ப்ரோ கபடி லீக் சீசன் 10 இன் 75வது போட்டியில் ஜனவரி 16ஆம் தேதி (இன்று) ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் உள்விளையாட்டு மைதானத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 08:00 மணிக்கு தொடங்குகிறது.

இரு அணிகளும் கடந்த போட்டிகளில் எப்படி..?

கடந்த ஜனவரி 14 ம் தேதி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 31-36 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது. மறுபுறம், பாட்னா பைரேட்ஸ் அணி அதே ஜனவரி 14ம் தேதி தபாங் டெல்லி கேசி அணிக்கு எதிராக 39-39 என டை செய்தது.

பாட்னா பைரேட்ஸ் vs தமிழ் தலைவாஸ் அணிகள் இதுவரை நேருக்கு நேர்:

பிகேஎல் வரலாற்றில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் 13 முறை மோதியுள்ளன. அதில், தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான 7 வெற்றிகளுடன், பாட்னா பைரேட்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதேநேரத்தில், தமிழ் தலைவாஸ் 3 முறை வென்றுள்ளது. மேலும், 3 போட்டிகள் டையில் முடிந்துள்ளது.

இதற்கு முன்பு பாட்னா பைரேட்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகளுக்கு இடையேயான இதே ப்ரோ கபடி லீக் 10 சீசனில் இரு அணிகளும் மோதின. அதில், பாட்னா பைரேட்ஸ் அணி 46-33 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது,

5 வெற்றிகள், 6 தோல்விகள் மற்றும் ஒரு சமன் என்ற நிலையில் பாட்னா பைரேட்ஸ் 32 புள்ளிகளுடன் ப்ரோ கபடி லீக் சீசன்10 புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. மறுபுறம், தமிழ் தலைவாஸ் 3 போட்டிகளில் வென்று 9 இல் தோல்வியடைந்து 20 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் பதினொன்றாவது இடத்தில் உள்ளது.

பாட்னா பைரேட்ஸ் vs தமிழ் தலைவாஸ் அணியில் சிறந்த வீரர்கள்:

பாட்னா பைரேட்ஸ்

12 போட்டிகளில் 104 ரெய்டு புள்ளிகளை குவித்த சச்சின் இந்த சீசனில் பாட்னா பைரேட்ஸ் அணியில் சிறந்த ரைடராக திகழ்ந்து வருகிறார். இவர் டெல்லி தபாங் கே.சி அணிக்கு எதிரான தனது கடைசி ஆட்டத்தில் 10 ரெய்டு புள்ளிகளை குவித்தார்.

இதற்கிடையில், ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் 12 போட்டிகளில் 36 டிபென்ஸ் புள்ளிகளைப் பெற்றுள்ள கிரிஷன், பாட்னா பைரேட்ஸ் அணியில் டிபென்ஸ் பிரிவில் அணியை தோள்களில் சுமக்கிறார். மேலும், அங்கித் இதுவரை 31 புள்ளிகள் குவித்து அணியில் முதலிடத்தில் உள்ளார்.

தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணியை பொறுத்தவரை, நரேந்தர் அணியில் முக்கிய ரைடராக ஜொலிக்கிறார். இவர் 11 போட்டிகளில் 81 ரெய்டு புள்ளிகளை குவித்துள்ளார். இதில் 3 டூ ஆர் டை ரெய்டு புள்ளிகளும் அடங்கும். தமிழ் தலைவாஸ் அணிக்கு சாகர் 11 ஆட்டங்களில் 41 டிபென்ஸ் புள்ளிகளை பெற்று கொடுத்துள்ளார்.

இன்றைய போட்டியில் படைக்கவிருக்கும் மைல்கற்கள்:

பாட்னா பைரேட்ஸ் அணி வீரர் கிரிஷனுக்கு ப்ரோ கபடி லீக் வரலாற்றில் 100 டிபென்ஸ் புள்ளிகளை எட்ட இன்னும் 3 தடுப்பாட்ட புள்ளிகள் மட்டுமே தேவையாக உள்ளது. அதேபோல், தமிழ் தலைவாஸ் அணியைச் சேர்ந்த சாகர், ப்ரோ கபடி லீக் வரலாற்றில் 200 தடுப்பாட்டப் புள்ளிகளை எட்ட இன்னும் 2 டிபென்ஸ் புள்ளிகள் மட்டுமே தேவையாக உள்ளது.

ப்ரோ கபடி சீசன் 10ஐ நேரலையில் எங்கே பார்ப்பது?

ப்ரோ கபடி சீசன் 10 போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்பிலும் நேரடியாக கண்டு களிக்கலாம்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this on a slow Sunday and finding it perfectly suited to a slow Sunday read, and a quick stop…
Really liked the calm tone running through the post, no shouting and no urgency forced into the writing, and a…
Reading this on a difficult day was a small bright spot, and a stop at valeridgevendorhall extended that brightness, content…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

டெல்லியின் புதிய போராட்ட இடமான ராம்லீலா மைதானத்தில் இந்த ஆண்டு வெறும் 3 தேதிகள் மட்டுமே உள்ளன – விவரங்களை சரிபார்க்கவும் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

1.8 கோடி மதிப்பிலான தனிமைப்படுத்தப்பட்ட வார்டு திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து கேரள அரசு விசாரணை நடத்த உள்ளது இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘நீதித்துறை மீது முழுமையான நம்பிக்கை’: தலைமை நீதிபதி சூர்ய காந்த் மீதான கேரள கட்சியின் பதிவை காங்கிரஸ் நிராகரித்தது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘அன்புள்ள சூர்யா காந்த்…’: தலைமை நீதிபதியை ‘ராஜினாமா செய்ய வேண்டும்’ என காங்கிரஸ் கேரள பிரிவினரின் பதிவு பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா செய்திகள் | ACTPnews.com

மாலை செய்தி மடக்கு: ராகுல், பிரியங்கா தலைமையில் எஸ்சி பெரிய அணிவகுப்பு; தேர்தல் ஆணையம் மற்றும் பலவற்றிற்கு எதிராக வாக்களித்ததாகக் கூறப்படும் மனு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…