சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) சமீப காலமாக சூடுபிடித்து மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் ட்விஸ்ட் வைப்பதில் எதிர்நீச்சல் தொடரை மிஞ்ச வேறு எந்த ஒரு சீரியலாலும் முடியாது. கடந்த வாரத்தில் ஜனனியின் அம்மா பார்வதியை நிர்க்கதியாக விட்டுவிட்டு நாச்சியப்பன் தன்னுடைய குடும்பத்துடன் போய் சேர்ந்து விட, பிரச்சினை பயங்கரமாக வெடித்தது. மறுபக்கம் தர்ஷினி ஜூடோ பயிற்சி போவதைப் பற்றி கரிகாலன் குணசேகரனிடம் வத்தி வைக்க, அவர் தர்ஷினியின் கோச்சுக்கு போன் செய்து தாறுமாறாகப் பேச, அவர் தர்ஷினிக்கு இனி பயிற்சி கொடுக்க முடியாது என சொல்லி விடுகிறார். தன்னுடைய கனவை குணசேகர அழித்துவிட்டதை நினைத்து மனம் நொந்துபோன தர்ஷினி, பள்ளியில் இருந்து சோகமாக சென்று கொண்டிருக்கும்போது, அவளை சில மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்று விடுகிறார்கள்.
க்தர்ஷினியை காணவில்லை என குணசேகரன் வீடே பதட்டத்தில் இருக்கிறது. ஈஸ்வரி மகளைக் காணவில்லை என கதறி துடிக்கிறாள். ஆனால் குணசேகரனோ ஈஸ்வரி தான் தர்ஷினியை யாரோடோ ஓட வைத்துவிட்டாள் என வாய்க்கு வந்தது போல பேசுகிறார். போலீஸ் வந்து ஜான்சியையும், கரிகாலனையும் தர்ஷினியின் கடத்தலில் சந்தேகப்பட்டு அழைத்து சென்று அடிதடியுடன் விசாரணை செய்கிறார்கள். குணசேகரன் வந்து அவர்களை ஜாமீனில் எடுக்கிறார். அப்போது குணசேகரன் மீண்டும் கரிகாலனிடம் தர்ஷினி உனக்கு தான் என சொல்ல டென்ஷனான கதிர் குணசேகரனை எதிர்த்து பேச அவர் அதிர்ச்சி அடைகிறார். இது தான் கடந்த வார எதிர்நீச்சலின் கதைக்களம்.அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. கரிகாலன் பேசியதைக் கேட்டு கடுப்பான கதிர் கரிகாலனை ஓங்கி கன்னத்தில் அறைந்து விடுகிறான். அதைப் பார்த்த குணசேகரன், “கரிகாலன் சொன்ன கருத்து தான் என்னுடையதும். அப்பா என்னையும் அடிப்பியா?” என ஆவேசத்துடன் கேட்க “ஒன்னு நீ மாறு இல்லனா என்ன மாற விடுயா” என கதிர் கோபத்தில் சொல்ல குணசேகரனுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது. அருகில் இருந்த ஞானத்திற்கும் கதிர் பேசியது அதிர்ச்சியாக தான் இருக்கிறது.
ஈஸ்வரியும் மற்ற பெண்களும் சேர்ந்து ஜீவானந்தம் வீட்டுக்குச் சென்று அவரின் உதவியுடன் தர்ஷினியை தேடலாம் என செல்கிறார்கள். ஆனால் ஜீவானந்தம் வெண்பாவை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்று இருப்பதாக ஃபர்ஹானா சொல்லி ஏதாவது பிரச்சினையா எனக் கேட்கிறாள். வீட்டுக்கு வந்த குணசேகரனிடம் அரிவாளுடன் ஆவேசமாக வந்த விசாலாட்சி அம்மா “பெரியவனே… போதும்யா இனி அவளுங்க நமக்கு தேவை இல்லை” என்கிறார். அதைப் பார்த்த குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
மீண்டும் ஜீவானந்தம் என்ட்ரி இருக்க போகிறது என்பது எதிர்நீச்சல் (Ethirneechal) ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதே போல கதிரின் இந்த திடீர் மாற்றங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. தர்ஷினியை யார் கடத்தியது என்பது ஒரே கேள்விக்குறியாக இருக்கிறது. இனி வரும் எபிசோடுகளில் அதற்கான விடை கிடைக்கும்.

























A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…