Tag: காஞ்சிபுரம் செய்திகள்

• குளு குளு கரும்பு ஜூஸ்…! ஜூஸ் போட்டு கொடுத்த முன்னாள் அமைச்சர் வளர்மதி..!

குளு குளு கரும்பு ஜூஸ்…! ஜூஸ் போட்டு கொடுத்த முன்னாள் அமைச்சர் வளர்மதி..!

தேர்தல் முடிந்தால் விட்டுடுவோமா, கரும்பு ஜூஸ் போட்டு கொடுத்து மக்களின் தாகத்தை தனித்த முன்னாள் அமைச்சர் வளர்மதி. சாலை ஓர கடை போல் அமைத்து தண்ணீர் பந்தல் திறந்து வைத்த காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர்.முன்னாள் அமைச்சர் வளர்மதி திறந்து வைத்த தண்ணீர் பந்தல்  5 நிமிடத்தில்  காலி செய்த பொதுமக்கள்.

தமிழ்நாட்டு அரசியலில் பாரம்பரியம்

தமிழரின் பாரம்பரியத்தில் ஒன்றாக தண்ணீர் பந்தல்   திறக்கும் நடைமுறை பண்டைய காலத்தில் இருந்து  வருகிறது. பண்டைய காலத்தில் பொதுமக்கள், ஊரில் இருந்த முக்கிய  நபர்கள் இதுபோன்ற தண்ணீர் பந்தல்களை திறப்பது வழக்கம்.  அதன் ஒரு பகுதியாக கோடை காலங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரதான அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தலை திறப்பது  என்பது  பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது.  அந்த வகையில் தமிழ்நாடு அரசியலில் முக்கிய கட்சியாக இருக்கும் அதிமுக சார்பில், தண்ணீர் பந்தங்களை  திறக்க எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.  இதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் தண்ணீர் பந்தலை திறந்து வருகின்றனர்.

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் சார்பில் கோடை வெயிலில் பொதுமக்கள் தாகத்தை தீர்க்க தண்ணீர் பந்தல் திறக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் ஏற்பாட்டில் கோடை வெயிலில் தாகத்தை தீர்க்க தர்பூசணி பழம், வெள்ளரிப்பழம், பனை நுங்கு, கரும்பு ஜூஸ், கீரக்காய், கூழ், மோர், பழச்சாறு போன்றவை சாலை ஓர கடை போல் அமைத்து பந்தலில் இளநீர், நுங்கு, ஈச்சம்பழம், வாழைப்பழம் தொங்கவிட அலங்கரிக்கப்பட்ட தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் வளர்மதி  பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

" பழக்க தோஷத்துல பண்றாங்கப்பா "

தண்ணீர் பந்தலை திறந்து உடனே பொதுமக்கள் முந்தி அடித்துக்கொண்டு தண்ணீர் பந்தலுக்கு அமைக்கப்பட்டிருந்த கீரணிப்பழம், தர்பூசணி பழம், குளிர்பானம், கீரைக்காய் போன்றவை பொதுமக்கள் பையில் அள்ளிக் கொண்டும், மூட்டை கட்டி பொதுமக்கள் ஐந்தே நிமிடத்தில் தண்ணீர் பந்தலில் காலி செய்தனர். தேர்தல் சமயத்தில் கட்சியினர் காய்கறி விற்பது, இளநீர் விற்பது, தோசை சுட்டுக் கொடுப்பது, ஆம்லெட் போட்டுக் கொடுப்பது, பூ கட்டி கொடுப்பது, என பல்வேறு வகையில் நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டனர். தற்போது முன்னாள் அமைச்சர் அதே பாணியில் மக்களுக்கு ஜூஸ் போட்டு கொடுத்து வாக்குகளை சேகரித்துள்ளார்.

வாக்கு சேகரித்த பழக்க தோஷத்தில் அமைச்சர் செய்தாராம் என சில பொதுமக்கள்  சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றனர். அதேபோன்று பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த  குளிர்ச்சியான பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கும் விழாவும் மேகலகமாக நடத்திவிட்டு அங்கிருந்து அதிமுகவினர் கலந்து சென்றனர். பொதுமக்களும்  அதிமுக  கட்சித் தொண்டர்களும் தங்களுக்கு தேவையான பழங்கள்  ஆகியவற்றை மூட்டை கட்டிக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். பொதுமக்கள் மற்றும் அதிமுக கட்சித் தொண்டர்கள் போட்டி   போட்டு கொண்டு அங்கிருந்து பொருட்களை   அள்ளிக் கொண்டு சென்றது அங்கு இருந்தவர்களிடையே நகைப்பை ஏற்படுத்தியது.

Source link

• kanchipuram book fair 2024 Starts today In Kanchipuram 9th february to 19 th february 2024 at kanchipuram collector office ground TNN

kanchipuram book fair 2024 Starts today In Kanchipuram 9th february to 19 th february 2024 at kanchipuram collector office ground TNN

காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் இரண்டாவது மாபெரும் புத்தக திருவிழா- 2024 09.02.2024 முதல்  19.02.2024 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது.
காஞ்சிபுரம் புத்தக திருவிழா 2024 ( kanchipuram book fair 2024 )
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ/ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் (bapasi) இணைந்து, நடத்தும் இரண்டாவது மாபெரும் புத்தக திருவிழா-2024 தொடங்கப்படவுள்ளது. இப்புத்தக திருவிழா 09.02.2024 முதல் 19.02.2024 வரை 11 நாட்கள் நடைபெறுகின்றது. புத்தக திருவிழா நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு, சுமார் 50,000 தலைப்புகளில் பல இலட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டவுள்ளன. இப்புத்தக கண்காட்சி அறிவு பசிக்கு மாபெரும் விருந்தாகும், இப்புத்தக கண்காட்சியில் பல எழுத்தாளர்கள் படைப்புகளும் இடம் பெறுகின்றன.
கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் ?
மேலும் புத்தக திருவிழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் முதல் நாள் துவக்க விழாவினை தொடர்ந்து, 2-வது நாள் ஆயிஷா இரா.நடராஜன் மற்றும் .எம்.பி.நாதன் அவர்களின் சொற்பொழிவுகளும், 3-வது நாள் சியாமளா ரமேஷ்பாபு அவர்களின் சொற்பொழிவும், சூப்பர் சிங்கர் மற்றும் இசைப் பள்ளி குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும், 4-வது நாள் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவும், பட்டிமன்றம் ராஜா அவர்களின் தலைமையில் பட்டிமன்றமும், 5-வது நாள் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் திரைக்கலைஞர் பொன்வண்ணன் ஆகியோரின் சொற்பொழிவுகளும், 6-வது நாள் விழாவில் இயக்குநர் அஜயன் பாலா மற்றும்  பர்வீன் சுல்தானா ஆகியோரின் சொற்பொழிவுகளும், 7-வது நாள் விழாவில் கோபிநாத் அவர்களின் நீயா நானா நிகழ்ச்சியும், ஈரோடு மகேஷ் அவர்களின் பட்டிமன்றம் நிகழ்ச்சியும், 8-வது நாள் விழாவில் கு.சிவராமன் மற்றும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் ஆகியோரின் சொற்பொழிவுகளும், 9-வது நாள் விழாவில் மோகனசுந்தரம் மற்றும் பாவலர் அறிவுமதி ஆகியோரின் சொற்பொழிவுகளும்,  10-வது நாள் விழாவில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் சொற்பொழிவு மற்றும் கலக்கப்போவது யாரு குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சிகளும், 11-வது நாள் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் விழா என 11 நாட்கள் சிறப்பாக நடைபெறவுள்ளன.
புத்தகத் திருவிழா செயல்படும் நேரம் ?
மேலும் புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் காலை 10 மணி முதல் பிற்பகல் 03 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ/மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகளும், பிற்பகல் 03 மணி முதல் மாலை 04 மணி வரை பள்ளி, மாணவ/மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 04 மணி முதல் மாலை 05 மணி வரை கல்லூரி மாணவ/மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 05 மணி முதல் 06 மணி வரை நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும், மாலை 06 மணி முதல் இரவு 09 மணி வரை சிறப்பு அழைப்பாளர்களின் கருத்துரை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. மாபெரும் இப்புத்தக திருவிழா பொதுமக்கள் மற்றும் மாணவ /மாணவியர்களிடையே வாசிப்பு திறனை உருவாக்கிட 09.02.2024 முதல் 19.02.2024 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளன. புத்தக ஆர்வலர்கள் மாணவ/ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் காண

Source link

• காஞ்சியில் கவுன்சிலர்கள் இரண்டு நாள் தொடர் போராட்டம்..! மயங்கி விழுந்த பெண் கவுன்சிலர்..!

காஞ்சியில் கவுன்சிலர்கள் இரண்டு நாள் தொடர் போராட்டம்..! மயங்கி விழுந்த பெண் கவுன்சிலர்..!

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முறைகேடுகளை கண்டித்து நுழைவு வாயிலில் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் குழந்தைகளோடு குடும்பத்துடன் இரவு முழுவதும் பாய், தலையனையுடன் உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளது. மாநகராட்சியில் 32 திமுக, வி.சி.க 1 , சுயேச்சைகள் 3 என 37 உறுப்பினர்களும், அதிமுக 8 தமிழ் மாநில காங்கிரஸ் 1 , பிஜேபி 1 பாமக 2 ,சுயேச்சைகள் 1 என மொத்தம் 14 எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். நிர்வாக பணிக்காக மாநகராட்சி நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொது மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு ,பாதாள சாக்கடை , குப்பைகளை கையாளுவது உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும் என  தெரிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் போர் கொடி

எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்களின் வார்டுகளுக்கு, எந்தவித மேம்பாட்டு பணிகளும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. மேலும் கடந்த இரண்டு மாதங்களாக மாமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டமும் முறையாக நடைபெறவில்லை. அதுமட்டுமல்லாமல்,  திமுக கட்சியை சேர்ந்த மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் அவர்களின் ஒரு தலைப்பட்சமான நிர்வாகத்தை கண்டித்தும் எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆணையர் செந்தில்குமார் இடம் மனு அளித்தனர்.

கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சியை சேர்ந்த 14 வார்டுகளிலும் இதனால் வரையில்  எந்த அடிப்படை பணிகளும் செய்யாமல்  வார்டுகளை புறக்கணித்து மக்கள் மத்தியில் அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு அவப்பெயரை வாங்கித் தர திமுகவும் மாமன்ற ஊழியர்களும் முயற்சிப்பதாக அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகிறார்.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் பல்வேறு முறைகேடுகள் ஈடுபடுவதாக கோரி,  அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் காலை முதல் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் மாநகராட்சி பரபரப்பாக ஏற்படுத்தியது.

விடிய விடிய நடைபெற்ற போராட்டம்

மேலும் மாலையுடன் போராட்டத்தில் இருந்து பின்வாங்கி செல்வார்கள் என எதிர்பார்த்த நிலையில்,  மாநகராட்சி ஆணையர் தற்போது வரை பேச்சுவார்த்தை நடந்ததால் அதிமுக, பாஜக , தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உள்ளிட்ட எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் 9 கவுன்சிலர்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பத்தாருடன் நுழைவாயிலில்  உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் காலை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் மதியம் மேயர் மற்றும் ஆணையர் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு, வந்த பொழுது பாஜகவை சேர்ந்த பெண் கவுன்சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெண் கவுன்சிலர் ஒருவர் மயங்கி விழுந்ததை எடுத்து அவரை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவுன்சிலர்கள் போராட்டமும் பெண் கவுன்சிலர் மயங்கி விழுந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link

• காஞ்சியில் செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்..! பக்தி பரவசத்தில் பக்தர்கள்..!

காஞ்சியில் செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்..! பக்தி பரவசத்தில் பக்தர்கள்..!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட விளகொடி கோவில் தோப்பு தெரு பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர்  கோயில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமரிசையாக மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது

ஸ்ரீ செல்வ விநாயகர்  கோயில்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட விளகொடி கோயில் தோப்பு தெரு உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் சிதலமடைந்து இருந்த நிலையில் கோயில் நிர்வாகி சார்பில் கோவில் புரணைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு பின் பூர்ண கும்ப மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.  இத்திருக்கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம் விழாவனது வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஸ்ரீ செல்வ விநாயகர்  கோயில்

கும்பாபிஷேக விழாவையொட்டி கோயில் அருகாமையில் உள்ள வளகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு பூஜை, கோ பூஜை, லஷ்மி ஹோமம், விசேஷ திரவ்ய ஹோமம் பூர்ணாஹதி நடைபெற்று. இன்று காலை கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் செய்து மஹா பூர்ணாஹதி தீபாரதனைகள் நடைபெற்றது. அதன்பின் ராஜ கோபுரம், விமானங்களுக்கு  பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகமானது  வெகு விமரிசையாக நடைபெற்றது.

புனித நீர் ஊற்றப்பட்டது

அதன்பின் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் சுவாமிக்கு சிறப்பு தீப தூப தீபாராதனைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக பெரு விழாக்காண மேலும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடைபெற்று கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீரை பக்தர்கள் தெளித்து கொண்டனர். பொதுமக்கள் அனைவருக்கும் அருட் பிரசாதங்களும், அன்னதானங்களும் வழங்கப்பட்டது. மஹா கும்பாபிஷேக பெரு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிஷேகம் என்றால் என்ன ?

கும்பாபிஷேகம் (அ) குடமுழுக்கு விழா ( அ ) நன்னீராட்டு பெருவிழா, ஒவ்வொரு இந்து கோவிலிலும் 12  ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என நம்பப்படுகிறது. இவ்வாறு கும்பாபிஷேகம் நடைபெறும் பொழுது கோவில் கருவறையில் உள்ள கடவுள்களுக்கு சக்தி புதுவிக்கப்படுவதாகவும், தெய்வத்தன்மை அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குடத்தில் பல்வேறு நீர் நிலைகளில் கொண்டுவரப்பட்ட நீரை நிரப்பி பல்வேறு மூலிகைகள் ஆன்மீகச் சார்ந்த பொருட்கள் கலக்கப்பட்டு, சில நாட்கள் மாபெரும் யாகம் வளர்க்கப்படும்.

எவ்வாறு வளர்க்கப்படும் யாகசாலையில், பல்வேறு ஆன்மீகப் பொருட்கள் மூலம் வேள்வி வளர்க்கப்பட்டு மந்திரங்கள் உற்சவிக்கப்படும். இவ்வாறு கூறப்படும் மந்திரத்தால் புனித நீர் சக்தி பெறுவதாக நம்பப்படுகிறது. இந்த புனித நீரை கோபுரத்தில் உள்ள கலசத்தின் மீது, குறிப்பிட்ட நன்னாளில் ஊற்றும் பொழுது அந்த கலசங்கள் சக்தி பெற்று, அதன் மூலம் கருவறையில் உள்ள தெய்வத்திற்கு சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. கும்பாபிஷேகத்தை வருடத்திற்கு மூன்று முறை நேரில் கண்டால் ஒரு கோவில் கட்டியதற்கு சமம் என நம்பப்படுகிறது. இந்த பொண் மக்கள் மீது தெளிக்கப்படும் பொழுது, பாவங்கள் நீங்கி மனது நிம்மதி அடையும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

Source link