Seetha Raman: சீதாவை ஷாக்காக்கிய குடும்பம்: நான்ஸி காத்திருக்கும் புது செக்மேட்: சீதா ராமன் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா தன்னுடைய அம்மாவை வைத்து நான்சி தான் மகா என்று கண்டுபிடிக்க பிளான் போட அது பெயிலியர் ஆன நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது சீதா கீழே வர அவளைப் பார்த்து எல்லாரும் சிரிக்க, சீதா “இது நான்ஸி இல்ல, மகா தான். மகா பயன்படுத்திய மாத்திரை, இன்ஹேலர் எல்லாமே இவங்க பயன்படுத்துறாங்க” என்று சொல்ல, எல்லாரும் நம்ப மறுக்கின்றனர்.

பிறகு கார்டனுக்கு சேதுவை வர சொல்லி சீதா விஷயத்தை சொல்ல, சேதுவும் சிரித்துவிட்டு மகா குடும்பத்தில் எல்லாருக்கும் இந்த பிரச்சனை இருக்கு, மாகாவோட அக்காவும் இப்படி தான் இருந்தா என்று சொல்கிறார். இந்த நேரம் பார்த்து இங்கு வரும் நான்ஸி சீதாவுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு, அவளை ஹாஸ்பிடலுக்கு தான் கூட்டிட்டு போகணும்” என்று உள்ளே செல்கிறாள்.

பிறகு சீதா அப்செட்டில் இருக்க, ராம் ரூமுக்குள் வைத்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க, வீடு முழுக்க மைக்கை மறைத்து வைத்திருக்கும் நான்ஸி இவர்கள் பேசுவதைக்கேட்டு கொண்டிருக்கிறாள். அப்போது “இறந்தவங்க உடல் அடையாளம் கண்டுபிடிக்க முடியலைன்னா எப்படி இவங்க தானு கண்டுபிடிப்பீங்க?” என்று கேட்க, ராம் டி என் ஏ டெஸ்ட் வைத்து தான் என்று சொல்ல, சீதா அப்போது மகா உடம்புக்கும் நான்ஸிக்கும் DNA டெஸ்ட் எடுக்கலாம் என்று சொல்கிறாள். இதைக் கேட்டு நான்ஸி அதிர்ச்சி அடைகிறாள்.

இதனையடுத்து மகா போட்டோ முன்பு வந்து நிற்கும் நான்சி, “மகா செத்து போய்ட்டா இப்போ இந்த நான்சி தான்” என்று சொல்ல, மகா தான் நான்சியாக வந்திருக்கிறாள் என்பது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் இந்த வார சீதா ராமன் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

Source link