அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்:

இந்திய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் நடந்து முடிந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடினார். அதிலும் ஃபினிஷிங் செய்வதில் வல்லவராக திகழ்கிறார். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஃபினிஷிங்கை வெளிப்படுத்திய இவர் சர்வதேச போட்டிகளிலும் அதேபோல் விளையாடி வருகிறார்.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் 9 பந்துகள் களத்தில் நின்று 2 பவுண்டரிகள் எடுத்து 16 ரன்கள் எடுத்தார். அதேபோல், இரண்டாவது போட்டியில் 9 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தார். கடைசி போட்டியில் 39 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் 6 சிக்சர்களை விளாசினார். அந்த போட்டியில் 69 ரன்களை குவித்தார். இந்நிலையில்தான் ரிங்கு சிங்கை இடது கை தோனி என்று அஸ்வின் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

இடது கை தோனி:

இது தொடர்பாக பேசிய அவர், “ரிங்கு சிங்கை இடது கை தோனி என்று அழைக்கலாம். தோனி மிகப் பெரிய ஆள். இவ்வளவு ஆரம்பத்திலே ரிங்கு சிங்கை தோனியுடன் ஒப்பிட முடியாது. ஆனால், அவரது அமைதியான ஆட்டத்தைப் பற்றி நான் பேசுகிறேன். அவர் தொடர்ந்து உத்தரபிரதேச அணிக்காக ஏரளமான ரன்களை குவித்து இந்திய அணிக்குள் நுழைந்துள்ளார். ரிங்கு சிங் பல ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பெஞ்சில் இருந்தார்.

அவர் கே.கே.ஆரில் இருந்தபோது, பயிற்சியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், த்ரோடவுன்களில் அடித்த அனைத்து பந்துகளையும் சேகரித்து, பந்து வீச்சாளரிடம் திருப்பிக் கொடுத்தார் என்று பலரும் என்னிடம் கூறுவார்கள். அப்போதிருந்து, அவர் நீண்ட காலமாக கே.கே.ஆருடன் இருந்தார். உ.பி அணிக்காக கடின உழைப்பில் ஈடுபட்டார். தந்திரமான சூழ்நிலையிலிருந்து இந்திய அணிக்கு வருவதற்கு அல்லது ஒரு இன்னிங்ஸை முடிக்க அவர் எப்போதும் தயாராக இருக்கிறார் என்பதைக் காட்டினார்.

அணி முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது சேசிங் செய்தாலும் அவரது அமைதி மாறாது. இன்னிங்ஸின் கடைசி கட்டத்தில் அவரது அமைதியானது அணிக்கு போனஸ்” என்று பேசியுள்ளார் அஸ்வின்.

இதனிடையே இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ரிங்கு சிங்குவிற்கு பிசிசிஐ வாய்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: IND vs ENG: "இந்திய மைதானத்தை குறை சொல்ல மாட்டோம்! ஏன் தெரியுமா?" இங்கிலாந்து துணை கேப்டன் விளக்கம்

மேலும் படிக்க: KL Rahul: இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார்! பிசிசிஐ அறிவிப்பு!

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
депозит с EasyPay букмейкъри Take a look at my webpage: прогнози за днес футбол (Hugh)
barbastro barcelona casas de apuestas Bonos
bookmaker med indbetalingsbonus My site; Bedste danske oddsudbyder (https://Www.Coelhorst.com/)
sports advice betting (Jermaine) link building
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

ஈரானுடன் வர்த்தகம் செய்த 4 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை ஏன்?|Iran Trade Shock: 4 Indian Firms Caught in US Sanctions Net | ACTPnews.com

ட்ரம்ப் வரிக்கு பதிலடி: அமெரிக்கப் பொருள்களுக்கு 50% வரை கனடா வரி|Canada Fires Back: $27.6B US Goods Face New Tariffs | ACTPnews.com

`பரந்தூர் விமான நிலையத்திற்குப் பதிலாக மீனம்பாக்கத்தில் 5-வது முனையம்'- எம்.பி சச்சிதானந்தம் யோசனை! | ACTPnews.com

புதுச்சேரி பட்ஜெட்: 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு `டேப்’; முதியவர்களுக்கு நடமாடும் மருத்துவ சேவை! | Puducherry CM Rangasamy presented a budget worth ₹14,300 crore for the 2026-2027 financial year | ACTPnews.com

சட்டமன்ற விவாதங்களில் ஆர்வம் காட்டாத உதயநிதி; அப்செட்டில் திமுக எம்.எல்.ஏக்கள்? |Udhayanidhi Shows Little Interest in Assembly Debates; DMK MLAs Upset? | ACTPnews.com

personas que viven de las apuestas [http://hunggargungfu.com/apuestas-a-primera-y-segunda-division-diferencias-clave/] deportivas futbol argentino