கெஜ்ரிவால் விவகாரத்தில் தொடர் அழுத்தம்! அமெரிக்க, ஜெர்மனி நாடுகளுக்கு குடியரசு துணை தலைவர் பதிலடி!
<p>டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சி தலைர்கள் மிரட்டப்படுவதாக தொடர் புகார் எழுந்தது.</p> <h2><strong>அசாதாரண அரசியல் சூழல்:</strong></h2> <p>குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி அமைச்சராக பதவி வகித்து வந்த சத்யேந்திர ஜெயின், டெல்லி துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்…
