"Stay within your limits; you might need my help": Actor Govinda warns his wife, Sunita.-உங்கள் வரம்புக்குள் இருங்கள், என் உதவி தேவைப்படலாம்: மனைவிக்கு சுனிதாவிற்கு நடிகர் கோவிந்தா எச்சரிக்கை

[ad_1]

பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கு வேறு ஒரு டிவி நடிகையுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி சுனிதா அஹுஜா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனை பொது இடங்களிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் சுனிதா தெரிவித்து வருகிறார். ஆனால் இக்குற்றச்சாட்டுக்களை கோவிந்தா பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. சமீபத்தில் கோவிந்தா தொடர்பு வைத்து இருப்பதாக கூறப்படும் டிவி நடிகையுடன் நடிகர் கோவிந்தா மும்பை விமான நிலையத்தில் தென்பட்டார். அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க இருக்கும் படத்தின் விளம்பரத்திற்காக ஒன்றாக சென்றதாக கோவிந்தா தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும் விமான நிலையத்தில் ஒன்றாக தென்பட்டது குறித்து கோவிந்தாவின் மனைவி சுனிதா கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

கோமலுடன் நடிகர் கோவிந்தா

கோமலுடன் நடிகர் கோவிந்தா

அதில் தனது மகளின் வயது அளவுக்கு இளமையாக இருக்கும் ஒரு பெண்ணுடன் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்றும், இதற்காக அவர் கொஞ்சம் வெட்கப்பட வேண்டும் என்றும் கூறினார். இதற்கு கோவிந்தா விளக்கம் அளித்துள்ளார்.

எனது ஆதரவு தேவைப்படலாம்

அவர் இது தொடர்பாக வெளியிட்ட வீடியோ பதிவில், சுனிதா தனது வேலையில் தலையிடுவதாகவும், தனது பொது இமேஜை சேதப்படுத்த முயன்றதாகவும், பொது கருத்துகளில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், அவர் தனது வரம்புகளுக்குள் இருக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் அவருக்கு மீண்டும் எனது ஆதரவு தேவைப்படலாம் என்றும் கூறினார். தான் செய்யும் வேலை வீட்டை விட்டு வெளியே நடப்பதாகக் கூறிய அவர், அந்த வேலையில் சுனிதா தலையிடுவதாகக் குற்றம் சாட்டினார்.

தாங்கள் ஒரு புதிய திரைப்படத்தை தொடங்கியுள்ளதாகக் கூறிய கோவிந்தா, மக்கள் மத்தியில் தமக்குள்ள நற்பெயரைக் கெடுக்கவும், அவப்பெயரை ஏற்படுத்தவும், தமது தொழில் பாதிக்கப்படும் சூழலை உருவாக்கவும் சுனிதா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். சுனிதாவிடம் திறமை, அதிகாரம், புகழ், மரியாதை மற்றும் செல்வம் ஆகியவை இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், அதற்காகக் குறைவான வசதி கொண்டவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல என்றும் இது பார்ப்பதற்கு நன்றாக இல்லை,” என்று அவர் கூறினார்.

[ad_2]

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Продолжительного пьянства организм переносит тяжелее с каждым последующим эпизодом. Развитие алкоголизма сопровождается нарушениями работы внутренних органов. Алкоголь и его метаболиты…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed