Siragadikka Aasai: சபையில் அசிங்கப்பட்ட விஜயா! நச் கேள்வி கேட்ட ஸ்ருதி – சிறகடிக்க ஆசையில் இன்று!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

ரவியை பாராட்டிய சீதா:

ரவி, முத்து, மனோஜ் ஆகியோர் கிட்சனில் இருக்கின்றனர். அப்போது அண்ணாமலை வந்து ”எனக்கு எதாவது வேலை குடுங்கப்பா” என கேட்கிறார். அவரை ரெஸ்டு எடுக்க சொல்கின்றனர். பின் ரவி கிச்சடி செய்து முடித்து அனைவருக்கும் சாப்பிட கொடுக்கிறார். கிச்சடி மிக சுவையாக இருப்பதாக பார்வதி, மீனா, சீதா ஆகியோர் பாராட்டுகின்றனர். சீதா ரவிக்கு கைக்கொடுத்து பாராட்டுகிறார்.

மனோஜ் கிச்சனுக்கு சென்று யாருக்கும் தெரியாமல் கிச்சடியை எடுக்கிறார். அதற்கு முன்பே அங்கு ரோகினி யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார். பின் இருவரும் சேர்ந்து சாப்பிடுகின்றனர். அப்போது முத்து உள்ளே வந்து விடுகிறார். முத்து எதுவும் சொல்லாமல் அவர்களின் அருகே குடிக்க தண்ணீரை வைத்து விட்டு செல்கிறார்.

டவுட்:

விஜா ஸ்ருதியை அழைத்து தனியே பேசுகிறார். ”இந்த சீதா இருக்காளே பொல்லாதவ இதுக்கு முன்னாடியே ரவியை கைக்குள்ள போட்டுக்கலாம்னு பார்த்தா நல்ல வேளை நீ பொண்டாட்டி ஆயிட்ட” என்கிறார். என்ன ஆண்டி இப்டி சொல்றிங்க அவங்க ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸ் தானே என்கிறார் ஸ்ருதி. ஸ்ருதி வெளியே வந்து ”எல்லோரும் இங்க பாருங்க ரவியும் ஸ்ருதியும் சிரிச்சி பேசினது உங்க யாருக்காவது தப்பா தெரிஞ்சதா?” என கேட்கிறார்.

நாங்க ஏம்மா அப்டி நினைக்கப் போறோம் என்று சொல்கின்றனர். எங்க சீதாவை பத்தி எங்களுக்குத் தெரியாதா அது தங்கமான பொண்ணு என சொல்கின்றனர். மீனா, ”ஸ்ருதி ஏன் இப்டி எல்லார் கிட்டயும் கேட்டுகிட்டு இருக்கிங்க” என்கிறார். ”அப்டி என்ன டவுட் உனக்கு, ”டவுட் எனக்கு இல்லபா உங்க அம்மாவுக்கு தான் அவங்க தான் சொன்னாங்க எல்லோரு முன்னாடியும் இவங்க இப்டி பேசிக்கிட்டா தப்பா நினைப்பாங்கனு” என்கிறார் ஸ்ருதி.

ஏன் டென்ஷன்?

”அடிப்பாவி போட்டுக் கொடுத்துட்டாளே” என விஜயா மனசுக்குள் நினைக்கின்றார். ரவி விஜயாவிடம் ”அம்மா இப்போ ஏன் இப்டி பேசினிங்க” என கேட்கிறார். ”இல்லடா நான் சாதாரணமா தான் சொன்னே” என்கிறார் விஜயா. மீனா, ”மாமா என் தங்கச்சிக்கு யார் கிட்ட எப்டி நடந்துக்கணும்னு எல்லாம் அவளுக்கு தெரியும் இஷ்டத்துக்கு யாரையும் பேச வேண்டாம்னு சொல்லுங்க” என அண்ணாமலையிடம் சொல்கிறார்.

ஸ்ருதி ”அச்சச்சோ மீன கொஞ்சம் கூலா இருங்க நீங்க ஏன் டென்ஷன் ஆகுறிங்க” என்கிறார். ”இப்போ அங்கிளோட ஃப்ரண்ட்ஸ் வீட்டுக்கு வரும் போது உங்க கிட்ட பேசினா அதை தப்பா எடுத்துக்க முடியுமா?”என ஸ்ருதி கேட்கிறார். ”அப்படி போடு விஜயாவுக்கு ஏத்த மருமக தான் வந்து இருக்கா” என பார்வதி மனசுக்குள் நினைக்கின்றார. மீனா கட்டும் மாலையை வண்டியில் ஏத்திய பின் அதை வண்டியோட தூக்கிடுங்க என சொல்லி சிட்டி ஆட்களை அனுப்புகிறார். இத்துடன் எபிசோட் நிறைவடைகிறது.

Source link