<p>சிறுத்தை புலி நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதால் பாதுகாப்பு கருதி இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறுத்தை புலியை பிடிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. </p>