எப்போதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் இம்முறையும் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் ஒவ்வொரு நாளும் போட்டிக்கு போட்டி மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 25ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இரு அணிகளும் சிறப்பாக தங்களை தயார் செய்து வருகின்றது. இரு அணிகளுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இரு அணிகளும் ஐபிஎல் தொடங்கிய 2008ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகின்றன. ஆனால் இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.

நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சென்னை அணிக்கு எதிராக தோல்வியும், பஞ்சாப் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக வெற்றியும் பெற்றுள்ளது. இதனால் தனது சொந்த மைதானத்தில் களமிறங்கும் பெங்களூரு அணி முதல் வெற்றியைப் பெற போராடும் என எதிர்ப்பார்க்கலாம். அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது வெற்றிப் பயணத்தை தொடர தீவிரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

இரு அணிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பஞ்சாப் அணியின் கரங்கள் பந்து வீச்சிலும் பெங்களூரு அணியின் கரங்கள் பேட்டிங்கிலும் உயர்ந்துள்ளது. இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச முடிவு செய்வதே வெற்றி வாய்ப்பை அதிகரிப்பதற்கான வழி. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்பதால் முதலில் பேட்டிங் செய்யும் அணி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினால் இந்த போட்டி ஹை-ஸ்கோரிங் போட்டிகளில் ஒன்றாக அமைய அதிக வாய்ப்புள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளது. அதில், பஞ்சாப் அணி 17 போட்டிகளிலும், பெங்களூரு அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பெங்களூரு அணி அதிகபட்சமாக 226 ரன்களையும், குறைந்தபட்சமாக 84 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், பெங்களூரு அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 232 ரன்களையும், குறைந்தபட்சமாக 88 ரன்களையும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு ப்ளேயிங் லெவன்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், க்ளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், அல்சாரி ஜோசப், மயங்க் டாகர், கர்ன் ஷர்மா, முகமது சிராஜ்

இம்பேக்ட் ப்ளேயர்: தினேஷ் கார்த்திக் – யாஷ் தயாள்

பஞ்சாப் ப்ளேயிங் லெவன்: ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் ப்ரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர்

இம்பேக்ட் ப்ளேயர்: பிரப்சிம்ரன் சிங் – அர்ஷ்தீப் சிங்