இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடரில் ஆடி வருகின்றனர். ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் மோத உள்ளது.  ஜடேஜாவுக்கு நோ: இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு சுப்மன்கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரில் ஓய்வு பெற்றுள்ள ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ளனர். டி20 தொடரில் மட்டும் ஓய்வு பெற்றுள்ள ஜடேஜா, டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டிகளில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அணியில் இடம்பெறவில்லை.   ஓரங்கட்டப்படுகிறாரா ஜடேஜா? தலைசிறந்த ஆல்ரவுண்டரான ஜடேஜா டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடிக்காமல் போனது அனைவருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதன் மூலமாக ரவீந்திர ஜடேஜா ஓரங்கட்டப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 37 வயதான ஜடேஜா இதுவரை 89 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 133 இன்னிங்சில் பேட் செய்து 4 ஆயிரத்து 95 ரன்களை எடுத்துள்ளார்.  அதில் 6 சதங்கள், 28 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 175 ரன்களை விளாசியுள்ளார். 210 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 905 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 87 ரன்கள் எடுத்துள்ளார். 13 அரைசதங்கள் விளாசியுள்ளார்.  இந்திய சுழற்பந்துவீச்சின் முக்கிய தூணாக திகழும் ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் 348  விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 232 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போல ஜடேஜாவும் அடுத்தாண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பையில் ஆட ஆர்வத்துடன் உள்ளார்.  விரும்பாத பிசிசிஐ: ஆனால், அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் மற்றும் அணித்தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர் ஆகிய இருவரும் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா அணியில் இடம்பிடிப்பதை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இவர்களின் அழுத்தம் காரணமாகவே விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றதாகவும் கூறப்படுகிறது.  பும்ரா மற்றும் ஜடேஜா இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானாலும் பும்ரா மீண்டும் அணியில் இடம்பிடிப்பது உறுதியாகும். ஆனால், அடுத்தடுத்த தொடர்களில் ஜடேஜா இடம்பிடிப்பாரா? என்பது கேள்விக்குறியாகும். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணி: ஒருநாள் அணி: சுப்மன்கில் ( கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ்குமார், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், ப்ரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், ஹர்ஷ் துபே,  ப்ரின்ஸ் யாதவ். டெஸ்ட் அணி: சுப்மன் கில் ( கேப்டன்), ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ( துணை கேப்டன்), சாய் சுதர்சன், ரிஷப்பண்ட், தேவ்தத் படிக்கல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதர், குர்னூர் ப்ரார், ஹர்ஷ் துபே, துருவ் ஜுரல்  மேலும் படிக்கவும்

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Каталог нейросетей AI-Panda https://ai-panda.ru это более 1000 AI-инструментов в одном месте. Найди идеальную нейросеть для своих задач: генерация изображений, работа…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed