என்எல்சிக்காக மீண்டும் விளைநிலங்களைப் பறிப்பதா? புரட்சி வெடிக்கும்! அன்புமணி எச்சரிக்கை…
என்எல்சிக்காக மீண்டும் விளைநிலங்களைப் பறிப்பதா? புரட்சி வெடிக்கும்! என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : கடலூர் மாவட்டத்தில் வேளாண் விளைநிலங்களை பறிப்பதற்கு எதிராக உழவர்களும், மக்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், என்.எல்.சி 1, 1ஏ ஆகிய சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக மீண்டும் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தை நாசமாக்கும் என்.எல்.சியின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணை போவது கண்டிக்கத்தக்கது….
