Ghilli Re-release Happy News For Thalapathy Fans Vijay Trisha Blockbuster Movie Ghilli Rerelease April 2024
நடிகர் விஜய் நடித்த கில்லி படம் மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு ’தளபதி’ விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் ’கில்லி’. தரணி இயக்கிய இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், தாமு, ஆஷிஷ் வித்யார்த்தி, ஜெனிஃபர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்த கில்லி படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்து சக்கைப்போடு போட்ட “ஒக்கடு” படத்தின் ரீமேக் ஆகும். கில்லி படத்தில் கபடி…
