சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலின் நேற்றைய (பிப்ரவரி 8) எபிசோடில் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் ஈஸ்வரியும், மற்ற பெண்களுக்கும் தர்ஷினியை கடத்தி வைத்திருந்த இடத்தில் பார்த்ததைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
விசாரிக்க சென்ற போலீஸ் ஒருவர் வந்து அவர்கள் சொன்னதெல்லாம் உண்மை தான் என சொல்கிறார். கடைக்காரர் ஒருவர் வந்து இவர்கள் அனைவரும் வந்து விசாரித்து சென்றதை பற்றி சொல்கிறார். ஜீவானந்தம் அவரின் வக்கீலுக்கு போன் செய்து வர சொல்கிறார். இன்ஸ்பெக்டர் மோசமாக பேசியதால் ஜீவானந்தத்திற்கும் இன்ஸ்பெக்டருக்கும் இடையில் கைகலப்பு ஏற்படுகிறது.
சக்தியும், தர்ஷனும் பெண்கள் அனைவரும் எங்கே இருக்கிறார்கள் என தெரியாமல் இப்படி இருக்க முடியாது. போய் தேடி பார்க்கலாம் என கிளம்புகிறார்கள். ஆனால் ஆதிரை எங்கே இருக்கிறார்கள் என தெரியாமல் எங்கே போய் தேட போகிறீர்கள் என கேட்கிறாள். பின்னர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுகிறார்கள். ஆதிரை சென்று விசாலாட்சி அம்மாவை சாப்பிட கூப்பிடுகிறாள். ஆனால் அவளை திட்டி அனுப்பி விடுகிறார் விசாலாட்சி அம்மா.
போலீஸ் ஸ்டேஷனுக்கு குணசேகரன் வந்து ஆவேசப்பட்டு ஈஸ்வரியை திட்டுகிறார். ஜீவானந்தத்தை அனாவசியமாக பேசுகிறார். இன்ஸ்பெக்டரிடம் இவங்க எல்லாரும் தான் என்னோட பொண்ணை ஒளிச்சு வைச்சு இருக்காங்க. சொத்துக்காக இவளுங்கள கைக்குள்ள வைச்சுக்கிட்டு ஆடுறான் என சொல்கிறார் குணசேகரன். ஜீவானந்தத்தையும் ஈஸ்வரியையும் சேர்த்து வைத்து அவமான படுத்தி பேசுகிறார். ஜீவானந்தம் மனைவி இறந்ததற்கு குணசேகரன் தான் காரணம் என ஜனனி சொன்னதும் அவளை முறைக்கிறார் குணசேகரன்.அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
ப்ரோமோ:
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஈஸ்வரியையும் மற்ற பெண்களையும் பழிவாங்கியே தீர வேண்டும் என்ற வெறியில் இருக்கும் குணசேகரன் “என்னோட குடும்பம் என நினச்சு இவளுங்களை விட்டுடாதீங்க. இவளுங்க எல்லாரும் சேர்ந்து தான் இந்த வேலையை பண்ணியிருக்காளுங்க” என சொல்லி அனைவரின் மீதும் பழியை போடுகிறார் குணசேகரன். அவர் அநியாயமாக பேசுவதை கேட்டு நான்கு பெண்களும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
ஜீவானந்தம் மற்றும் பெண்கள் நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகிறார்கள். அங்கே வந்த ஜீவானந்தம் வக்கீல் “கோர்ட்டுக்கு கூட்டிட்டு வராங்க என்ற தகவல் வந்தது அதனால இங்க வந்தேன். என்ன ஆச்சு ஜீவானந்தம்” என கேட்க இன்ஸ்பெக்டர் வக்கீலை ஸ்டேஷனுக்கு வந்து பேச சொல்லி அனுப்பி வைத்து விடுகிறார்.
கோர்ட்டில் பெண்களை குற்றவாளி கூண்டில் நிற்க வைத்து கேள்வி கேட்கிறார்கள். எதிர் தரப்பு வழக்கறிஞர் வாதிக்கிறார். “காணாமல் போன அந்த பெண் குழந்தையின் நலனையும், அவள் தந்தையின் பரிதவிப்பையும் மனதில் கொண்டு போலீஸ் விசாரிக்க உத்தரவிட தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்” என கேட்க நீதிபதியும் அதற்கு கையெழுத்துப்போட்டு கொடுக்கிறார். அனைவரும் பதட்டத்தில் இருக்கிறார்கள்.
காணாமல் போன தர்ஷினியின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை. ஆனால் கதைக்களம் வேறு பக்கமாக திசை திரும்புகிறது. குணசேகரன் இவர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே தர்ஷினியை அடியாள் வைத்து கடத்தி இருப்பாரோ என சந்தேகம் எழுகிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட்.
மேலும் காண