சன் டிவியில் ஒளிபரப்பான ‘அசத்தப்போவது யாரு’ நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திறமையை நிரூபித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ரோபோ ஷங்கர் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய மிமிக்ரி திறமையை வெளிப்படுத்தினார். அசத்தலாக ஸ்டாண்ட்-அப் காமெடி மூலம் பலரையும் வாய்விட்டு சிரிக்க வைத்தார். 
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை :
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நுழைய ஏராளமான வாய்ப்புகள் கிடைத்து வெள்ளித்திரையில் தன்னுடைய தனித்துமான  நகைச்சுவையால் ஆடியன்ஸை கவர்ந்தார். ஆரம்ப காலக்கட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் மட்டும் தோன்றிய ரோபோ சங்கர் ‘மாரி’ படத்திற்கு பிறகு படம் முழுக்க ட்ராவல் செய்யும் நடிகராக மாறி தனது திரை பயணத்தில் படு பிஸியாக வலம் வந்தார். குறுகிய காலகட்டத்திலேயே உச்சத்தை தொட்ட ரோபோ ஷங்கர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் நடுவராகவும் இருந்து வந்தார்.

உடல் நல பாதிப்பு :
மிகவும் பிஸியாக நடித்து வந்த ரோபோ ஷங்கர் கடந்த ஆண்டு உடல் நல குறைவு காரணமாக ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு உடல் மெலிந்து காணப்பட்டார். அவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு பின்னர் தொடர் சிகிச்சைக்கு பிறகு தற்போது சகஜ நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார். தற்போது படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். இதனால் மிகுந்த கவலையில் இருந்து ரோபோ ஷங்கர் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
ரோபோ ஷங்கர் மகள் :
நடிகர் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவும் பிகில், விருமன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா அவ்வப்போது போட்டோஸ், வீடியோஸ் போஸ்ட் செய்து வந்தார். 
இந்நிலையில் தான் இந்திரஜாவுக்கும் அவர்களின் குடும்ப உறவினர் மற்றும் முறை மாமனான கார்த்திக்கிற்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் சோசியல் மீடியாவில் பரவின.  அந்த தகவலை இருவீட்டாரும் உறுதி செய்தனர். இந்திரஜாவும் கார்த்திக்கும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஏராளமான புகைப்படங்களை தன்னுடைய  இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே பகிர்ந்துள்ளார் இந்திரஜா. 
இந்திரஜா நிச்சயதார்த்தம் :
இந்நிலையில் இந்திரஜாவுக்கும் கார்த்திக்குக்கும் இன்று சென்னையில் உள்ள அவர்களின் இல்லத்திலேயே நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ரோபோ ஷங்கர் மகளின் நிச்சயதார்த்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நக்கீரன் கோபால் மற்றும் அம்மா கிரியேஷன் சிவா ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. விரைவில் திருமணம் நடைபெறும் தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

மேலும் காண

Source link


Latest News

View All

  1. Завітайте на сайт https://xata.od.ua. Займаєтесь будівництвом, ремонтом або просто фермерством? Блог Українська Хата розповість актуальну інформацію про теми: будинок, затишок,…

  2. На сайті знайдете https://meatportal.com.ua знайдете: рецепти, поради домогосподаркам, кулінарні лайфхаки. Готуйте смачно, швидко і легко. Про сучасну кулінарію розповідає блог…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed