RJ Balaji: தப்பித்தவறி கூட அப்படி படம் எடுக்கக்கூடாது.. அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்த ஆர்.ஜே.பாலாஜி

ரொம்ப வருடமாக பெண் சுதந்திரம் பற்றி பேசி வருகிறேன். இதனால் ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் என்னை திட்டுகிறார்கள் என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

பண்பலை தொகுப்பாளராக இருந்த ஆர்.ஜே.பாலாஜி காமெடி நடிகர், கிரிக்கெட் வர்ணனையாளர், இயக்குநர், ஹீரோ என தனது திறமையால் அடுத்தடுத்த படிநிலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். கடந்தாண்டு வெளியான ரன் பேபி ரன் படத்துக்குப் பின் அவர் நடித்துள்ள “சிங்கப்பூர் சலூன்” படம் நாளை தியேட்டரில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு ப்ரோமோஷன் பணிகளில் ஆர்.ஜே.பாலாஜி ஈடுபட்டு வருகிறார்.இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், நடிகர் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அந்த நேர்காணலில் ஆர்.ஜே.பாலாஜியிடம் பெண் சுதந்திரம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் பெண்ணியம் பற்றி பேசினாலே ஆண்கள் மட்டுமல்லாது பெண்களே என்னை திட்டுகிறார்கள். நான் ரொம்ப வருடமாக பெண் சுதந்திரம் பற்றி பேசியுள்ளேன். என்னை அம்மா, பாட்டி வளர்த்தார்கள். கூட பிறந்தவர்கள் 3 தங்கச்சிகள். என் வீட்டில் வீட்டை பெருக்குவது, பாத்திரம் கழுவுவது, சமையல் என பெண்கள் செய்வது என குறிப்பிட்டப்பட்ட விஷயங்களை என் தாத்தா செய்வார். அதன்பிறகு என்னை செய்ய வைத்தார்கள். அதனால் சின்ன வயதில் இதெல்லாம்  ஆண்கள்,பெண்கள் செய்ய வேண்டிய வேலை என பிரித்து பார்த்ததில்லை.

இவ்வளவு ஏன்  நான் அனிமல் படத்தை தியேட்டரில் பார்க்கவே இல்லை. சினிமாவை சினிமாவாக பாருங்கள், அது ஒரு கலை என சொல்றாங்க. என்னை பொறுத்தவரை ஒரு மூடிய திரையரங்கினுள் கூடியிருக்கும் ஆயிரம் பேர், ‘ஒரு பொண்ணை ஒரு பையன் எட்டி உதைப்பதையும், அசிங்கமாக திட்டுவதையும் இல்லையென்றால் வன்கொடுமை செய்வதையோ கைதட்டி பார்க்கிறார்கள்’ என்பதை காண்பதே தவறாக தோன்றியதால் நான் அப்படத்தை பார்க்கவே இல்லை.

மேலும் நானும் படம் எடுக்கிறேன் என்கிறபோது இதுக்கெல்லாம் கைதட்டுகிறார்களா என நினைத்து தப்பித்தவறி கூட இப்படி ஒரு சீன் வைக்கலாம் என யோசித்து விடக்கூடாது. எட்டி உதைப்பது, கால் ஷூவை நாவால் துடைக்க சொல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றதாக சொன்னார்கள். எனக்கு என்ன வருத்தம் என்றால், இதுபோன்ற பெண்களுக்கு எதிரான விஷயங்களை பற்றி பெற்றோர்களிடம் பேச சரியான மீடியம் இல்லை” என தெரிவித்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிமல் படம்

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் அனிமல். ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், த்ரிப்தி டிம்ரி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். கடந்த ஆண்டு வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் அனிமல் படம் இடம் பிடித்துள்ளது. ஆனால் இப்படம் ஆணாதிக்கம் மற்றும் பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையில் கதையை கொண்டிருந்ததாக பிரபலங்கள் பலரும் சாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Actress Sukanya: விரைவில் அரசியலில் களமிறங்குகிறாரா நடிகை சுகன்யா? – அவரே சொன்ன பதில்!

Source link