புதிய தேர்தல் ஆணையர்களை நியமனம்! பிரதமர் மோடி தலைமையில் ஓரிரு நாளில் ஆலோசனை கூட்டம்!
<p>இந்திய தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 13ஆம் தேதி அல்லது 15ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <h2><strong>தேர்தல் ஆணையர்கள் ராஜினாமா:</strong></h2> <p>அடுத்த மாத தொடக்கத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த அருண் கோயல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்று கொண்டார்.</p> <p>இந்திய தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக…
