சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மார்ச் 6) எபிசோடில் வீரசங்கிலி குணசேகரனுக்கு போன் செய்து தர்ஷினி தப்பித்தது பற்றியும் போலீஸ் அவர்களை விரட்டுவதை பற்றியும் சொல்கிறான். அதற்கு குணசேகரன் “நான் உனக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் தந்துவிடுகிறேன். போலீசிடம் இருந்து தப்பித்து விடு அப்படி முடியவில்லை என்றால் நான் சொல்வது போல அவர்களிடம் சொல்லு” என சொல்லி ஏதோ பிளான் சொல்கிறார்.
போலீஸ் ஸ்டேஷனில் ஜனனி:போலீசும் ரவுடிகள் அனைவரையும் கைது செய்து விசாரிப்பதற்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்கிறார்கள். ஜனனி எவ்வளவு சொல்லியும் ஆபீசர் கொன்றவை அதை கேட்பதாக இல்லை. அந்த இடத்தில் ஜனனியின் தங்கை வரவே அவர்களுடன் சேர்ந்து ஜனனி போலீஸ் ஸ்டேஷன் செல்கிறாள்.
தப்பித்து சென்ற தர்ஷினியை ஒரு ரவுடி பின் தொடர்ந்து செல்கிறான். ஒரு இடத்தில் ஓட முடியாமல் தர்ஷினி மயக்கம் போட்டு விழ, “நீ உயிருடன் இருந்தா தானே போலீஸ் கிட்ட போய் போட்டு கொடுப்ப” என சொல்லி அரிவாளால் அவளை வெட்ட போகிறான் அப்போது ஜீவானந்தம் அங்கே வந்து அந்த ரவுடியை தடுத்து விரட்டிவிடுகிறான். ஜீவானந்தத்தை பார்த்ததும் மயக்கம் போட்ட தர்ஷினியை தூக்கி கொண்டு ஜீவானந்தம் வருகிறார்.
வீரசங்கிலி:ஸ்டேஷனில் ரவுடிகள் அனைவரையும் கடுமையாக விசாரிக்கிறார்கள். அப்போது வீர சங்கிலி குணசேகரன் சொல்லி கொடுத்தது போல “எங்களுடைய பாஸ் ஜீவானந்தம் தான். அவர் சொத்துக்காக இந்த பொண்ணை கடத்தி வைச்சு எங்ககிட்ட சொல்லி பாதுகாக்க சொன்னார். அதுக்குள்ள திரும்பவும் வந்து எங்களுக்கு தெரியாம கூட்டிட்டு போயிட்டார்” என பழியை ஜீவானந்தம் மீது போடுகிறான் வீரசங்கிலி.ஜனனி ஸ்டேஷனுக்கு வந்து ஜீவானந்தம் ஆதரவாக பேச, ஆபீசர் “இப்படியே நீங்க பேசிட்டு இருந்தீங்க நான் உங்க மேலே ஆக்ஷன் எடுக்க வேண்டி இருக்கும்” என சொல்கிறார். அந்த நேரம் பார்த்து பாரஸ்ட் ஆபீசர் ஒருவர் வந்து சிசிடிவி புட்டேஜ் காட்டுகிறார். அதில் ஜீவானந்தம் தர்ஷினியை தூக்கி செல்லும் வீடியோ பதிவாகி உள்ளது. அதை பார்த்து ஜனனியும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஜனனியின் தங்கச்சி அஞ்சனாவும் ஜனனியுடன் போலீஸ் ஸ்டேஷன் போனதால் அங்கே நடக்கும் பிரச்சினை பற்றி போன் பண்ணி சக்தியிடம் சொல்கிறாள். “இங்க ஒரு பெரிய பிரச்சனையே ஆயிடுச்சு. அக்காவை இங்க போலீஸ் ஸ்டேஷன்ல வைச்சு இருக்காங்க” என அஞ்சனா சக்தியிடம் சொல்கிறாள்.
வீட்டில் விசாலாட்சி அம்மா ஆச்சியுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். “இந்த வீட்டு மருமகள்களை பத்தி எனக்கு நல்லா தெரியும். ஏதோ திட்டம் போட்டு தான் இப்படி செய்றாளுங்க” என்கிறார் விசாலாட்சி அம்மா.
போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற குணசேகரன் ஜனனியை பார்த்து “இவ தான் எல்லாத்துக்கும் மூல காரணம்” என்றதும் “நல்லா நடிக்குறீங்க” என ஜனனி நக்கலாக சொல்கிறாள். அவளை மிரட்டிய குணசேகரனிடம், இன்ஸ்பெக்டர் வீடியோ ஒன்றை காட்டுகிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.
மேலும் காண