Tag: ஆஸ்கார்

  • oscar 2024 oscar nominated documentary to kill a tiger review

    oscar 2024 oscar nominated documentary to kill a tiger review


     நிஷா பஹுஜா இயக்கத்தில் உருவான ஆவணப்படம் டூ கில் ஏ டைகர் (To Kill A Tiger )
    ஆஸ்கர் 2024
    2024-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஓப்பன்ஹெய்மர் படம் மொத்தம் 7 விருதுகளை வென்றுள்ளது . அதே நேரத்தில் மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் வெளியான கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன் படத்திற்கு ஒரு விருது கூட வழங்கப்படாதது வருத்தம் ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்களுக்கான விருது ஒருபக்கம் இருக்க சிறந்த ஆவணப்படத்திற்கான விருது ரஷ்யா உக்ரைன் போரை ஆவணம் செய்த பத்திரிகையாளர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட  ’20 Days In Mariupol’ ஆவணப்படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
    டூ கில் ஏ டைகர் (To Kill A Tiger )
    சிறந்த ஆவணப்படத்திற்கான பிரிவின் கீழ் இந்தியா சார்பாக  நிஷா பஹுஜா இயக்கிய டூ கில் ஏ டைகர் (To Kill A Tiger ) ஆவணப்படம் பரிந்துரைக்கப் பட்டது. இந்தப் படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதை வெல்லவில்லை என்றாலும் இந்த ஆவணப்படம் தற்சமயம் இந்தியாவின் பிரதான சமூக பிரச்சனைகளில் ஒன்றை பேசுகிறது . 
    தனது மகளின் நீதிக்காக போராடிய தந்தையின் கதை
    கடந்த 2017-ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கிராமம் ஒன்றில்  13 வயது பெண் ஒருவர் மூன்று இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். தனது மகளுக்கு நிகழ்ந்த இந்த கொடூரமான நிகழ்வில் சம்பந்தபட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தர ஒரு எளிய விவாசாயியின் போராட்டத்தையே இந்த ஆவணப்படம் முன்வைக்கிறது.
    ஒவ்வொரு 20 இருபது நிமிடத்திற்கு ஒருதரம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளவதாக தகவல் வருவதாக சமீபத்தில் அய்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன. இதே ஜார்கண்ட் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்து சிறுமியை அடித்துக்கொன்ற செய்து ஒன்று மிக சமீபத்தில் வெளியாது. புதுச்சேரியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொலை செய்யப்பட்டது நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

    இந்த குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படுகிறதா என்கிற கேள்வி ஒருபக்கம் இருந்து வருகிறது. ஆனால் பாதிப்பிற்கு உள்ளான பெண் அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை இந்த ஆவணப்படம் நேரடியாக போட்டு உடைக்கிறது. மூட நம்பிக்கைகள், ஆணாதிக்கம் நிறைந்த ஒரு இந்திய கிராமத்தில் இந்த மாதிரியான ஒரு குற்றத்திற்கு எந்த மாதிரியான எதிர்வினைகள் எழுகின்றன என்பதே இந்தியாவிம் இது எவ்வளவு தீவிரமான பிரச்சனை என்பதை எடுத்துக்காட்டுகிறது.
    ஒரு 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகும்போது அந்த ஊர் மக்கள் இந்த பிரச்சனைக்கு கொடுக்கும் தீர்வு என்ன தெரியுமா
    குற்றவாளிகளான மூவரில் ஒருவருக்கே இந்த பெண்ணை திருமணம் செய்துவைக்க வேண்டும் , இந்த பிரச்சனையை வெளியே தெரியப்படுத்தக் கூடாது அப்படி தெரிந்தால் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள யாரும் முன்வரமாட்டார்கள். மேலும் இது தங்களுடைய கிராமத்திற்கே அவமானத்தையே ஏற்படுத்தும். இரவு நேரத்தில் பெண் தனியாக இருந்தால் அவளுக்கு இதுதான் நடக்கும். 
    அதே நேரத்தில் இப்போது தான் உலகத்தை புரிந்துகொள்ள தொடங்கியிருக்கும் அந்த 13 வயது பெண் சொல்வது என்ன தெரியுமா ?
    ”நாம் பிறந்திருக்கிறோம் என்றால் நிச்சயமாக ஏதோ நல்லது செய்வதற்கு தான். யாரும் இந்த பூமியில் கெட்டது செய்வதற்கு பிறந்திருக்கக்கூடாது”. இனிமேல் இன்னொரு நபரிடம் என்னால் காதல் வயப்படப் பட முடியுமா என்று நான் அடிக்கடி யோசிக்கிறேன், அப்படியே காதல் வந்தாலும் எனக்கு நடந்ததை நான் எப்படி அவரிடம் சொல்லப் போகிறேன்” 

    தனது ஊர் மக்கள் தனக்கு கொடுத்த அழுத்தம் , மிரட்டல் , குழப்பம் என எல்லாவற்றையும் கடந்து தன் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று 8 ஆண்டுகள் போராடுகிறார் இந்த தந்தை. பொதுச் சமூகத்தின் மனசாட்சியில் மிக ஆழமாக வேரூன்றி  இருக்கும் மூடநம்பிக்கைகளும் ஆணாதிக்க மனநிலையும் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நீதி கிடைப்பது மட்டுமில்லை அவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கவும் செய்கின்றன என்பதே இந்த ஆவணப்படம் வலியுறுத்தும் உண்மை.

    மேலும் காண

    Source link

  • Oscar awards 2024 fans get disappointed over martin scorcese killers of the flower moon recieving zero award

    Oscar awards 2024 fans get disappointed over martin scorcese killers of the flower moon recieving zero award


    அமெரிக்கர்களை விமர்சித்த காரணத்தினால் இந்தப் படம் ஆஸ்கரில் புறந்தள்ளப் பட்டதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.
    கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Killers Of The Flower Moon)
    மார்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் லியோனார்டோ டிகார்ப்ரியோ, லிலி கிளாட்ஸ்டோன், ராபர்ட் டி நிரோ நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Killers Of The Flower Moon). அமெரிக்க பழங்குடி இன மக்களான ஓசேஜ் பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வந்த  நிலத்தில் இருந்த கச்சா எண்ணெய் வளத்திற்காகவும், அவர்களிடம் இருந்த செல்வத்தை அபகரிக்கும் முயற்சியாக அவர்கள் மர்மமான முறையில் கொல்லப் பட்டார்கள்.
    இந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகத்தை தழுவி இந்தப் படத்தை இயக்கியுள்ளார் மார்டின் ஸ்கார்செஸி. நேர்கோட்டிலான கதைசொல்லல், மிக நிதானமான காட்சிகள் என பார்வையாளர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஏற்படுத்தும் விதத்தில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
    சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த ஆடை வடிவமைப்பு  என மொத்தம் 10 பிரிவுகளின் கீழ் இப்படம் பரிந்துரைக்கப் பட்டது.
    இப்படத்தில் டிகாப்ரியோவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது ஆனால் இப்படத்தில் கதாநாயகியாக லிலி கிளாட்ஸ்டோன்  நடிப்பு நிச்சயம் அனைவரையும் வசீகரிக்கும் படி அமைந்திருந்தது. அமெரிக்க பழங்குடி இனத்தை பூர்வீகமாகக் கொண்ட லிலி கிளாட்ஸ்டோன் இப்படத்தில் ஒசேஜ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு அவர் பரிந்துரைக்கப் பட்டிருந்தார். இந்தப் பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் முதல் பழங்குடி இனப்பெண் லிலி கிளாட்ஸ்டோன்.
    ஏன் ஒரு விருது கூட வழங்கப்படவில்லை?
     
    இப்படியான நிலையில் இன்று ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநருக்கான விருது கிறிஸ்டோஃபர் நோலனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை எம்மா ஸ்டோன் வென்றுள்ளார். 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் படத்திற்கு ஒரு விருதுகூட வழங்கப் படாதது குறித்து ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

    It’s incredible the emotional range Lily Gladstone was able to communicate with just her eyes. She didn’t win an Oscar but her work in Killers of the Flower Moon is one for the history books pic.twitter.com/L0hYhKEsyF
    — Sam Stryker (@sbstryker) March 11, 2024

    குறிப்பாக லிலி கிளாட்ஸ்டோனுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருந்தால் வரலாற்றில் ஆஸ்கர் விருது வென்ற முதல் அமெரிக்க பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்ணாக அவர் இருந்திருப்பார். செவ்விந்திய பழங்குடிகளுக்கு அமெரிக்கர்கள் செய்த கொடூரங்களை விமர்சிக்கும் வகையில் இந்தப் படம் அமைந்ததால் இந்தப் படம் வேண்டுமென்றே புறந்தள்ளப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். முன்னதாக மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ஐரிஷ் மேன் படம் இதே நிலையை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    மேலும் காண

    Source link