ரஷ்ய இசை நிகழ்ச்சியில் பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு, துப்பாக்கி சூடு நடத்திய 11 பேர் கைது
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: மார்ச் 21 அன்று ( வெள்ளிக்கிழமை ) மாஸ்கோவின் வடக்கு புறநகர்ப் பகுதியான க்ராஸ்னோகோர்ஸ்கில் உள்ள குரோகஸ் சிட்டியில் உள்ள மண்டபத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தினர். …
