ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. முதல் போட்டியிலேயே கேப்டன் ரோஹித்தின் நம்பிக்கையை நிலைநாட்டிய சர்பராஸ் கான் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தார்.

இதன் மூலம் டெஸ்ட் அறிமுகப் போட்டியில் அரைசதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை சர்பராஸ் கான் படைத்தார். சர்பராஸ் கானின் அறிமுகத்திற்கு பிறகு, ஐபிஎல்லில் சில அணிகள் அவரை தங்கள் அணியில் சேர்க்க போட்டாப்போட்டி போட்டு வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சர்பராஸ் கான் 66 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உதவியுடன் 62 ரன்கள் எடுத்தார். அதேபோல், இரண்டாவது இன்னிங்ஸிலும் சர்பராஸ் கான் 72 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் எடுத்தார்.

சர்பராஸ் கானை வாங்க கடும் பந்தயம்..?

ஊடக அறிக்கையின்படி, சர்பராஸ் கானுக்காக மூன்று ஐபிஎல் அணிகள் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்க தயாராகி உள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகியவை அடங்கும். இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக சர்பராஸ் கான் ஏற்கனவே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2024 ஏலத்தில் சர்பராஸ் கானை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. கடந்த சீசனில் சர்பராஸ் கான், டெல்லி அணிக்காக களமிறங்கினார். ஆனால், எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படவில்லை. அதனால், அந்த அணி அவரை விடுவித்தது.

இந்திய அணிக்காக அறிமுகமான பிறகு, சர்பராஸ் கானை வாங்க பல ஐபிஎல் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. சர்பராஸுக்காக எந்த தொகையையும் கொடுக்க அணிகள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில், ஏலத்தில் விற்பனையாகாமல் இருந்த சர்பராஸ் கான் எப்படி ஐபிஎல்-க்குள் வருவார் என்பது மிகப்பெரிய கேள்வி.

சர்பராஸ் கானை வாங்க துடிக்கும் கௌதம் காம்பீர்:

இந்தநிலையில், 26 வயதான சர்பராஸ் கானை ஒப்பந்தம் செய்ய கேகேஆர் அணியின் ஆலோசகர் கௌதம் காம்பீர் அந்த அணி நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் 2024 வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸால் விடுவிக்கப்பட்ட சர்ஃபராஸின் அடிப்படை விலை ரூ.20 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது, மூன்று உரிமையாளர்களும் சர்ஃபராஸை வாங்குவதற்கு போதுமான பணத்தை தங்கள் எஞ்சிய பணப்பையில் வைத்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.1 கோடியும், ஆர்சிபி அணி ரூ.2.85 கோடியும், கேகேஆர் அணி ரூ.1.35 கோடியுடன் உள்ளன.

சர்பராஸ் கான் ஐபிஎல்லில் எப்படி நுழைய முடியும்..?

ஏலம் முடிந்ததால், இப்போது வாங்க துடிக்கும் அணிகள் சர்பராஸ் கானை நேரடியாக அணியில் எடுக்க முடியாது. சர்ஃபராஸ் ஐபிஎல்லில் ஒரே ஒரு வழியில் மட்டுமே நுழைய முடியும், அதாவது லீக் தொடங்கும் முன்னரோ அல்லது தொடக்கத்திலோ ஏதேனும் ஒரு அணியின் வீரர் காயம் அடைந்தால், அந்த அணி அந்த வீரருக்கு மாற்றாக சர்பராஸை நியமிக்கும். இது தவிர இந்த சீசனில் இணைய சர்பராஸுக்கு வேறு வழியில்லை.

Previous Post
Next Post
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/