்த ஸ்டெர்லின் அவரது தொல்லை தாங்காமல் கணவர் பிரவீன் சூர்யா அவரது தந்தை மற்றும் உறவினர்கள் மீது வரதட்சனை புகார் அளித்துள்ளார். மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பிரவீன் சூர்யா மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The police department is looking for the mysterious persons who shot dead 20 stray dogs in Telangana state
தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் 20 தெருநாய்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 5 தெரு நாய்கள் படுகாயம் அடைந்துள்ளது.
#WATCH | Telangana: Around 20-25 dogs found dead and several injured in Ponnakal village of Mahabubnagar district, today. Adulapuram Goutham an activist of Stray Animal Foundation of India says, “According to the locals, after midnight, a few masked men came in the car and… pic.twitter.com/s1YFpKfFFN
— ANI (@ANI) February 17, 2024சுட்டுக்கொல்லப்பட்ட தெரு நாய்கள்:
வியாழக்கிழமை இரவு பொனக்கல் பகுதியில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் முகமூடி அணிந்து வந்து அப்பகுதியில் இருந்த தெருநாய்களை குறிவைத்து சரமாரியாக சுடத் தொடங்கினர். இதில் 20 நாய்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் 5 நாய்கள் படுகாயம் அடைந்தது. இதனை தொடர்ந்து வெள்ளிகிழமை காலை இந்த சம்பவம் தொடர்பாக அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. படுகாயம் அடைந்த தெருநாய்களை அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குற்றவாளிகளுக்கு வலைவீச்சு?
இதனை தொடர்ந்து காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை பார்த்த சாட்சி ஒருவர், குற்றச் செயலில் ஈடுபட்ட நபர்கள் காரில் வந்ததாகவும், அவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். பஞ்சாயத்து அதிகாரியின் புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 429 (விலங்குகளைக் கொல்வது அல்லது காயப்படுத்துவது) மற்றும் ஆயுதச் சட்டம் தவிர விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொடூர செயல்களை செய்த நபர்களை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண

Crime: தொழிலில் ஏற்பட்ட போட்டி! திருநங்கையை அடித்து கொன்ற சக திருநங்கைகள்!

செம்மஞ்சேரி: பெரும்பாக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சிம்மி (வயது 21) திருநங்கை. கடந்த ஜனவரி 25 ஆம் தேதி இவர் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த பெற்றோர்கள் அவரை காணவில்லை என நீலாங்கரை, பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, தாழம்பூர் ஆகிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

திருநங்கை கொலை:

புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் சிம்மியை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து ஜனவரி 28 ஆம் தேதி செம்மஞ்சேரி, ராஜீவ் காந்தி சாலை அடுத்து முட்புதரில் அழுகிய நிலையில் ஓர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இறந்தவர் உடலில் வெட்டுக் காயம் இருந்த நிலையில், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இதனால் சிம்மியின் பெற்றோரை அழைத்துள்ளனர். அவர்கள் அந்த உடலை பார்த்து சிம்மி என உறுதி செய்தனர். பின்னர் சிம்மியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் முடிவில் சிம்மி கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து அவர் மாயமான வழக்கு கொலை வழக்காக மாற்றி விசாரணை தொடங்கினர்.

5 திருநங்கையினர் கைது:

பின் உடல் மீட்கப்பட்ட பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் சிம்மி உடல் கிடைத்த இடத்தில் 4 திருநங்கைகள் வெளியே வந்தது தெரியவந்தது. இதனால் இவர்கள் சிம்மி கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனால் அந்த கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி 60 கிலோ கஞ்சா பிடிபட்ட வழக்கில் ஐந்து திருநங்கையினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த திருநங்கையரான அபர்ணா (வயது 27), ஆனந்தி (வயது 37), ரதி (வயது 36), கண்ணகி நகரைச் சேர்ந்த அபி (வயது 32), ஆகியோர் கஞ்சா தொழிலில் இருந்த போட்டியின் காரணமாக சிம்மியை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையின் அடைத்தனர்.

Crime: இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்.. பெண்ணை வெட்டிக்கொலை செய்து உடலை எரித்த சைக்கோ கொலையாளி..

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மலைப்பகுதியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த வாலிபர், ஆறு மாதம் ஒரு பெண்ணை அழைத்து வந்து குடும்பம் நடத்தியுள்ளார். அதன் பின் அந்த பெண்ணை வெட்டி கொலை செய்து மறைத்து விட்டு, நண்பரின் உதவியால் உடலை எரித்துள்ளார் . தகவல் அறிந்து வாழப்பாடி போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பட்டி அருகே தேக்கல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மலையாளப்பட்டி பகுதியில் கருமாவரத்தான் காடு என்று அழைக்க கூடிய 1.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலத்தை கடந்த ஆறுமாதத்திற்கு முன்பு நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்த வல்லரசு (28 ) என்பவர் வாங்கியுள்ளார். அவர், கும்பகோணம் மாவட்டம் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த மூன்று பெண் குழந்தைக்கு தாயான சுகுணா என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் காதல் செய்து அங்கு அழைத்து வந்து, அந்த பெண்ணுடன் கடந்த ஆறுமாதமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகுணா (32) பொங்கல் பண்டிகைக்கு தனது அம்மா வீடான மயிலாடுதுறைக்கு சென்று விட்டு 10 நாட்களுக்கு பின்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது சுகுணாவுக்கும் வல்லரசுக்கும் தகாராறு நடந்ததாகவும் ஆவேசமடைந்து கத்தியை எடுத்து கழுத்து தலை உள்ளிட்ட ஐந்து இடங்களில் வெட்டியதாகவும் அப்போது சுகுணா உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வல்லரசு இறந்த உடலை அங்கேயே விட்டு கொல்லிமலைக்கு சென்றுள்ளார்.

அங்கு வல்லரசுவின் நண்பரான பாக்கிய ராஜை (18) அழைத்து வந்து சடலமாக கிடந்த சுகுணாவின் உடலை தீயிட்டு எரித்துள்ளனர். அப்போது போலீஸ் வருவதை கண்டு இருவரும் தப்பியோட முயன்றுள்ளனர்.

எனவே வாழப்பாடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், எரிந்த சுகுணாவின் உடலை கைப்பற்றியுள்ளனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து வல்லரசு, உடந்தையாக இருந்த பாக்கிய ராஜ் (18) ஆகிய இருவரையும் தேடி இரவில் வாழப்பாடி போலீஸார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விசாரணையில் வல்லரசு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ஏற்கனவே தன் மீது போக்ஸோ வழக்கு, உறவினரை கொலை செய்த வழக்கு என இரண்டு வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராம் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், 6 மாத காலம் குடும்பம் நடத்தியதாகவும் கூறியுள்ளார். பொங்கலுக்கு ஊருக்கு சென்று திரும்பிய சுகுணாவிடம் மாற்றங்கள் இருந்ததாகவும், இதனால் சுகுணா வல்லரசை விட்டு சென்றுவிடுவாரோ என்ற அச்சம் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சண்டை முத்திப்போன நிலையில், வல்லரசு சுகுணாவை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Crime: ’தமிழ்ல பேசுவியா?’ சிறுவனை தாக்கிய ஆசிரியை.. காது அறுபட்ட நிலையில் கண்ட பெற்றோர் ஷாக்..

பள்ளியில் தமிழில் பேசியதாக 5 ஆம் வகுப்பு மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை நாயகி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூர் கே.சி.பி ரோடு ஹன்சா ஜெம்ஸ் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் கேசவன் குகன்யா தம்பதியினர். இவர்களுக்கு 10 வயதில் மனிஷ் மித்ரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. சிறுவன் மித்ரன் ராயபுரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். ஜனவரி 23 ஆம் தேதி பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்பு கொண்டு சிறுவன் கீழே விழுந்ததாகவும் இதனால் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் உடனடியாக பள்ளிக்கு வரும்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு பதறிப்போன பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு சென்றுள்ளனர். அங்கு தங்களது மகன் மித்ரன் காது அறுபட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ந்து போனார்கள். அதன்பின் அங்கிருந்து அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிறுவனுக்கு உடனடியாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, தண்டையார்பேட்டையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அன்று இரவே சிறுவனுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காது ஒட்டப்பட்டது. பள்ளியில் இருந்து வந்த சிறுவன் தாய் குகன்யாவிடம், விளையாடிக் கொண்டிருக்கும்போது தமிழில் பேசியதால் நாயகி என்ற ஆசிரியர் தன்னை தாக்கியதாக கூறியுள்ளான். மேலும், காதை திருகியதில் காது அறுபட்டதாகவும் தெரிவித்துள்ளாண். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று கடுமையாக பேசியுள்ளனர். சற்றும் பிடி கொடுக்காத நாயகி ஆசிரியரின் திமிர் பேச்சை கேட்ட தாய் குகன்யா, அவரை அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் தரப்பில் ராயப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் தாய் குகன்யா, ஆசிரியை நாயகியை அடித்ததால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு புகாரையும் ராயபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழில் பேசியதற்காக ஆசிரியர் நாயகி செய்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime: 5 பேர் சுட்டுக்கொலை: இலங்கையில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்.. திடுக்கிடும் சம்பவம்

இலங்கையின் தெற்கு மாகாணத்தில் பட்டப்பகலில் 5 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் தெற்கு மாகாணம் பெலியட்டா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று காலை ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின் தொடர்ந்து வந்த மற்றொரு ஜீப் முன்னே சென்ற வாகனத்தை வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.

அதனை தொடர்ந்து, ஜீப்பில் இருந்த மர்ம நபர்கள், வழிமறித்த வாகனத்தில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் 5 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. அவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொருவரை உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் பரபரப்பான நெடுஞ்சாலையில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூலிப்படை கும்பலை சேர்ந்தவர்களே இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கூலிப்படை கும்பல்களின் செயல்பாடுகளை தடுப்பதற்கான சிறப்பு நடவடிக்கையை போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியதும், இதுவரை சுமார் 40 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.