Taapsee Marriage: நடிகை டாப்ஸி பன்னு தனது நீண்டகால காதலரான மத்தியாஸ் போவை சமீபத்தில் உதய்பூரில் திருமணம் செய்து கொண்டார்.
இந்திய நடிகைகளில் மிகவும் போல்ட்டான ஒரு குணாதிசயம் கொண்ட நடிகைகளில் ஒருவர் டாப்ஸி. அவரின் திரைப்படங்கள் அதை வெளிப்படுத்தினாலும் நிஜ வாழ்க்கையிலும் மிகவும் தைரியமான ஒரு பெண்ணாக பலருக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார் டாப்ஸி. வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் பெற்றார் டாப்ஸி.
சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை என பல பிரிவுகளின் கீழ் 2011ம் ஆண்டுக்கான ஆறு தேசிய விருதுகளை கைப்பற்றியது. இப்படத்தின் ஒரு அங்கமாக இருந்த டாப்ஸிக்கு கோலிவுட் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக கதைக்கு மிகவும் பொருத்தமாக நடித்திருந்தார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2 , வந்தான் வென்றான், கேம் ஓவர் என ஏராளமான படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தாலும் தெலுங்கில் பிஸியாக நடித்து வந்த டாப்ஸி கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பேட்மிண்டன் பிரிமியர் லீக் ஆட்டத்தில் பொது பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரை சந்தித்திருக்கிறார். ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தவர்கள், பிறகு காதலிக்க தொடங்கினர். இதனை ரசிகர்களுக்கு தெரிவித்து, விரைவில் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி இருவருக்கும் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், 23ஆம் தேதி டாப்ஸி-மத்தியாஸ் போவுக்கு உதய்பூரில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் காண